நட்புக்கு இலக்கணம் இவர்கள்தானுங்க, இருந்தா இவங்களைப் போல் இருக்கனும்.!

they are the best example of friendship

உறவுகளில் மிகப் புனிதமான மற்றும் அற்புதமான உறவு நட்பு. மற்ற எல்லா உறவுகளிலும் ஏதாவது எதிர்பார்ப்புகள் இருக்கும் உதாரணத்திற்கு, காதலில் காதலியிடம் ஏதாவது எதிர்பார்ப்பு நிச்சயம் இருக்கும், கணவன் மனைவி இடையே எதிர்பார்ப்புகள் இருக்கும், என எல்லா உறவுகளிலும் எதிர்பார்ப்புகள் இருக்கும். சொந்தங்களில் ஏற்படும் உறவுகள் வேறு வழியில்லாமல் அவர்களுக்குள் ரத்தபாசம் ஏற்படும். இந்த எந்த இணைப்பு இல்லாமல் வலுவான உறவாக கருதப்படுவது நட்புதான். இந்த நட்பு இப்போதும் பலபேருக்கு இருந்தாலும் இதற்கு உதாரணமாக பல காலத்திற்கு முன்பு வாழ்ந்த மன்னர்கள் மற்றும் கவிஞர்கள் இருக்கிறார்கள்.

நட்பு என்றாலே நம் மனதிற்கு தோன்றுபவர் கர்ணன். கர்ணன் மற்றும் துரியோதனன் நட்பை உலகம் முழுக்கும் அறிந்திருப்பார்கள். இவர்களின் நட்பை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் தளபதி. கர்ணன் மற்றும் துரியோதனன் நட்புக்கு எடுத்துக்காட்டாக ஒரு நாள் துரியோதனின் மனைவி பானுமதி உடன் கர்ணன் சொக்காட்டத்தை ஆடிக்கொண்டிருந்தார்கள் அப்போது பானுமதி தோற்று விடுவோம் என்ற பயத்தினால் தப்பிக்க முயற்சித்தாள், அப்போது கர்ணன் அவரை பிடித்து இழுத்த போது அவரின் இடுப்பில் இருந்த மணிகள் அறுந்து விழுந்தன. இச்சமயத்தில் உள்ளே நுழைந்த துரியோதனன் சம்பவத்தை பார்த்து நான் மணிகளை எடுக்கவா..? கோர்க்கவா..? என்று கேட்டார். அதற்கு அர்த்தம் மணிகளை இழிக்கும்போது மன நிறைவு மற்றும் மன அமைதி ஏற்படும், இதனால் கோபம் குறையும். அதை ஒவ்வொன்றாக எடுத்து கோர்க்கும் போது இவர்கள் உறவில் இருக்கும் உண்மையை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். என்பதை தான் துரியோதனன் கர்ணன் மற்றும் பானுமதிக்கு உணர்த்தினார்.

மேலும் படிக்க – விருப்பங்களை பகிர்ந்து பந்தங்களை பலப்படுத்துங்கள்

அந்த சம்பவத்தின்போது துரியோதனன் கர்ணன் மீது எந்த சந்தேகமும் கொள்ளாமல் மிக சாதாரணமாக எடுத்துக் கொண்டார். துரியோதனன் என்னதான் கெட்டவராக இருந்தாலும் அவருக்கு நிறைய நற்பண்புகள் இருந்தன. பலரும் துரியோதனன் செய்வது தவறு என்று உணர்ந்து அவரை விட்டு விலகினார்கள். அதேபோல் துரியோதனனுடன் சேர்ந்து போர் புரிவதை தவிர்த்து வில்லினை உடைத்து போரை புறக்கணித்தார்கள். ஆனால் கர்ணன் மட்டும் கடைசிவரை துணையாக நின்று போர் புரிந்தார், இதனாலேயே தன் உயிரையும் துரியோதனனுக்காக தியாகம் செய்தார்.

நட்புக்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டாக இருக்கும் கர்ணன் மற்றும் துரியோதனன் இருவரையும் பலரும் வாழ்த்தினார்கள். சில சமயங்களில் கர்ணனின் தாய் கூட துரியோதனனை விட்டு வெளியே வரும்படி கேட்டுக் கொண்டார், இருந்தாலும் தன் நட்புக்கு விசுவாசமாய் துரியோதனன் கர்ணனுடன் இருந்தார்.

இதுவரை பல தவங்கள் இருந்து பல பேருக்கு காட்சி அளிக்காத கண்ணன், கர்ணனுக்கு காட்சி அளித்தார். இத்தனைக்கும் கண்ணனை வணங்கி கர்ணன் எந்த வேண்டுதலும் முன்வைக்கவில்லை இதை கண்ணனிடம் கேட்டார் கர்ணன், அதற்கு அவர் நீங்கள் செய்த கர்ம யோகத்தினால்தான் நான் உங்களை காண வந்து இருக்கிறேன். ஒருவர் தன் மனதில் தவத்தினால் என்னை போற்றிப் பாட படுவதால் நான் அவர்களுக்கு காட்சி அளிப்பேன் ஆனால் நீங்கள் பல பேரின் ஆழ் மனதில் உள்ள பயத்தைப் போக்கி உள்ளீர்கள். அதனாலேயே உங்களுக்கு காட்சி அளித்தேன் என்றார் கண்ணன்.

இதேபோல் நட்புக்கு உதாரணமாக அவ்வையாரும், அதிகமானும் இருந்தார்கள். அதியமான் ஒரு நல்ல அரசர், அவர் அரசவையை காண்பதற்காக பல பேர் கூடுவார்கள். அதைத் தவிர ஏராளமான புலவர்களும் அந்த அரசவையில் இருப்பார்கள். அதிகமான தமிழுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தந்தார். அதுமட்டுமல்லாமல் இலக்கணம், இலக்கியத்தின் வளர்ச்சிக்கு துணை நின்றார். இவர் ஆட்சி புரிவதிலும், போர் புரிவதிலும் சிறந்தவர்.

மேலும் படிக்க – குழந்தைகளுடன் பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும்..!

ஒரு நாள் இவர் பழங்குடியினர்கள் இருக்கும் காட்டு பகுதிக்குச் சென்றார். அங்கே இவரை வரவேற்க பழங்குடியினர்கள் இவருக்கு கருப்பு நெல்லிக்கனியை கொடுத்தார்கள். அந்த கனியின் சிறப்பு என்னவென்றால் அதை உண்டால் எப்போதும் இளமையாக இருக்க முடியும். எல்லோரும் அந்த பழத்தை அதியமான் சாப்பிட போகிறார் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அதிகமான் அந்தப் பழத்தினை அவ்வைக்கு கொடுப்பட்காக முடிவெடுத்தார்.

என்றும் இளமையாக வைத்துக்கொள்ளும் பழத்தை நான் உண்டால் ஒரு சில ஆண்டுகளே என் மக்கள் பயன்பெறுவார்கள் அதுவே அவ்வையார் இந்த கணியை உண்பதன் மூலம் தமிழ் கவிதைகள் மற்றும் இலக்கணம் பல மடங்கு வளரும் என்று இந்த முடிவை எடுத்தார். இது இவர்களுக்கு இடையே இருக்கும் நட்பை உணர்த்தியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன