கடவுள் மனம் கொண்ட விஜயகாந்த்..!

  • by
timely act of actor vijaykanth during this corona crisis is winning hearts

ஒருகாலத்தில் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய நடிகர்கள் என்றால் முதலில் சொல்வது ரஜினிகாந்த் அவருக்கு அடுத்தபடியாக இருந்தவர் தான் விஜயகாந்த். ஏராளமான வெற்றிப் படங்களைக் கொடுத்த இவரின் சண்டைக் காட்சிகளை பார்ப்பதற்காகவே ஏராளமான ரசிகர்கள் திரையரங்கிற்கு வந்த நாட்களும் உண்டு. இவர் படங்களில் நடிக்கும்போது தனது ரசிகர்களுக்கு ஏராளமான உதவிகள் செய்தவர், இதன் மூலமாக திரைப்பட உலகில் இருந்து விடைபெற்று அரசியலில் இறங்கினார்.

வெள்ளை மனம் கொண்டவர்

தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி அதன் தலைவராகவும் மற்றும் பொதுச் செயலாளராவும் இருந்தார். அதிலும் அக்காலத்தில் இவர் எதிர்க்கட்சியாகவும் திகழ்ந்தவர். இருப்பினும் இவரது உடல்நிலை கோளாறால் இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அரசியலில் முழு வீச்சில் இறங்க முடியாமல் தன்னால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வந்தார். நாட்டிற்கு எப்போதெல்லாம் நிவாரணம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் உதவியவர் தான் விஜயகாந்த்.

மேலும் படிக்க – சல்மான் கான் வெளியிட்ட பரபரப்பான செய்தி..!

அண்டல் அழகர் கல்லூரி

கடந்த வாரம் கொரோனா வைரஸினால் உயிரிழந்த மருத்துவரை அடக்கம் செய்ய விடாமல் மக்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இதனால் மனித நேயம் என்பது முழுமையாக அழிந்தது. மனிதர்களைக் காக்கும் பொறுப்பில் இருக்கும் மருத்துவரை அடக்கம் செய்ய அனுமதிக்காமல், சுற்றியுள்ள மக்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கினார்கள். இதை கேட்ட நடிகர் விஜயகாந்த் தனது வருத்தத்தை தெரிவித்து மற்றும் தன்னுடைய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் சிறு பகுதியை கொரோனா தொற்றால் உயிர் இறந்தவர்களை அடக்கம் செய்ய கொடுத்துள்ளார்.

பாராட்டுகள் குவிகிறது

மக்கள் நலனுக்காக ஏராளமான உதவிகளை செய்த இவரை மக்கள் மறந்துள்ளார்கள், இருந்தாலும் தேவையான சமயத்தில் இவர் இந்த உதவியை செய்து தன்னுடைய உண்மையான குணத்தை மீண்டும் வெளிக்காட்டி உள்ளார். தெலுங்கு நடிகர் “பவன் கல்யாண்” அவர்கள் விஜயகாந்த் செய்த இந்த செயலை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் விஜயகாந்த் செய்த செயலை பதிவிட்டுள்ளார். அதேபோல் தயாரிப்பாளர் “ரவீந்தர் சந்திரசேகர்” அவர்கள் விஜயகாந்த் செய்த செயலை பாராட்டி மிகப்பெரிய உரை ஒன்றை கூறியுள்ளார். அதேபோல் மனிதாபிமானம் உள்ள மனிதர்களும் மற்றும் விஜயகாந்தின் ரசிகர்களும் இந்த செயலை பாராட்டி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும் படிக்க – சீயான் விக்ரமுக்கு வாழ்த்து தெரிவித்த இயக்குனர் அஜய் ஞானமுத்து..!

வெள்ளித்திரையில் நுழைவதற்காக ஏராளமான கஷ்டங்களை கடந்து வந்த விஜயகாந்த் அவர்கள் தனது மக்களுக்காக எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளார். இறந்தவர்கள் நிம்மதியாக உறங்கும் இடத்தைக் கூட மக்கள் பங்குபோட்டு சண்டையிடுகிறார்கள், அந்த சமயத்தில் இறந்தவர்களுக்கு செய்யும் மரியாதை செய்து அவர்களை அடக்கம் செய்ய தனது சொந்த இடத்தை கொடுத்த தெய்வமாக விஜயகாந்த் பார்க்கப்படுகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன