இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

  • by
this temple will be opened only at night time in tamilnadu

இதுவரை நாம் எல்லா திருத்தலங்களும் காலையில் வழிபாடு தொடங்கி
மாலையில் வழிபாடு முடியும் என்றே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பரக்கலக்கோட்டை என்னும் கிராமத்தில்,
பொது ஆவுடையார் எனும் மிகவும் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று
உள்ளது. இங்கு கடவுளுக்கு பூஜை ஒவ்வொரு வாரத்தின் திங்கட்கிழமை
அன்று இரவிலேயே செய்யப்படுகிறது. இந்தக் கோவிலில் உள்ள ஓர்
ஆலமரத்தை சிவபெருமானாக நினைத்து வழிபட்டு வருகின்றனர்.
அதிசயங்கள் பல நிறைந்த இந்த கோவிலில் சிவராத்திரி போன்ற சிவனுக்கு
உகந்த நாட்களில் கூட பூஜை நடத்தப்படுவது இல்லை. பொங்கல் அன்று
மட்டும் காலையில் நடை திறக்கப்பட்டு மாலை வரை பூஜை
செய்யப்படுகிறது. மற்ற நாட்களில் இங்கு வரும் பக்தர்கள் பூட்டிய கதவுக்கு
பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர். குழந்தை பாக்கியம்
இல்லாதவர்கள் இந்த ஆலமரத்தில் தொட்டில் கட்டுவதன் மூலம் குழந்தை
பாக்கியம் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இங்கு இருக்கிறது.

இங்கு கார்த்திகை மாதத்தில் சோமவார என்ற விழா விமர்சையாக
கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்கு குடும்பத்தோடு பங்கேற்கும் மக்கள்,
இங்குள்ள சிவபெருமானுக்கு காணிக்கையாக, அவர்கள் விதைத்த நெல்,
பயிறு, தேங்காய் போன்றவற்றை காணிக்கையாக தருகின்றனர்.
இதுமட்டுமல்லாமல் ஆடு கோழி போன்றவையும் இங்கு கடவுளுக்கு பலி
கொடுக்கப்படுகிறது.

மேலும் படிக்க – வாழ்க்கையில் வெற்றியடைய சுக்கிர பரிகார மிக அவசியம்.!

இக்கோவிலில் தரிசனம் செய்ய அருகிலுள்ள மாவட்டங்களான தஞ்சாவூர்,
புதுக்கோட்டை, வேதாரண்யம் போன்ற ஊர்களில் இருந்து பக்தர்கள் வந்து
செல்கின்றனர்.

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று இரவு 10 மணிக்கு பூஜை தொடங்குகிறது.
பத்து மணியிலிருந்து 11: 30 மணி வரை சாமிக்கு அலங்காரமும்
அபிஷேகங்களும் நடைபெறுகிறது. 11 :30 மணிக்கு நடை திறக்கப்பட்டு,
அங்குள்ள மற்ற தெய்வங்களுக்கு இரவு 12 மணி வரை பூஜை நடைபெறுகிறது. 12 மணிஅளவில் தான் நாம் ஆலமர சிவபெருமானை தரிசிக்க முடியும். இந்த ஆலமரத்தை சிவபெருமானாக அலங்காரம் செய்து வழிபட்டு வருகின்றனர்.

பொங்கல் அன்று மட்டும் காலையில் திறக்கப்படும் இந்த கோவில் இரவு ஏழு
மணியளவில் நடை சாத்தப்படுகிறது. இந்த ஒரு நாள் மட்டுமே சூரிய ஒளி
கருவறைக்குள் விழுகிறது.

ஒவ்வொரு திங்கட் கிழமை அன்றும் 12 மணிக்கு பூஜை நடைபெற்ற பிறகு,
அங்கு தரிசனத்துக்கு வந்திருக்கும் முதியவர் ஒருவரை தேர்ந்தெடுத்து,
அவருக்கு சாமிக்கு பூஜை செய்த அபிஷேக பதார்த்தங்கள்
கொடுக்கப்படுகின்றன. அதன் பின்னரே வந்திருக்கும் மற்ற பக்தர்களுக்கு
சந்தனமும், பிரசாதங்களும் கொடுக்கப்படுகின்றன.

மேலும் படிக்க – திருமணத்தடையை நீக்கும் காலபைரவர் வழிபாடு..!

உருவ வழிபாடு, அருவுருவ வழிபாடு என்ற வழக்கமான வழிபாட்டுத்
தன்மை மாறி வித்தியாசமாக இந்த கோவில் காணப்படுகிறது. இங்கு
சிவபெருமானே முக்கிய கடவுளாக வணங்கப்படுகிறார். கோவிலின்
வெளிப்புறத்தில் மட்டும் ஒரு விநாயகர் சிலை காணப்படுகிறது.

இங்கு வினோதமான விளக்கமாறு காணிக்கை செலுத்தப்படுகிறது. முடி
உதிர்வு பிரச்சினையால் அவதிப்படுபவர்கள், தங்கள் கையினால் செய்த
தென்னை ஓலைகளை விளக்கமாறாக செய்து, இங்கு வந்து காணிக்கை
செலுத்தினால் முடி இப்பிரச்சினைகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்கும்
என்பது ஐதீகம்.

இந்த கோவில் தோன்றுவதற்கான வரலாற்று காரணமாக பார்த்தால், இரு
முனிவர்களுக்கு இடையே ஏற்பட்ட இப்பிரச்சனையை இந்த கோவில்
உருவாக காரணம் என்று கூறப்படுகிறது. இவர்கள் இல்லறம் சிறந்ததா துறவறம் சிறந்ததா என்று சுவாமி நடராஜர் அவர்களை அணுகி கேட்டபோது,
சாமி நடராஜர் இவர்களை இந்த தளத்தில் காத்திருக்க சொன்னதாக செய்தி.
அப்போது இவர்களுக்கு பதிலளித்த நடராஜப் பெருமான், இல்லறம் ஆயினும் துறவறம் ஆயினும் நல்லறமே சிறந்தது என்று நடு நிலை மாறாமல்
தீர்ப்பளித்த தாலே இக்கோவில் பொது ஆவுடையார் என்று
அழைக்கப்படுகிறது.

மேலும் படிக்க – சிவனடியார்க்கு செய்வது சிவனுக்கே செய்ததுபோல்

இந்தத் திருத்தலத்தில் சிவபெருமானிடம் மனமுவந்து வேண்டிக்கொள்ளும்
7அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும் என்பது நம்பிக்கை. முக்கியமாக
இதற்குத் தான் சிறந்தது என்று இந்த கோவிலை பிரித்துவிட முடியாது.

மூலஸ்தானத்தில் சுவாமிக்கு எதிரிலேயே கஜலக்ஷ்மி உருவ சிலை
வைக்கப்பட்டு இருக்கிறது. இங்கு சிவபெருமானுக்கு பூஜை நடைபெறும்
பொழுது கஜலட்சுமி அம்மைக்கும் பூஜை நடைபெறுகிறது.

பல மர்மங்களை உள்ளடக்கிய இந்த கோவிலை ஒருமுறையேனும் சென்று
தரிசித்து வாருங்கள். வித்தியாசமான ஒரு அனுபவத்தை நீங்கள் கண்டிப்பாக
உணர்வீர்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன