உடனடி உடல் எடையை குறைப்பதற்கு பசலைக்கீரை..!

this spinach diet helps you in reducing your weight

உடல் பருமன் என்பது மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கிறது. சாதாரண ஒருவருக்கும் உடல் பருமன் அடைந்தவருக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கின்றன. இவர்கள் தங்கள் வாழ்நாளில் செய்யும் ஒவ்வொரு செயலையும் மிகக்கடினமான முறையிலேயே செய்து முடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் உடல் எடை அதிகமாக இருப்பதனால் இவர்களுக்கு என்ற தனிப்பட்ட வாழ்க்கை அதிகமாக பாதிப்படைகிறது. இதிலிருந்து நிரந்தரமான தீர்வு காண்பதற்கு ஒரே வழி இவர்களின் உடல் எடையை குறைப்பதுதான், அந்த காரியத்தை மிக எளிதில் பசலைக்கீரை செய்கிறது.

அதிகமாக உணவு உட்கொள்வதனால் உடல் எடை எப்படி அதிகரிக்கிறதோ அதே வழியில் பசலைக் கீரை உணவை உட்கொண்டு நமது உடல் எடையை குறைக்க முடியும். இதை நாம் 5 நாட்கள் தொடர்ந்து செய்தால் அதிகப்படியான 3 கிலோ கொழுப்புகளை உங்கள் உடலிலிருந்து குறைக்கமுடியும். ஆனால் இதில் ஒரு பிரச்சினை இருக்கிறது, அது என்னவென்றால் இதை நாம் 5 நாட்கள் மட்டுமே தொடர்ந்து சாப்பிட வேண்டும் அதன் பிறகும் உட்கொள்வது நமது உடலுக்கு நல்லது இல்லை. அதேபோல் இதை வருடத்திற்கு இரண்டு முறை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் ஏனென்றால் நமது உடல் எடையை குறைப்பதற்காக பசலைக்கீரை உட்கொள்ளும் பொழுது ஒரு சில வகை செல்களின் ஆற்றல் இது அதிகரித்து நமது கொழுப்புகளை குறைக்கிறது. அந்த செல்களில் சுமையை அதிகரித்தால் அது உங்கள் உடல் ஆற்றலை குறைத்து விடும். எனவே இதை வருடத்திற்கு இரண்டு முறை அதுவும் ஐந்து நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – பெரும் சத்துக்கள் நிறைந்த பேரிச்சை சாப்பிடுங்க

முதல் நாளில் காலையில் ஒரு வேகவைத்த முட்டை மற்றும் இரண்டு தக்காளிகள், பசலைக்கீரையில் எலுமிச்சை சாறை கலந்து ஆலிவ் ஆயில் சேர்த்து செய்யப்பட்ட சாலட் மற்றும் இரண்டு தானிய பிரட்களை சாப்பிட வேண்டும். மதியம் என்னை சேர்க்கப்படாத சிக்கன் மற்றும் பசலைக் கீரை சூப் அருந்த வேண்டும். இரவில் பசலைக்கீரை மற்றும் சில காய்கறிகளை சேர்த்து சாலட் சாப்பிட வேண்டும்.

இரண்டாவது நாள் காலையில் ஓட்ஸ் உடன் யோகர்ட் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாத டீ சாப்பிட வேண்டும். மதியம் பசலைக்கீரை சூப் மட்டும் சாப்பிட வேண்டும். இரவில் பசலைக்கீரை மற்றும் ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட வேண்டும்.

மூன்றாவது நாள் காலையில் பசலைக்கீரை ஆம்லெட் மற்றும் ஒரு முழு துண்டு தானிய பிரட் சாப்பிட வேண்டும். மதியம் கொஞ்சம் சாதம் மீன் மற்றும் பசலைக் கீரை. இரவில் வேகவைத்த பசலைக்கீரை மற்றும் இரண்டு ஆரஞ்சு பழத் துண்டுகள்.

நான்காவது நாள் காலையில் பசலைக்கீரை ஆப்பிள் மற்றும் கேரட் ஜூஸ் சாப்பிடவேண்டும். மதியம் சிக்கன் அல்லது மீன் மற்றும் பசலைக் கீரை சாலட். இரவில் பசலைக் கீரை மசாலா சாதம்.

மேலும் படிக்க – இயற்கை பான இளநீர் குடிப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

ஐந்தாம் மற்றும் கடைசி நாள் காலையில் 2 வேக வைத்த முட்டை மற்றும் ஒரு கப் யோகர்ட் சாப்பிடவேண்டும். மதியம் சிக்கன் அல்லது மீன் மற்றும் பசலைக் கீரை. இரவில் விருப்பமான ஏதாவது பழச்சாறு அருந்தலாம்.

இதை அனைத்தும் சரியான நேரத்தில் சரியாக சாப்பிட்டால் நிச்சயம் 5 நாட்களில் 3 கிலோ வரை உங்கள் உடம்பில் இருக்கும் கொழுப்பை குறைத்து உங்களை மாற்றியமைக்கும். இதனுடன் சேர்ந்து நீங்கள் உடற்பயிற்சி மேற்கொண்டால் மேலும் உங்கள் எடையை குறைக்க முடியும்.

1 thought on “உடனடி உடல் எடையை குறைப்பதற்கு பசலைக்கீரை..!”

  1. Pingback: பெண்கள் ரகசியமாக செய்யும் சில அதிர்ச்சிகரமான செயல்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன