நைட் க்ரீம் செய்யும் அற்புதத்தை பாருங்கள்..!

  • by
this is what magic of night cream

நம்முடைய சருமம் பகல் முழுக்க ஏகப்பட்ட பாதிப்புகளை எதிர்கொள்கிறது. அதற்கு நாம் போதுமான ஓய்வு அளித்து அதன் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக பயன்படுத்துவதே நைட் கிரீம். இதை இரவு நேரங்களில் நாம் பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்தில் இழந்த அழகு மற்றும் புத்துணர்ச்சிகள் அனைத்தையும் மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம்.

நைட் க்ரீமின் பயன்கள்

தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு நாம் நைட் க்ரீமை பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் அகற்றிவிடும். சூரிய ஒளியால் ஏற்படும் நிற மாற்றத்தை சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது. நைட் க்ரீம் பயன்படுத்துவதனால் நமது சருமத்தில் இருக்கும் அழுச்சி மற்றும் காயங்களை அகற்ற முடியும்.

மேலும் படிக்க – பொலிவான முகம் பெற இந்த பேஷ்வாசை பயன்படுத்துங்க

நைட் கிரீம் தயாரிக்கும் முறை

நைட் க்ரீமை நாம் கடைகளில் வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே எளிமையான முறையில் நாம் நைட் கிரீமை தயார் செய்யலாம். அதற்கு தேவையான பொருட்கள் பாதாம், பால் மற்றும் எலுமிச்சை சாறு.

முதலில் நாம் பாதாமை நன்கு பொடியாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு பொடியாக்கப்பட்ட பாதாமில் சிறிதளவு காய்ச்சாத பாலை சேர்க்க வேண்டும். இந்த கலவையை சுமார் 30 நிமிடங்கள் வரை அப்படியே ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, எப்போது நம் சருமத்தில் அதை பயன்படுத்துகிறோமோ அப்போது அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து கொள்ள வேண்டும். பிறகு இரவு உறங்குவதற்கு முன்பாக அந்த கிரீமை நம் சருமம் முழுவதும் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின்பு காலையில் எழுந்து கழுவுவதன் மூலம் உங்கள் சருமம் இழந்த அனைத்தும் மீண்டும் பெறும்.

மேலும் படிக்க – பட்டுபோன்ற முடி பளப்பளக்க வேண்டுமா !

நைட் க்ரீம் ஏற்படுத்தும் மாற்றங்கள்

நைட் க்ரீம் பயன்படுத்துவதன் மூலம் நம் சருமம் இடுக்கில் இருக்கும் அனைத்து செல்களையும் அழித்து விடுகிறது. பாதாம் பயன்படுத்துவதன் மூலம் நம் சருமத்தில் ஸ்கிரப்பர் ஆக பயன்படுகிறது. அதே போல் பாலில் லாக்டோ அமிலங்கள் இருப்பதனால் நம் சருமத்தை மென்மையாக மாற்றுகிறது. எலுமிச்சைச் சாறில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் நம் சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவுகிறது. எனவே இந்த கலவையின் மூலமாக உங்கள் சருமம் நாளைடைவில் மிக மென்மையாகவும், பொலிவுடனும் மாறும்.

நம் அழகை அதிகரிப்பதற்காக தினமும் ஏராளமான கிரீம் மற்றும் ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். இவை அனைத்தையும் தவிர்த்து இரவில் இந்த நைட் கிரீமை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் அழகை மேம்படுத்துவதற்கான வேலைகள் பாதியாக குறைகிறது. எனவே ஆரோக்கியமாக வீட்டிலேயே செய்யப்படும் நைட் கிரீம் பயன்படுத்தி உங்கள் அழகை மேம்படுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன