மனித நேயம் மறைந்து விட்டதா..!

  • by
the society has forgotten humanity

கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொறுப்பில் மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனித நேயமற்ற மக்கள் தங்கள் உயிரை காப்பாற்ற பணியாற்றும் இவர்களையும் தாக்கியுள்ளார்கள். அதே சமயத்தில் இவர்களால் செய்யப்படும் உதவிகளை மறந்து அவர்களிடம் வாக்குவாதம் செய்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் இந்த சூழ்நிலையில் ஒருவருக்கு ஒருவர் இடைஞ்சலாக மக்கள் இருக்கிறார்கள்.

மனிதநேயம் அழிகிறது

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டறியும் பணியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் வட இந்தியாவில் மும்முரமாக செயல்பட்டு வந்துள்ளார்கள். இவர்கள் வருவதைப் பார்த்த வட இந்திய மக்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் அனைத்துப் பொருட்களையும் வைத்து மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை தாக்கியுள்ளார்கள். இதனால் காயமடைந்த மருத்துவர்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடி ஒளிந்துள்ளார்கள். பிறகு காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தார்காள். இந்த செயலை கண்டித்து சல்மான் கான், மருத்துவர்கள் மற்றும் ஏராளமான அரசியல்வாதிகள் கண்டனம் தெரிவித்து வந்தார்கள்.

மேலும் படிக்க – நவகிரக கோள்களும் அவற்றிற்குரிய தானியங்களும்

தமிழ்நாட்டில்

வட இந்தியாவில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ள சமயத்தில் தமிழ்நாட்டிலும் இதைவிட மோசமான ஒரு சம்பவம் நடந்துள்ளது. சில வாரங்களுக்கு முன்பு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியை அடக்கம் செய்வதை தடுத்து மக்கள் போராட்டும் செய்து வந்தார்கள். அதன் பிறகு அந்த நோயாளியை வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்தார்கள். இச்இச்சமயத்தில் கடந்த வாரம் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்கள் கொரோனாவாள் பாதிப்படைந்து உயிரிழந்துள்ளார். இவரை அடக்கம் செய்வதற்கு தடையாக மக்கள் இரவு பகல் பாராமல் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதைத் தவிர்த்து மனித நேயம் கொஞ்சம் கூட இல்லாத அந்த பகுதி மக்கள் ஓட்டுநர்கள், மருத்துவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களை பலமாக தாக்கியுள்ளார்.

மனிதம் அழிந்தது

தன் உயிரைக் காப்பாற்றிய மருத்துவரின் உறவினர்களை தாக்கிய இதுபோன்ற மக்கள் மனதில் மனிதம் முழுமையாக அழிந்துள்ளது. மிருகத்தனமான இந்த செயல்களை நிகழ்த்திய இவர்கள் எப்படி நிம்மதியாக வாழ்கிறார்கள், பொது அறிவு, பொது நலம் போன்ற எதுவும் இல்லாமல் இந்த செயலில் ஈடுபட்ட மக்களை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். புதிதாக விதிக்கப்பட்ட சட்டத்தில் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் வரை இவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும். அறிவை கொஞ்சம் கூட பயன்படுத்தாமல் தாக்குதலில் ஈடுபட்ட கிட்டத்தட்ட 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள்.

மேலும் படிக்க – காய்கறிகளை இப்படி பாதுகாப்பாக பயன்படுத்தவும்

சுயசிந்தனை

கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வுகள் அரசு அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அவ்வப்பொழுது அளித்து வருகிறார்கள். இருந்தும் மக்கள் ஒரு சிலரின் பேச்சை கேட்டு இதுபோன்ற தவறான காரியங்களில் இறங்கி விடுகிறார்கள். இதைத்தவிர்த்து சாலை ஓரங்களில் கொரோனா வைரஸ் பற்றிய பயங்கள் ஏதும் இல்லாமல் சுற்றித் திரியும் அறிவற்ற மக்களின் மேல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வருகிறார்கள். இது போன்ற செயல்களின் மூலமாக மக்களின் எதிர்காலம் முழுமையாக பாதிக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள்.

எனவே மனிதர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால் மட்டுமே மனிதம் மலரும், இல்லையெனில் நாமும் ஒரு வகையான மிருகங்களாக மாறுவோம். இப்படி சக மனிதரை மதிக்காமல் அவர் வாழ்க்கையை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்ட மக்களால் மனிதம் அழிந்து வருகிறது. வட இந்தியாவில் நடந்த சம்பவத்தால் வட இந்திய மக்களை இழிவுபடுத்திய நமக்கு சரியான பாடம் நமது மக்களின் மூலமாக கற்பிக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன