அழகைத் தவிர்த்து பெண்களின் இந்த செயல்கள் தான் ஆண்களை காதலிக்க வைக்கிறது

things other than beauty which makes man fall in love with you

பெண்கள் அழகாக இருக்கிறார் என்றவுடன் அனைவருக்கும் தோன்றுவது அவர்களின் முகம் மற்றும் உருவம் தான் ஆனால் உண்மையில் அழகு என்பது தோற்றத்தில் இல்லை அவர்கள் நடந்து கொள்ளும் விதத்திலும் அவர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்களில்தான் இருக்கிறது.

அவள் சிரிப்பு 

எந்த நிலையிலும் எல்லாவற்றையும் நேர்மறையாக எடுத்துக்கொண்டு புன்னகைக்கும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் போலியான சிரிப்பு இல்லாமல் தன் ஆழ்மனதில் இருந்து வெளிப்படும் புன்னகை ஒரு ஆணை உடனடியாக மயக்கி விடும்

வலிமையான பெண் 

எந்த சூழ்நிலையிலும் துவண்டுவிடாமல் வலிமையாக இருக்கும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் ஒரு பெண் தான் செய்யும் செயலை முழுமனதுடன் முழு முயற்சியில் முடிக்கிறாள் என்றால் அந்தப் பெண்ணிடம் ஏகப்பட்ட வலிமை இருக்கிறது என்று அர்த்தம் அப்படிப்பட்ட பெண்களை ஆண்கள் ஒரு போதும் வெறுக்க மாட்டார்கள்.

மேலும் படிக்க – அளவற்ற காதல் புரிதல் காதலை எல்லையற்றதாக்கும்

நேர்மறை எண்ணம் கொண்ட பெண்

எதையும் நேர்மறையாக எடுத்துக் கொள்ளும் பெண்கள் மிகவும் அனுபவசாலியான தான் இருப்பார்கள் எந்த ஒரு செயலாக இருந்தாலும் அதன் உள்ளர்த்தத்தை கண்டு அதில் இருக்கும் நல்லதையே பார்த்து முடிவெடுக்கும் பக்குவத்தை கொண்டவர்கள் இவர்கள் இதுபோன்ற நேர்மறையான எண்ணத்தை கொண்ட  பெண்களை ஆண்கள் எப்போதும் ரசித்து கொண்டிருப்பார்கள்

அக்கறையுடன் இருக்கும் பெண் 

ஒரு ஆணின் முயற்சியும் நம்பிக்கையையும் எப்போதும் தாழ்த்தி பேசாமல் அவரின் மேல் அக்கறையுடன் இருக்கும் பெண்ணை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் அவள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ஆண்களை கவரக் கூடியதாக இருக்கும்.

மேலும் படிக்க – உங்கள் கணவரை கவர்வது எப்படி?

ஒழுக்கமாக இருக்கும் பெண் 

காலையில்  எழும் முதல் இரவு உறங்கும் வரை தான் செய்யும் ஒவ்வொரு செயலையும் திட்டமிட்டு மிகத் தெளிவாகவும் யார் மனதையும் புண்படுத்தாமல் தன் நாட்களை கழிக்கும் பெண்ணை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் இவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் ஒரு ஆண் கூர்ந்து கவனித்து அவள் மேல் அதிகமாக காதலை கொள்கிறார் இவர்கள் வீட்டை அலங்கரிக்கும் முறை இவர்கள் ஆண்களுக்காக சமைக்கும் முறை போன்ற அனைத்தும் ஒரு ஆணை  கவர்கிறது.

மேலும் படிக்க – மனைவி செய்யும் இதுபோன்ற 8 செயல்கள் கணவன்மார்களுக்கு பிடிப்பதில்லை.!

எப்போது ஒரு பெண் தன் தோற்றத்தை மட்டும் வைத்து ஒரு ஆணை கவருகிறார்களோ சில நாட்களுக்குப் பிறகு அந்த உறவில் சுவாரசியம் குறைந்துவிடும் அதுவே அந்தப் பெண்ணின் முக அழகை விட மன அழகு வலிமையாக இருந்தால் அந்த ஆண் கடைசி வரை அந்தப் பெண்ணை பற்றியே நினைத்து அவள் பெருமைகளைப் பற்றி அனைவருடன் கூறுவான் எனவே பெண்கள் இதை புரிந்து கொண்டு உங்கள் அழகிற்கும் நிறத்திற்கு முக்கியத்துவம் தராமல் உங்கள் செயலுக்கு முக்கியத்துவம் தாருங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன