தவறான உணவினால் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கலாம்..!

  • by
these foods can reduce your immune power

நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்க வேண்டும் என்றால் நமக்கு தேவையானது எல்லாம் போதுமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவுகள். ஆனால் ஒரு சிலர் எடுத்துக்கொள்ளும் உணவின் மூலமாக அவர்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக பாதிக்கிறது. இதைத் தவிர்த்து இது உங்கள் மரபணுவை பாதித்து உங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தைகளையும் பாதிக்க செய்யும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை தாக்கக் கூடிய உணவுகளைக் காணலாம்.

எதிர்ப்பு சக்தியை குறைக்கும் உணவு

நீங்கள் சர்க்கரை அதிகமாக உள்ள உணவுகளை எடுத்துக் கொண்டால் இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும். அதேபோல் கொழுப்புகள் அதிகமாக உள்ள மாமிச உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற அனைத்தும் உங்களை பெரிதும் பாதிக்கும். அதேபோல் பைபர் குறைவாக உள்ள உணவுகளும் உங்கள் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை குறைத்து விடும்.

மேலும் படிக்க – கற்றாழை, வேப்பிலை மற்றும் மஞ்சள் கொரோனாவுக்கு எதிராக போராடும்..!

அதிக காரம்

காரமான உணவுகளை உட்கொண்டால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி சமநிலையில் இருக்கும் ஆனால் நாம் எப்போது தொடர்ந்து காரமான உணவுகள் மற்றும் அதிக காரத்தை உணவில் சேர்த்துக் கொள்கிறோமோ அது நம்முடைய செரிமானம் மற்றும் குடல் பகுதிகளை பாதித்துவிடும். இது படிப்படியாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியையும் சீர்குலைத்துவிடும்.

ஜங்க் உணவுகள்

சீஸ் மற்றும் கொழுப்புகள் அதிகமாக சேர்க்கப்படும் ஜங்க் உணவுகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பீட்சா, பர்கர் மற்றும் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள் அனைத்தையும் நாம் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். இதை மாதத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை சாப்பிட்டாலும் உங்கள் உடலுக்குத் தீங்கு ஏற்படுத்தும், இருந்தாலும் இதைக் கட்டுப்படுத்த முடியாதவர்கள் பெரிய இடைவெளி விட்டு சாப்பிட்டு வரலாம்.

மேலும் படிக்க – ஹோம்லியாக ஹோமியோ சிகிச்சை தரும் ஆசா லெனின்.!

எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நாம் நோயில்லாமல் வாழ்வதற்கு மிக முக்கியமான காரணம் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி தான். இன்றும் நமக்குத் தெரியாத ஏராளமான கிருமிகள் நம் உடலுக்குள் சென்று கொண்டுதான் இருக்கிறது. அதை அனைத்தையும் எதிர்த்து போராடும் தன்மை இந்த எதிர்ப்பு சக்தி கொண்டுள்ளது, எனவே இதை அதிகரிக்கும் உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நாம் உடலை பாதிக்கக்கூடிய உணவை தொடர்ந்து எடுத்தால் நம்முடைய உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை முழுமையாக அழிந்துவிடும். இதனால் உங்களுக்கு இருதயப் பிரச்சினை, புற்று நோய், ரத்த சோகை, இது மிகப்பெரிய வியாதிகளும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே எதிர்காலத்தை  கருத்தில் கொண்டு உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன