லிப்ஸ்டிக்கை தேர்வு செய்வதில் குழப்பமாக இருக்கிறதா..!

tips and trick on how to choose your lipstick and its uses

லிப்ஸ்டிக்கில் ஏராளமான நிறங்கள் உள்ளன அதை அனைத்தையும் நாம் பயன்படுத்துவது இயலாத காரியம். பொதுவாகவே லிப்ஸ்டிக்கை நம் நிறத்திற்கு ஏற்றார் போல் நாம் பயன்படுத்த வேண்டும். நாம் என்னதான் நம் முகத்திற்கு ஒப்பனைகள் செய்தாலும் லிப்ஸ்டிக் இல்லாமல் நம் ஒப்பனைகள் பூர்த்தியடையாது அதை தவிர்த்து நம் முகத்தை மிக அழகாக காண்பிப்பதில் முக்கிய பங்கு நமது உதடிற்க்கு இருக்கிறது அதற்கு ஏற்றார்போல் லிப்ஸ்டிக்கை நாம் அணிய வேண்டும்.

நமது சருமம் மற்றும் ஐந்து வகையான வர்ணங்களைக் கொண்டுள்ளது ஒவ்வொன்றுக்கும் ஏற்றார் போல் நாம் லிப்ஸ்டிக்கை தேர்வு செய்ய வேண்டும் அதில் பால் நிற வெள்ளை சருமம், வெள்ளை சருமம், நடுத்தர நிற சருமம், பழுப்பு நிற சருமம் மற்றும் கருமை நிற சருமம் ஆகும். பால் வெள்ளை மற்றும் வெள்ளை நிற சருமம் கொண்டவர்கள் பிங்க், கோரல், பீச், நியூடூ மற்றும் சிவப்பு நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யலாம். நடுத்தர நிற சருமம் கொண்டவர்கள் ரோஸ், பெர்ரி, செர்ரி சிவப்பு, மற்றும் மெவ் நிற லிப்ஸ்டிக்கை தேர்வு செய்யும் போது மிக அழகாகக் காட்சியளிப்பார்கள். பழுப்பு நிற சருமம் கொண்டவர்கள் கோரல், டீப் பிங்க், பிரைட் ரெட் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். ஆனால் பிரவுன் மற்றும் வைல்ட் போன்ற வண்ணங்களைத் தவிர்க்கலாம். கருமை நிறம் கொண்டவர்கள் பிளம், கேரமல், ஒயின் போன்ற வண்ணங்களைத் தேர்வு செய்யலாம். 

மேலும் படிக்க – இயற்கை அழகிற்கு பழங்களின் ஃபேஸ் மாஸ்க்..!

உங்கள் சருமம் வெப்ப நிலைக்கு ஏற்றார் போல் நீங்கள் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம் பொதுவாகவே மூன்றுவிதமான சருமங்கள் உள்ளது ஒன்று வெப்பமான சருமம் மற்றொன்று குளிர்ந்த சருமம் இதற்கு இடையில் இருப்பது தான் மூன்றாவது வகை சருமம் இப்படி இந்த சருமம் கொண்டவர்கள் இதற்க்கு ஏற்ற லிப்ஸ்டிக்கை பயன்படுத்த வேண்டும்.  

உங்கள் உதட்டின் வடிவத்திற்கு ஏற்றார் போல் நீங்கள் லிப்ஸ்டிக்கை பயன்படுத்துவது மிகவும் நல்லது ஏனென்றால் ஒருசிலருக்கு பெரிய உதடுகள் இருக்கும் மற்றவர்களுக்கு சிறிதாக இருக்கும். பெரிய உதடுகள் இருப்பவர்கள் எந்த நிறத்தை போட்டுக் கொண்டாலும் அது எல்லோருக்கும் தெரியும் அதுவே சிறிய உதடுகள் இருப்பவர்கள் தங்கள் நிறத்தை தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் தேவை. இவர்கள் வெண்மையாக இருக்கும் நிறங்களை தேர்வு செய்தால் நிச்சயம் உங்கள் முகத்தின் அழகை கூட்டி தருவது மட்டுமல்லாமல் உங்கள் உதடுகள் பெரிதாக காண்பிக்கும்.

உங்கள் உதட்டை மிக அழகாக காண்பிப்பதற்கு உதட்டின் அளவை கவனியுங்கள் மேல் உதடு, பெரிதாகவும் கீழ் உதடுகள் சிறிதாக இருந்தால் இரண்டு உதடுக்கு போடப்படும் அதே வெண்ணையை கலந்து பயன்படுத்துவது நல்லது. அதுவே கீழ் உதடுகள் பெரிதாக, மேல் உதடு சிறிதாக இருந்தால் இதை தலைகீழாக செய்ய வேண்டும். சிறிய உதடுகள் நன்கு தெரிவதற்கு நாம் பயன்படுத்தப்படும் நிறத்தில் வெண்மையை சேர்த்து பயன்படுத்துவது நல்லது அல்லது பெரிய உதடுகளில் சிறு கருமையை சேர்ப்பது உங்கள் உதட்டை சமநிலையில் காண்பிக்க உதவும்.

மேலும் படிக்க – சீப்பை பராமரித்து வைங்க எப்பவும் சோக்கா இருப்பீங்க

கண்கள் மற்றும் பற்களின் நிறத்திற்கு ஏற்றார் போல் நாம் உதடு வண்ணத்தை அணிய முடியும். உங்கள் கண்களை கூர்ந்து கவனியுங்கள் அது கருநிறமாக இருந்தாள் அதற்கு ஏற்றார் போல் லிப்ஸ்டிக்கை அணியுங்கள் அதுவே பிரவுன் மற்றும் மற்ற நிறங்களில் இருந்தால் அந்த நிறங்களில் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தினால் உங்கள் தோற்றம் முற்றிலும் மாறுபட உதவும்.

உதட்டில் சாயம் போடுவதற்கு முன்பு நீங்கள் உதட்டை சுற்றி ஒரு பென்சிலால் கோடுகளை போட்டுக்கொள்வது நல்லது இப்படி செய்வதன் மூலம் நீங்கள் நினைத்தபடி உங்கள் உதட்டின் தோற்றத்தை மாற்றி அமைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் லிப்ஸ்டிக் உதடை விட்டு வெளியே செல்லாமல் இந்த கோடுகள் உங்களுக்கு உதவும். இந்த வரிகள் அனைத்தையும் பின்தொடர்ந்து உங்களுக்கேற்ற ஒரு அழகிய லிப்ஸ்டிக்கை தேர்வு செய்து பயன்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன