பித்தப்பையில் இதுபோன்ற உணவுகளால் நோய் ஏற்படுகிறது.!

Gallbladder disease

உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காப்பது என்பது இக்காலத்தில் இயலாத காரியமாகவே இருக்கின்றன. ஒரு காலத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை பார்த்துக் கொள்கிறது. ஆனால் இப்போது இருக்கும் காலகட்டத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளால் தான் நமது உடல் ஆரோக்கியம் கெடுகிறது. இத்தகைய நமக்கு அறிந்தும் அறியாத இருக்கும் உடல் பாகங்கள் ஒவ்வொன்றும் அழிவதற்கு காரணம் நாம் எடுத்துக்கொள்ளும் உணவுகளும், அது ஏற்படுத்தும் வியாதிகளும் தான். பித்தப்பை என்பது நமது கல்லீரலுக்கும், சிறுகுடலுக்கும் இடையே பாலமாக செயல் படும்கிறது. செரிமான அமைப்பிற்கு மிக முக்கியமானதுதான் பித்தப்பை. கல்லீரல் உற்பத்தி செய்யப்படுவதை சேமிப்பதுதான் இதன் கடமை.

நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நமது பித்தப்பையை நாம் சரியாக பராமரித்து கொள்ள வேண்டும், இல்லை எனில் இதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. பித்தப்பையை சுற்றியும், பித்தப்பையில் ஏற்படும் பிரச்சினைகள் நமது உடல்நலத்தை பெரிய அளவில் பாதிக்கச் செய்கிறது. இதை தடுத்து மற்றும் உடல் உறுப்புகள் சேதம் அடையாமல் பார்த்துக் கொள்வதற்கான வழிகள் மற்றும் இதை பாதுகாக்க நாம் சரியான உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும், தவறான உணவுகளை தவிர்க்க வேண்டும்.

மேலும் படிக்க – குங்குமாதி தைலத்தின் பயன்பாடுகள்..!

நாம் எடுத்துக் கொள்ளும் தவறான உறவுகளினால் நமது பித்தப் பையில் நீர்க்கட்டிகள் உருவாகிறது, இதை பித்தப்பை கற்கள் என்பார்கள். உங்களுக்கு அடிவயிற்றில் அதிக வலியும், முதுகுக்குக் கீழ் வலி ஏற்பட்டால் பித்தப் பையில் ஏதோ பிரச்சினை உள்ளது என்பதற்கான அறிகுறி. இதை தவிர்த்து அடிக்கடி குமட்டல் மற்றும் வீக்கம் ஏற்பட்டால் உடனே மருத்துவரை சந்திப்பது நல்லது. இதை மருந்துகள் மூலமாக குணப்படுத்தலாம் ஆனால் நாளடைவில் இதை அறுவை சிகிச்சை மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும்.

உங்கள் பித்தப்பையில் வீக்கம் மற்றும் எரிச்சல் ஏற்பட்டு இருந்தால் அது பித்தப்பை அழற்சிக்கான அறிகுறி, இதை பித்தப்பையில் ஏற்படும் நோய்த்தொற்றுகள் என்பார்கள். இதுவும் நீங்கள் எடுத்துக் கொள்ளும் தவறான உணவுகளால் ஏற்படுகிறது.

பித்தப் பையில் புற்றுநோய் உண்டாகும், அதற்கும் அதிகமான அறிகுறிகள் இருக்கின்றன. உங்களின் அடிவயிறு மற்றும் முதுகுகள் பெரிய வலியை உண்டாக்கினால் உங்களுக்கு பித்தப்பை தொற்று நோய் இருப்பதற்கான அறிகுறி எனவே இதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற முடியும். இதுபோன்ற அறிகுறிகளை நீங்கள் உணர்ந்தால் உடனே மருத்துவரை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது.

மேலும் படிக்க – டிரெண்டாகும் வெல்லமும், பனை வெல்லத்தின் பயன்பாடு.!

ஒரு சில உணவுகளை நாம் தவிர்த்தாலே நமது உடல் ஆரோக்கியமாகவும் நமது பித்தப்பை ஆரோக்கியமாகவும் இருக்கும். உடலுக்கு ஏற்காத உணவுகள் என்றழைக்கப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பாஸ்ட் புட் உணவுகள் தான். இவைகளை நாம் எந்த அளவிற்கு தவிர்க்கிறோம் அந்த அளவிற்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

காப்பி மற்றும் இனிப்புகளை நாம் தவிர்ப்பது நல்லது. பித்தப்பை பிரச்சனை இருப்பவர்கள் இந்த உணவை முழுமையாக தவிர்க்க வேண்டும் இல்லையெனில் அது நாளடைவில் உங்கள் உடல் பிரச்சினையை அதிகரித்து உங்களை அறுவை சிகிச்சை வரை அழைத்துச் சென்று விடும். எனவே வாய்  மற்றும் வயிறு கட்டுப்பாடும் மிகவும் அவசியம்.

மேலும் படிக்க – சத்துக்களை தரும் மீன் எண்ணெய் அறிவோமா!

அதிகமான கொழுப்பு உடைய உணவுகளையும் நாம் தவிர்க்க வேண்டும். இவைகள் அனைத்தையும் நாம் சரியாக கடைபிடித்து நமது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க முடியும். ஒரு முறை உங்களின் உடல் உறுப்புகளில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் காலம் முழுக்க அதன் தாக்கம் இருந்து கொண்டே இருக்கும் எனவே சரியான உணவுகளை இளம் வயது முதல் எடுத்து முதுமையில் ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்யுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன