புண்ணியத்தை அதிகரிக்கும் செயல்கள்..!

  • by
things that will make good returns to you

கொரோனா வைரஸினால் பாதிப்படைந்தவர்களைவிட பசியும் பட்டினியால் பாதிப்டைந்தவர்களின் எண்ணிக்கையே இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் அரசாங்க ஊழியர்கள் செயல்பட்டு வருகிறார்கள். இச்சமயத்தில் பசியினால் வாடும் ஏழை எளிய மக்களின் கஷ்டங்களை போக்கும் பொறுப்பு ஒவ்வொரு மக்களிடமும் இருக்கிறது. எனவே இந்த ஊரடங்கு நிறைவடையும் வரை, இல்லாதவர்களுக்கு உதவி அளித்து புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

சொந்த மாநிலத்தில் வேலை இல்லாத காரணத்தினால் வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்று தங்கள் வாழ்க்கையை கழித்து வருபவர்களுக்கு இடியாக விழுந்தது இந்த ஊரடங்கு. இதனால் தங்கள் வேலை முடிந்து, ஊதியம் ஏதும் வராமல் பசியும் பட்டினியுமாக வீடு வாசல் இல்லாமல் இதுபோன்ற மக்கள் தவித்து வருகிறார்கள். தங்கள் மாநிலத்திற்கு செல்ல முடியாத சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் இவர்களுக்கு அரசாங்கம் ஒரு சில உதவிகளை அளித்து வருகிறது.

மேலும் படிக்க – கொரானா போராட்டத்தில் நாட்டின் பெண்கள்!

மக்கள் உதவி

என்னதான் அரசாங்கம் இவர்களுக்கு உதவிகளை அளித்தாலும் அது அவர்களுக்குப் போதுமானதாக இருக்காது. எனவே உதவி செய்யும் மனப்பான்மை கொண்ட மக்கள் அல்லது செல்வம் அதிகமாக இருக்கும் வசதி படைத்தவர்கள் பசியால் வாடும் மக்களுக்கு உதவிகளை அளிக்க வேண்டும். தமிழகத்தில் பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான தொழிலாளர்கள் கட்டுமானப் பணிகளை செய்து வருகிறார்கள். திடீரென்று இவர்கள் வேலை பறிபோனதினாள் ஒரு வேளை உணவுக்கு கஷ்டப்பட்டு தங்கள் வாழ்க்கையை கடக்கிறார்கள். இதுபோல் கஷ்டப்படும் மக்களுக்கு சமூக சேவை செய்பவர்கள் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். இருந்தும் ஊரடங்கு மேலும் சில வாரங்கள் நீடிக்கப்படுவதினால் இந்த உதவிகளுக்கு மேலும் நன்கொடை தேவைப்படுகிறது.

பொருளுதவி

ஒருசிலர் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு நிவாரண தொகையை அளித்து வருகிறார்கள், அப்படி செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும். இதன் மூலமாக கஷ்டத்தில் வாழும் மக்கள் பயன் பெறுவார்கள். இல்லையெனில் உங்களால் முடிந்த ஏதேனும் பொருள் உதவிகளையும் செய்து அவர்கள் பசியை போக்கலாம்.

மேலும் படிக்க – மகாபாரதம் – பகுதி 3 – பாண்டவர்கள்..!

ஊருக்கு செல்ல தவிப்பு

உங்கள் வீட்டு அருகே ஏதேனும் வெளிமாநிலத்தவர்கள் தங்கி இருந்தால் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இவர்கள் தங்கள் ஊருக்கு செல்ல முடியாத சூழ்நிலையில், இருக்கும் பொருட்களை வைத்து தங்கள் நாட்களை கழித்து விடுவார்கள். எனவே உங்கள் வீட்டில் சமைக்கும் உணவுகள் அல்லது தேவைக்கு அதிகமாக இருக்கும் உணவுப் பொருட்களை இவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். இதுபோல் வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருபவர்கள் உதவிகளை கேட்பதற்கு தயங்குவார்கள், எனவே இவர்களைக் கண்டறிந்து உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

ஆபத்தான சூழல்களில் உதவி செய்பவர்களை மனிதாபிமானம் மிக்க மனிதர்களாக பார்க்க படுவார்கள். எனவே உங்களால் உதவி செய்ய முடியும் என்ற நிலையில் இருந்தால் நிச்சயம் இது போல் தவிப்பவர்களுக்கு உதவி செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் மனம் நிறைவது மட்டுமல்லாமல் உங்கள் செயலை பார்த்து உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்களை மதிப்பார்கள். எனவே உங்கள் வாழ்க்கையில் புண்ணியத்தை அதிகரிக்க வேண்டுமென்றால் கோவில்களில் காணிக்கை செலுத்துவதை போல் கஷ்டத்தில் தவிக்கும் மக்களுக்கு காணிக்கைகளை செலுத்துங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன