உங்களின் இந்த செயல் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்துவிடும்

this things will spoil your strong love.. so be careful

ஓர் உண்மையான காதல் எந்த சூழ்நிலையிலும் சரிந்து விடாது அதுவே ஏன் காதலிக்கிறோம் என்று தெரியாமல் ஆண் பெண் இருவரின் காதல் உறவு எப்போது வேண்டுமானாலும் பிரிவு ஏற்படலாம் அதில் இந்த செயல் செய்யும் காதலர்களின் காதல் ஆழமான காதலாக இருந்தாலும் பிரியக் கூடும்.

அவமதிப்பது 

நீங்கள் இருவரும் எங்கேயாவது வெளியே சென்று இருந்தால் அப்போது அவர்களிடம் நேரத்தை செலவிடாமல் உங்கள் மொபைல் போனில் யாரிடமாவது உரையாடிய அல்லது அதில் ஏதாவது பார்த்துக்கொண்டே இருந்தால் நீங்கள் அவர்களை அவமதிப்பதற்க்கு சமமாகும் இதன் மூலம் உங்கள் காதல் சிதைந்த விட வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க – காதலர்களிடம் இருக்க வேண்டிய பொறுப்புணர்வு..!

தகாத உறவுகள் 

உங்கள் துணையை தவிர்த்து வேறு ஏதாவது உறவில் இருந்தீர்கள் என்றால் நிச்சயம் உங்கள் காதல் சரிந்துவிடும் உறவு என்பது காதல் மட்டுமில்லாமல் அதைத்தாண்டி ஏதாவது தகாத உறவு இருந்தால் நிச்சயம் உங்கள் காதல் சரிந்து விடும்

கண்காணிப்பது 

உங்கள் காதலன் அல்லது காதலியை நீங்கள் எப்போதும் கண்காணித்துக் கொண்டே இருந்தீர்கள் என்றால் அவர் நீங்கள் அவர் மேல் வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது என்ற எண்ணத்தினால் உங்கள் காதலை அவர் நம்புவதை தவிர்த்து உங்களை விட்டு விலகி விடுவார்கள்

குறைகளைக் கண்டு பிடிப்பது 

உங்கள் துணை எதை செய்தாலும் அதில் இருந்து ஏதாவது ஒரு குறையைக் கண்டுபிடித்து அதை பற்றி பேசுபவர்களின் காதல் எப்போதும் சிதைந்துவிடும் அவர்கள் எது செய்தாலும் அதில் இருக்கும் குற்றங்களை மட்டும் பார்க்காமல் அந்த செயலை பார்த்து பாராட்டினால் உங்கள் காதல் வலுவடையும்.

மேலும் படிக்க – ஐ லவ் யூ என்ற வார்த்தை உங்கள் வாழ்க்கைக்கு உதவும்..!

ஆதிக்கம் செய்பவர்கள் 

ஆண் பெண் இருவரும் சமம் என்ற எண்ணத்தை தவிர்த்து ஆணாதிக்கம் அல்லது பெண்ணாதிக்கம் உறவில் இருந்தால் நிச்சயம் உங்கள் உறவு சிதைந்து விடும் எனவே எதுவாக இருந்தாலும் ஆலோசித்து செய்யுங்கள் சுயநலமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது.

மேலும் படிக்க – கணவன்மனைவி நடுவில் காட்டாற்று வெள்ளமாக டிக்டாக்

ஒப்பிட்டுப் பேசுவது 

உங்கள் துணையின் செயலைப் பார்த்து மற்ற நபர்களை ஒப்பிட்டு பேசினீர்கள் என்றால் உங்கள் காதல் சிதைந்துவிடும் எல்லோருக்கும் ஒரு தனி திறமை மற்றும் தனி குணம் இருக்கும் ஆனால் உங்கள் துணை மட்டும் இப்படி ஏன் இல்லை அவரைப் போல் நடந்து கொள் என்று அவரிடம் அவ்வப்போது சண்டையிட்டீர்கள் என்றால் உங்கள் காதல் நிச்சயம் அழிந்துவிடும்.

4 thoughts on “உங்களின் இந்த செயல் எவ்வளவு வலிமையான காதலையும் சிதைத்துவிடும்”

  1. Pingback: things women don't like in men.. do you know about it?

  2. Pingback: you can blindly marry the women with these characteristics

  3. Pingback: do this to your life partner you will never get separated

  4. Pingback: நம் உடலைப் பற்றிய சுவாரஸ்யமான சில ரகசியங்கள்.!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன