உடலுறவுக்குப் பின் தம்பதியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!

things couples should do after having intercourse

ஆண் பெண் உடலுறவு கொள்வது என்பது ஒரு அற்புதமான செயலாகும் அதிலும் திருமணமான பெண்கள் தங்கள் கணவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவதற்காக இதுபோன்ற செயல்களை செய்கிறார்கள். உங்கள் உறவை வலுப்படுத்தவும், உங்கள் உறவில் நம்பிக்கையை ஏற்படுத்தவும் உடலுறவு மிக முக்கியம். இதை செய்ய வேண்டும் என்று செய்யாமல் இதற்கான சூழ்நிலை மற்றும் காதல் ஏற்பட்டவுடன் செய்வதுதான் தரமான உறவாக இருக்கும். உடலுறவு மேற்கொண்ட பிறகு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது சரியாக பலருக்கும் தெரிவதில்லை எனவே இதுபோன்ற உடலுறவுக்குப் பின் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய தெளிவான பதிவு தான் இது.

பெண்களுக்கு ஆண்கள் அணைத்துக்கொண்டால் மிகவும் பிடிக்கும் இது நீங்கள் பலமுறை உணர்ந்து இருப்பீர்கள். பொதுவாக பெண்கள் சமையல் செய்யும்போது அல்லது ஏதாவது வேலைகள் செய்யும்போது நீங்கள் பின்னாலிருந்து அணைத்தால் அவர்கள் எந்த வேலை செய்திருந்தாலும் அந்த களைப்பை போக்கி முகத்தில் புன்னகை பூக்கும் இதேபோல்தான்  உடலுறவு கொண்ட பிறகு நீங்கள் உங்கள் மனைவி அல்லது காதலியை அனைத்து கொண்டீர்கள் என்றால் அவர்களுக்கு அது மிகவும் பிடிக்கும்.

மேலும் படிக்க – காதல் திருமணம் செய்ய வீட்டில் சுமார்டா பேசுங்க!

உடலுறவுக்குப் பின் நீங்கள் சமைப்பதாக இருந்தால் ஒன்றாக சேர்ந்து சமையுங்கள் இது உங்கள் உறவை வலுப்படுத்த உதவும். பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து படுக்கை அறையில் சாப்பிட்டீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை தரும். சில பெண்களுக்கு படுக்கை மேல் அமர்ந்து சாப்பிடுவது என்பது பிடிக்காது எனவே அவர்களுக்கு இது ஒரு அற்புதமான உணர்வை ஏற்படுத்தும் என்பதை புரிய வையுங்கள் தயவுசெய்து கட்டாயப்படுத்த வேண்டாம்.

உடலுறவு மேற்கொண்ட பிறகு இருவரும் தங்களுக்கு பிடித்த திரைப்படம் அல்லது தொடர்களை ஒன்றாக அமர்ந்து பார்க்கலாம் அந்த தொடர் இருவருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – இமைகளை நோக்கி இதயத்திலிருந்து சொல்லவும் காதலை

உடலுறவுக்குப் பின் இருவரும் ஒன்றாக சேர்ந்து குளித்தால் மிகவும் நன்றாக இருக்கும் மற்றும் இருவரும் மனம்விட்டுப் பேசுவது நல்லது அதை தவிர்த்து எல்லாம் முடிந்தபின்பு ஒன்றாக கட்டி அணைத்து உறங்குவது உடலுறவை முழுமை அடையச் செய்யும் எனவே இதுபோன்ற செயல்களை நீங்கள் செய்தால் உங்கள் உறவை இது வலுப்படுத்த உதவும் அதை தவிர்த்து உங்களுக்கான தனி கட்டமைப்பை அமைக்காமல் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு உதவிகள் செய்து ஒன்றாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

2 thoughts on “உடலுறவுக்குப் பின் தம்பதியர்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள்.!”

  1. Pingback: கண் பிரச்சினைகளை இரண்டே வாரங்களில் தீர்த்துவிடலாம்

  2. Pingback: ஆண்-பெண் உறவு மகிழ்ச்சியாக இருப்பதற்கு செய்ய

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன