நீங்கள் தனிமை மற்றும் மனச் சோர்வில் இருக்கும்போது செய்ய வேண்டியவை…!

  • by

தனிமை மற்றும் மனசோர்வு:

தனிமை மன சோர்வும் ஒருவனை கொஞ்சம் கொஞ்சமாக தின்னும் உள் அக்னி, தனிமை பற்றி பலரும் பலவிதமாக உபதேசம் செய்து கேட்டிருப்போம்; உண்மையில் தனிமை சுகமானதா என்றால் 95% உண்மையல்ல என்று தான் கூறவேண்டும். ஒரு மனிதன் மன சோர்வில் இருக்கும் போது அவன் தனிமையை நாடினால் அது மிகப்பெரும் பேராபத்தை விளைவிக்கும்.

செய்யவேண்டிய 10 செயல்கள்:

கீழுள்ள 10 செயல்களை நாம் மேற்கொண்டால் தனிமையோ, மன சோர்வு நம்மை விட்டு ஒடிவிடும்.

உங்களை பற்றிய எண்ணத்தை மாற்றுங்கள் எந்த வகையிலும், உங்களை நீங்களே குறை சொல்ல வேண்டாம். அது உங்களை மோசமாக உணரச்செய்யும். ஒரு செயலை தவறாக செய்துவிட்டால் அதற்கு உங்களை நீங்களே குற்றம் சாட்டுவது ஒருபோதும் சரியாகாது, செய்த தவறை மீண்டும் செய்யாமல் இருக்க வழியை தேடுங்கள். மனிதரல்லாத “நண்பரிடமிருந்து” நிவாரணம் தேடுங்கள் ஒருவரிடம் செல்லப் பிராணி இருந்தால் அது அவருக்கு மிகப்பெரும் ஆறுதல்.

மேலும் படிக்க -> வேலைச் சலிப்பிற்க்கான அறிகுறிகளை கண்டறிதல் மற்றும் வேலை தொடர்பான மன அழுத்தத்திலிருந்து மீளுதல்…!

அப்படி இல்லாதவர்கள் பிடித்தமான உணவு, பிடித்த புத்தகம் அல்லது சினிமா, இயற்கையை ரசித்தல் இவையெல்லாம் தனிமையின் வலியை எளிதாக்கும் விஷயங்கள். இவற்றிலிருந்து நாம் ஆறுதலைக் காணலாம்.

புதிய நண்பரை தேடுங்கள் எப்போதும் உங்களுக்கு ஆதரவளிக்கும் அல்லது உங்களை சிரிக்க வைக்கும் ஒருவரைப் நண்பராக்க முயலுங்கள், அந்த நபருக்கு அழைப்பு விடுங்கள் அல்லது அவர்களுக்கு சமூக வலை தளத்தில் செய்தியை அனுப்புங்கள்.

நீங்கள் இதைச் செய்வதற்கு யோசிக்கலாம் ஏனென்றால் நீங்கள் தனிமையாக இருக்கும்போது மற்றவர்களை அணுகுவது கடினம்.

நீங்கள் புதிதாக செய்யப்போகும் செயல் இந்த பூமியை முழுமையாக மாற்றும் படைப்பாக இருக்க தேவையில்லை. பலரும் செய்யும் செயலை சிறிது மாற்றத்துடன் செய்திடுங்கள், தனிமையில் கூட உங்களுள் உள்ள விருப்பத்தை கண்டறியுங்கள், அது ஓவியமாக இருக்கலாம், இசையாக இருக்கலாம்.

மேலும் படிக்க -> மன அழுத்தமாக உணர்கிறீர்களா? உங்கள் மன அழுத்தத்தை கையாள உங்களுக்கு உதவ நாங்கள் உள்ளோம்…!

தேவைப் படுபவருக்கு உதவுங்கள் மற்றவர்களுக்கு உதவுவது தனிமையிலிருந்து மீள உதவிசெய்கிறது. ஏனெனில் இது நம்மை சுய கவனம் செலுத்த செய்யும்.

உதவி என்பது ஒரு வயதான பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாம் அல்லது ஒரு சமூக ஊடக தளத்தில் யாராவது உண்மையான உதவி கேட்டால் நீங்கள் செய்யலாம்

தனிமையாக இருக்கும் மற்றவர்களையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அவர்களுக்கு கனிவான பதில்களை கொடுக்க மறவாதீர்கள்

தனிமையில் இருக்கும்போது பிறர் உங்களை தவறாக நடத்த முற்படுகிறார் என்றால் அவரிடமிருந்து விலகிடுங்கள், மேலும் அனைவரிடமும் கனிவுடன் அன்பாக இருங்கள் இவை உங்களை தனிமையிலிருந்து மீண்டுவர செய்யலாம்.

நீங்கள் விரும்பும் ஒரு இடத்தைக் மனதில் காட்சிப் படுத்தவும் இயற்கை ரம்மியமான பகுதி, கடற்கரை, விளையாட்டு நிகழ்வு, மேலும் உங்களால் போக முயன்று சந்தர்ப்ப சூழலால் செல்ல முடியாத இடம் என இவற்றை மனதில் அடிக்கடி நினைத்து பாருங்கள், மேலும் நீங்கள் முன்னர் மகிழ்ச்சியாக இருந்தபோது இடத்தை நினைத்துப் பார்த்தல், போன்ற செயல்களால் உங்கள் மனம் மாறும்.

தனிமையை ஒரு பழைய நண்பராகக் கருதுங்கள் தனிமையை ஒரு அழையா விருந்தாளியாக, அழையா நண்பராக கருதி ஒதுக்குங்கள்.

இவ்வாறு செய்வதால் உங்கள் மனம் ஒரு புதிய பாதையை தேட முற்படும். முதலில் மாற்றம் உங்களிலிருந்து தோன்றட்டும்.

மேலும் படிக்க -> ஊரடங்கின் போது தனிமை மற்றும் மேலதிக சிந்தனையை சமாளித்தல்…!

வாழ்க்கை எப்போதும் வேடிக்கையாக இருக்காது என்பதையும் நாளை ஒரு புதிய நாள் என்பதை நினைவு கூறுங்கள் யாரும் எப்போதுமே தங்கள் வெற்றியை தானாக பெறுவதில்லை, பிறரின் துணை நிச்சயம் தேவைப்படும் முன்னர் பெற்ற வெற்றியை பிறருடனும் பகிர்ந்து கொள்ளுங்கள், மகிச்சியாக இருந்த நாட்களை என்னி புத்துயிர் பெறுங்கள், நீண்ட நாள் நண்பருக்கு தொலைபேசி மூலம் அழையுங்கள், மனதில் உள்ளதை கொட்டி பேசிவிடுங்கள்.

பிடித்த பாடலை கேளுங்கள்/பாடி மகிழுங்கள் நீங்கள் பாடும் போது தனிமையை உணர இயலாது.

தனியாகப் பாடுங்கள் அல்லது நீங்கள் பிறருடன் பாடும் போது உங்களுக்கு பிடித்த பாடலை சத்தமாக பாடுங்கள், தனிமையை மாற்றும் வல்லமை பாடலுக்கும் உண்டு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன