ஆண்கள் வேக்சிங் செய்வதற்கு முன்பு தெரிந்துகொள்ள வேண்டியவை.!

Things To Know Before Waxing Hair In Men's Chests

வேக்சிங் செய்வது என்பது நம் உடம்பில் இருக்கும் முடிகளை வேரோடு அகற்றுவது. இதை பெண்கள் தான் அதிகமாக செய்து வந்தார்கள். அவர்கள் பளப்பளப்பாக மெழுகைப் போல் இருப்பதற்காக கால்கள் மற்றும் கைகளில் முளைக்கும் முடிகளை அகற்றி வந்தார்கள். ஆனால் இது இப்போது ஆண்களுக்கு இடையே ட்ரெண்டிங் ஆகி உள்ளது. இவர்கள் தங்கள் மார்பில் இருக்கும் முடிகளை வேக்சிங் மூலமாக அகற்றி கொள்கிறார்கள்.

இப்படி முதன்முதலில் வேக்சிங் செய்பவர்களாக இருந்தால் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதை எப்படி சரியாக செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க – இயற்கையற்ற உணவுகளிலிருந்து இயற்கை உணவுக்கு மாறுவதினாள் நமக்கு ஏற்படும் நன்மைகள்..!

வேக்சிங் செய்வதற்கு முன்பு உங்கள் சருமத்தை பரிசோதிப்பது நல்லது. ஏனென்றால் ஒரு சிலருக்கு வாக்சிங் ஏற்றுக்கொள்ளாது. இதனால் இது செய்த பின்பு அவர்களுக்கு அசௌகரியம் மற்றும் அரிப்புகள் ஏற்படும் எனவே மருத்துவரிடம் சென்று உங்கள் சருமத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.

பேக்கிங் செய்வதற்கு முன்பு நீங்கள் குளித்துவிட்டு உங்கள் சருமத்திற்கு அண்டிசெப்டிக் ஜெல் மற்றும் பவுடரை பயன்படுத்துங்கள், இது உங்கள் சருமத்தில் ஏற்படும் அரிப்புகளை தவிர்க்கிறது. அது மட்டுமில்லாமல் உங்கள் மார்பில் முடிகள் நீளமாக இருந்தால் முதலில் அதை கத்தரிக்கோல் கொண்டு சிரிதாக வெட்டிக் கொள்ளுங்கள் பின்பு உங்கள் முடி வளரும் எதிர்திசையில் வேக்சிங் செய்யும் ஸ்ரிப்பை ஒட்டிக் கொள்ளுங்கள். பின்பு அதன் எதிர் திசையில் எடுத்தீர்கள் என்றால் வேக்சிங் செய்யும் போது ஏற்படும் வலிகள் குறையும்.

மேலும் படிக்க – ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.!

நீங்கள் மென்மையான சருமத்தை கொண்டுள்ளீர்கள் என்றால் வேக்சிங் செய்த பிறகு ஐஸ் கட்டிகளை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு ஏற்படுத்தும் வலிகளில் இருந்து காப்பாற்றுகிறது. வேக்சிங் செய்த பின்பு மறக்காமல் தளர்வான ஆடையை அணியுங்கள் இது விரைவில் உங்களை குணப்படுத்தும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன