சனி பகவானின் கோபத்தை அதிகரிக்கும் செயல்கள்.!

these bad actions of you will increase the anger of sani bhagavan

சனி பகவான் என்பவர் சூரிய தேவனின் மகன் ஆவார். இவரது தாய் சாயா தேவியின் கர்ப்பத்தில் இருக்கும்போதே சூரியனின் வெப்பத்தினால் இவர் கருப்பாக மாறினார். சனிபகவானின் தாய் சாயன தேவி தீவிர சிவபக்தியை கொண்டவராவார் இதனாலேயே கர்ப்பத்தில் இருக்கும் சனிபகவானை சிவன் பக்தனாகவே வளர்த்தார். இதனால் தவறு செய்யும் மனிதர்களுக்கு வாழும்போதே தண்டனை கொடுக்கும் பொறுப்பை சனிபகவானுக்கு சிவபெருமான் வழங்கினார்.

சனிபகவானை நாம் எப்போதும் மதித்து அவரை வழிபட்டு வந்தால் நமது வாழ்க்கையில் எந்த அளவு கஷ்டங்கள் ஏற்பட்டதோ அந்த அளவிற்கு நமக்கு செல்வத்தையும் மகிழ்ச்சியையும் தருவார். ஆனால் நாம் கஷ்டப்படும் நேரங்களில் அவரை அவமதித்தால் அல்லது அவருக்கு பிடிக்காத செயலை செய்தபோதும் நாம்மை மேலும் துன்பதிற்குள்ளேயே வாழ வைத்துவிடுவார்.

மேலும் படிக்க – பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

முடிந்தவரை பாவச் செயல்களில் ஈடுபடாமல் இருந்தாலே சனி பகவானின் பார்வையில் இருந்து நம்மால் தப்ப முடியும். ஒவ்வொரு ராசிக்காரர்களும் அவரின் கிரகம் சரியாக சனி பகவானின் பார்வையில் படும்போது நாம் இதுபோன்ற இன்னல்களுக்கு ஆளாகிறோம். ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் ஏழரை சனியின் அல்லது அஷ்டமத்து சனியாக அமர்ந்து விட்டால் சில ஆண்டுகளில் அவர் வாழ்க்கை துன்பம் நிறைந்ததாகவே இருக்கும். ஆனால் இந்த சமயங்களில் நம் நற்செயல்களை செய்து சிறப்பாக இறைவனை வழிபட்டு வருவதன் மூலம் ஏழு ஆண்டுகள் முடிந்த பின் நாம் நினைத்துப் பார்க்காத அளவிற்கு செல்வங்களும் மரியாதையையும் நமக்கு மீட்டுத் தருவார்.

நாம் அடிக்கடி நமச்சிவாய என்று சொல்வதன் மூலம் சனிபகவான் மூலம் நமக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும் அல்லது சிவனை வழிபடுவதன் மூலம் சனிபகவானின் கோபத்திலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க – அமாவாசை-யில் உண்டு அற்புத குணம்..!

சனி பகவானுக்கு பிடித்த நிறம் கருப்பு இதனால் நாம் முடிந்தவரை அவருக்குப் பிடித்த நிறத்தைக் கொண்டு வழிபட வேண்டும் சனிக்கிழமை அன்று நாம் சிவப்பு நிற துணியை அல்லது பரிசை கொடுக்க வேண்டாம் இது அவரின் கோபத்தை அதிகரிக்கச் செய்யும். இந்த நாட்களில் வெள்ளை நிற உடை அல்லது அதை சம்பந்தமாக பொருட்களை பரிசாக அளிக்கலாம். இதை செய்வதன் மூலம் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினையிலிருந்து அதிக அளவில் தீர்வு காண இந்த செயல் உதவுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன