பொதுத்தேர்வு எழுதும்  மாணவர்கள் தேர்வு அறையில்  செய்ய வேண்டிய சில விஷயங்கள்.!

  • by
things students should do during public exams

அனைவரது வாழ்வின் தலையெழுத்தையே மற்றுமொரு விஷயம்தான் இந்த பிளஸ் டூ பொதுத்தேர்வு. இதை எவ்வாறு பதட்டமும் பயமும் இன்றி மேற்கொள்ளலாம் என்பதை விளக்கும் பதிவுதான் இது.

புதிதாக எதுவும் படிக்க வேண்டாம்

ஓராண்டில் படிக்க முடியாததை கண்டிப்பாக கடைசி அந்த ஒரு மணி நேரத்தில் படித்து விடமுடியாது. தேர்வுக்கு முன்பு இருக்கும் அந்த நேரத்தில் எதையும் புதிதாக  படிக்கும்போது தேவையில்லாத பதட்டம் ஏற்படும். நீங்கள் தயாரித்த குறிப்பு, எழுதப்பட்ட காட்சிகளை கண்டிப்பாக ஒரு முறையாவது பார்த்துக்கொள்ளுங்கள். புதிதாக படிப்பது பழையவற்றை நினைவில் இருந்து கொஞ்சம் மறக்கச் செய்யும்.

மேலும் படிக்க – நம் வாழ்க்கையின் குறிக்கோள்கள் என்ன..!

அவசரமில்லாமல் கிளம்புங்கள் 

வீட்டிலிருந்து வழக்கமாக கிளம்பும் நேரத்திற்கு முன் கூட்டியே புறப்பட்டு விடுங்கள். சீக்கிரமாக தேர்வு அறையை அடைவது பதற்றத்தை தவிர்க்கும்.

தேர்வு அறையில் நுழைந்தவுடன்

தேர்வறையில் நுழைந்தவுடனே தேர்வின் முடிவைப் பற்றிய எண்ணங்களை தவிர்க்க வேண்டும். இந்த எண்ணமே நம் மனதில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தும். தேர்வு அறையில் வினாத்தாளை வாங்கியவுடன் அதை பார்ப்பதற்கு முன்பு 5 முதல் 10 முறை ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். இவ்வாறு செய்தால் பயத்தையும் பதற்றத்தையும் வென்று தெளிவான மனநிலையில் தேர்வு எதிர்கொள்ளலாம்.

எழுதத் தொடங்குவதற்கு முன்பு 

பலரும் செய்யும் மிக முக்கிய தவறு வினாக்களை தவறாகப் புரிந்து கொண்டு எழுதத் தொடங்குவது தான். இதற்கு பதற்றம், கவனக்குறைவு காரணமாகும். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டபின் பேனாவை எடுக்காமல் வினாத்தாளை எடுங்கள்.உங்கள் கேள்விகளை ஒன்றுக்கு இரண்டு முறை படியுங்கள். கேள்வியை முதலில் சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதன் பின்னரே எழுதுவதற்கு தொடங்குங்கள்.

மனதுக்குள் நினைவுகூர்தல் 

எழுதுவதற்கு முன்பு அதை மனதுக்குள் லேசாக நினைத்துப்பாருங்கள். என்ன எழுதுவது? எப்படி எழுதுவது? என்பதை பற்றிய சரியான புரிதல் இருந்தால் விடை தெளிவாக இருப்பதுடன் நேரத்தையும் இது மிச்சப்படுத்தும்.

மேலும் படிக்க – ஒழுங்காக அமைக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்வது எப்படி..!

உங்களுக்கான திட்டத்தை செயல்படுத்துங்கள்

எந்த வரிசையில் தேர்வு எழுத வேண்டும் என்று அனைவருக்கும் ஒரு திட்ட இருக்கும். ஒரு சிலர் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தரும் வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவார்கள். சிலர் குறைந்த மதிப்பெண்கள் வினாக்களுக்கு முதலில் விடை எழுதுவார்கள். அப்படி எழுதும்போது தெரியாத வினாக்கள் வந்தால் தேவையற்ற அழுத்தம், பதற்றம் ஏற்படும். எனவே நன்கு தெரிந்த கேள்விகளுக்கான விடையை முதலில் எழுதுங்கள். அது  துணை கொண்டு விடை தெரியாத கேள்விகளுக்கு நம்பிக்கையுடன் விடையளிக்க முடியும்.

எழுதும்போது பாதியில் மறந்துவிட்டதா?

தெரியாத கேள்வி இடம்பெற்றாலும், தெரிந்த பதிலை எழுதும்போது பாதியில் மறந்து போனாலும் ஒருவிதமான பதற்றமும் ,பயமும் ஏற்படலாம். இந்தச் சூழ்நிலையில் கேள்வித்தாள் பதில் எழுதும் தாளை மூடி வையுங்கள். ஆழமாக மூச்சை இழுத்து விடுங்கள். பின் உங்களுக்கு நன்கு தெரிந்த வேறு கேள்விக்கு விடை எழுதத் தொடங்குங்கள். பாதியில் நின்ற பதில் இறுதியில் நிறைவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் அந்தப் பதட்டத்தில் தெரிந்தும் கூட  மறந்து போக வாய்ப்பிருக்கிறது.

ஊகித்து எழுதலாம் 

எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதுங்கள். விடை தெரியாத கேள்வி என்றாலும் விடையை ஊகித்து எழுதுங்கள். எழுதாமல் வெறுமையாக விடுவதை விட ஏதாவது ஒன்று எழுதுவது மேல்.

இடைவெளி அவசியம் 

ஒவ்வொரு விடைக்கும் இடையில் மிகப்பெரிய இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள். 30 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் அருந்தலாம். இவ்வாறு செய்வது தேர்வு நேரம் முழுவதும் களைப்படையாமல் புத்துணர்வுடன் வைத்துக் கொள்ள உதவும்.

மேலும் படிக்க – கடினமான சூழ்நிலையை அமைதியாக எதிர்கொள்வது எப்படி?

பயத்தை தவிர்ப்பீர் 

ஆண்டு முழுவதும் கஷ்டப்பட்டு படிப்பதுடன் ஒப்பிடாமல் கண்டிப்பாக மூன்று மணி நேர தேர்வு என்பது எளிதானது. ஓராண்டு படிப்பு, 3 மணி நேரம் தேர்வு உங்களுக்கு பயம் அளிப்பதில்லை. தேர்வுக்கு பின்வரும் மதிப்பெண்களும் அவற்றை சார்ந்த மதிப்பீடும் தான் உங்களுக்கு அச்சத்தை ஏற்படுகிறது. இந்த அச்சம் கண்டிப்பாக தேவை இல்லை. புற மதிப்பீட்டை புறந்தள்ளி அடுத்த தேர்வுக்கு தயாராகுங்கள்.

மூன்று மணிநேரம்தான் ஒரு உடைய சராசரி ஆயுட்காலம் 70  ஆண்டுகள் என்று வைத்துக்கொண்டால் தோராயமாக ஒரு லட்சம் மணிநேரம் வாழப்போகிறோம். அவற்றை இந்த மூன்று மணி நேரம் தீர்மானிக்கப் போவதாக நினைப்பது நகைச்சுவையாக இல்லையா? தேர்வு என்பது ஒரு ஆட்டத்தை போன்றதுதான். அதைப் புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள். அதனால் உங்களுடைய திறமையைப் பரிசோதிக்கும் நாள் அல்ல. அது உங்கள் ஓராண்டு உழைப்புக்கான பலனை அறுவடை செய்யப் போகும் நாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன