அறிவியலாளர்களை ஆச்சரியப்படுத்திய தில்லை நடராஜர் கோவில் கண்டிப்பாக காணவேண்டிய ஒரு அதிசயமே!

  • by
thillai natarajar temple which has many amazing scientific factors

நம்மிடம் யாராவது ரகசியம் சொல்லப்போகிறார்கள் என்றாலே நாம் பலரும் கேட்பது இது என்ன பெரிய சிதம்பர ரகசியமா? என்றுதான் அப்படி சிதம்பரத்தில் என்ன ரகசியம் இருக்கிறது என்பதை விளக்கமாக பார்க்கலாம்.

சிவபெருமான் ஐம்பூதங்கள் ஆன நிலம், நீர் காற்று, நெருப்பு, ஆகாயம் இவை அனைத்திலும் தனக்கான கோவில்களை அமைத்து இருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுமே இன்றளவும் சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன.

சிதம்பரத்தில் சிவபெருமான் என்ன வடிவில் இருக்கிறார்

ஐம்பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை மையப்படுத்தி சிவபெருமான் எழுந்தருளிய திருத்தலம் தான் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில். சிவபெருமான் மூன்று உருவங்களில் காட்சியளிக்கும் ஒரே திருத்தலம் இந்த சிதம்பரம் தான். இங்கு விக்ரக வழிபாடு லிங்க வழிபாடு, ஆகாய வழிபாடு என்ற மூன்றும் ஒரே கோயிலில் அமைந்திருப்பது இக்கோவிலின் மற்றொரு சிறப்பாகும். 

மேலும் படிக்க – தமிழ்தாய் கோவில் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா!!!

கோவில் 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலில் நான்கு திசைகளும் ,ஐந்து சபைகளும் உள்ளன. இதன் கிழக்கு திசையில் 108 நடனமாடும் நிலையில் உள்ள சிவபெருமான் சிலைகள் அமைந்துள்ளன இதற்கு கர்ணங்கள் என்று பெயர். நம் நாட்டின் பாரம்பரிய நடனமான பரதத்தில் இந்த 108 கரணங்கள் இன்னமும் இடம்பெற்றிருக்கின்றன.

சிதம்பரம் பெயர் காரணம் என்ன?

கட்டிடக்கலை சிற்பக்கலை, நாட்டியம் என இக்கோவில் அனைத்திற்கும் சிறந்து விளங்குகிறது. இதன் பழைய பெயர் திருச்சிற்றம்பலம் என்பதாகும்.  சிவபெருமானை அவ்வாறு அழைப்பதால் இது திருச்சிற்றம்பலம் என்றே அழைக்கப்பட்டது. நாளடைவில் சிற்றம்பலம் என்று அழைக்கப்பட்டு இப்பொழுது

அது சிதம்பரம் ஆக மாறி இருக்கிறது. இங்கு தில்லை மரங்கள் அதிகமாக இருப்பதினால் இந்த ஊருக்கு தில்லை என்ற மற்றொரு பெயரும் உள்ளது.

சிதம்பரம் கோவில் யாரால் கட்டப்பட்டது

சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமானின் எழுந்தருளிய தில்லை நடராஜர் கோவிலின் தெற்குப் பகுதி பாண்டியர்களாலும் ,கிழக்குப்பகுதி சோழர்களாலும் கட்டப்பட்டுள்ளது. ஆட்சிகள் மாறி மாறி இருந்தாலும் கோவிலின் கட்டுமான பணியில் எந்த மாற்றமும் வரவில்லை. இந்த நடராசர் கோவில் 3000 வருடங்கள் பழமையானது என தொல்லியல் துறை ஆராய்ச்சிகள் செய்து கூறியுள்ளது. ஆனால் அவர்களோ இக்கோவில் 5000 வருடம் பழமையானது என்று கூறுகின்றனர்.

1300 ஆண்டுகளில் மாலிக்கபூர் என்ற மன்னரின் படையெடுப்பினால் இக்கோவிலில் உள்ள பல ஓலை சுவடிகள் அழிக்கப்பட்டு விட்டனவாம். அதன் பின் வந்த மன்னர்கள் சில ஏடுகளை பத்திரப்படுத்தி வைத்து உள்ளனர். அந்த ஏடுகள் 1700 ஆண்டுகள் பழமையானது என்பதை நிரூபிக்கும் தடயங்களும் சாட்சிகளும் இக்கோவிலில் இருக்கின்றன. 

அறிவியல் அறிஞர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய சிதம்பரம் கோவில் 

மின்சாரம் ,செயற்கைக்கோள் போன்ற எந்த நவீன அறிவியலும் இல்லாத காலத்திலேயே சிவபெருமானின் மூன்று திருத்தலங்களும் சிதம்பரம்,காளஹஸ்தி காஞ்சிபுரம் இவை மூன்றும் புவியியலின் ஒரே நேர்கோட்டில் 79 டிகிரி 41 தீர்க்க ரேகையில் மிகச்சரியாக அமைந்திருக்கும். இது அறிவியலாளர்களை இன்னமும் வியப்பில் ஆழ்த்துகிறது. செயற்கைக்கோளை கொண்டு ஆராய்ந்து பார்த்ததில் இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருப்பது தமிழர்களின் கலைநுட்பம் நுண்ணறிவும் நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் அறிவியலில் கைதேர்ந்தவர்கள் என்பதை விளக்குகிறது.

மேலும் சிதம்பரம் கோவிலில் உள்ள கலசத்தில் இருந்து வரும் கதிர்வீச்சுக்கள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவையாக இருக்கின்றன .ஏனென்றால் செயற்கைக்கோள் கூட அக்கோவிலின் மேற்புறம் செல்லும் பொழுது ஒரு நிமிடம் ஸ்தம்பித்து விடுவதாகக் கூறுகின்றனர். அறிவியல் அறிஞர்கள் இதற்கு

அறிவியல் பூர்வமான காரணம் என்னவென்று கூறுகையில் , உலகின் பூமத்திய ரேகையின் மையப்பகுதியில் இந்த சிதம்பரம் கோவில் அமைந்திருப்பதுதான் இந்த அதிசயத்துக்கு இதற்கு காரணம்.

மனித உடலுடன் தொடர்புடைய சிதம்பரம் கோவில்

மனித உடலின் 9 துவாரங்களை மையப்படுத்தி கோயிலின் கோபுரத்தில் ஒன்பது வாயில்கள் உள்ளன. சிதம்பரம் தில்லை நடராஜர் சிலையானது மனித இதயத்தை போன்று கோவிலின் இடப்புறத்தில் அமைந்துள்ளது. இதயத்திற்க்கு செல்லும் நரம்புகள் நேராக இருப்பதில்லை. இடப்புறமும் வலப்புறமும் மாறி மாறி அமைந்துள்ளதை போல கருவறையில் உள்ள தில்லைநாதன் சிலையும் இதய நரம்புகளை போல இடவலமாக அமைந்துள்ளது .

சிதம்பரம் கோவிலில் அமைந்துள்ள சபையை பராந்திர சோழன் என்பவர் கட்டியிருக்கிறார். இதில் 21, 000 தங்க ஓடுகள் பதிக்கப்பட்டு உள்ளன அவை ஒரு நாளைக்கு மனிதன் சுவாசிக்கும் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது. (15 X 60 x 24)இந்த 21 ஆயிரம் தங்க ஓடுகள் 65000 ஆணிகளால் அடிக்கப்பட்டுள்ளது. இது மனித உடலிலுள்ள நாடிகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. இப்படி மனித உடலை மையப்படுத்தியே இக்கோவில் ஆனது கட்டப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – தமிழர்கள் மரத்திடம் எந்த அளவிற்கு நெருக்கமாக இருந்தார்கள்..!

உலக ஆராய்ச்சி நிறுவனத்தில் சிதம்பரம் சிலை 

ஸ்விட்சர்லாந்தில் உள்ள CERN என்ற ஆராய்ச்சி நிறுவனத்தில் நுழைவாயிலில் சிதம்பரம் நடராசர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இது 2004 ஆம் ஆண்டு இந்திய அரசால் அந்நிறுவனத்திற்கு பரிசளிக்கப்பட்டது. இதை இங்கு வைத்து இருப்பதற்கான காரணத்தை அங்கேயே எழுதி வைத்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

சிவபெருமானின் காஸ்மிக் நடனம் உலகப்புகழ் பெற்றது இது பல நேர்மறை எண்ணங்களை ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது என்று அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சி நிறுவனத்தையே ஆச்சரியப்படவைக்கும் நம் தில்லை நடராஜர் சிலை. சாதி ,மதங்கள் கடந்த ஒரு சிறந்த அறிவியல் குறியீடாகும். நடன வடிவில் சமயங்களின் அடிப்படையில் இன்னமும்

பத்திரமாக வைக்கப்பட்டுள்ள ஒரு பொக்கிஷம் தான் சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன