தற்போதைய சூழலில் மனநல ஆரோக்கியத்தின் அவசியம்!

 • by

மனநல ஆரோக்கியம் என்பது அனைத்து வயதினருக்கும் ஆனது சிறு குழந்தைகள் முதற்கொண்டு 70-80 வயது நபர்களுக்கும் மன ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. 2015-2016 ல் தேசிய மனநல சுகாதார ஆய்வின் படி, இந்திய மக்கள் தொகையில் குறிப்பிட்ட அளவு மக்கள் மனநல பாதிப்பில் உள்ளனர். இதில் 70 முதல் 92 சதவீத மக்கள் தங்கள் மனநலனுக்காக சிகிச்சை பெறத் தவறி விட்டதாக ஆய்வு கூறுகிறது.

உலகில் இந்தியாவில் தான் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ளதாக கணக்கெடுப்பு கூறுகிறது. பலரும் இதை ஒரு முக்கிய விஷயமாக எடுத்துக் கொள்ளாததால் மன நல ஆரோக்கியம் கெடும் பொழுது மிகவும் மோசமான முடிவுகளை மக்கள் பலர் எடுக்கின்றனர். கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினால் பலரும் வேலை இழந்தும், வீட்டிலிருந்து பணிபுரிபவர்கள் அவர்களது அலுவலகத்தில் ஏற்படும் அழுத்தம், பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் போன்ற வற்றால் வீட்டில் இருக்கும் குடும்பத்தலைவியின் அதிக பொறுப்பு போன்ற பல காரணங்கள் மனநல ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும் காரணிகள் இவற்றை எதிர்கொள்ள சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பது அவசியமாகிறது.

மனநலத்திற்க்கான தீர்வு :

 • உடற்யிற்சிக்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கும் செயல்பாடுகளை பள்ளி, கல்லுாரி தரும் அலுவலகத்தில் நடைமுறை படுத்தவேண்டும்.
 • விளையாட்டு ஆர்வம் கல்வியை பாதிக்கும் என்ற ஒரு தவறான புரிதல் பெற்றோர்களிடம் காணப்படுகிறது. ஆனால் அது உண்மையல்ல.
 • விளையாட்டில் ஆர்வத்துடன் செயல்படும் மாணவர்கள், கல்வியிலும் சிறந்து விளங்குவதாக ஆய்வுகளின் முடிவு கூறுகிறது.
 • யோகா உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.
 • தியானம், யோகா மற்றும் விளையாட்டுகள் ஒருவரின் மன இறுக்கம், அழுத்தம் தளர்ச்சி போன்றவைகளை சீராக்கி மனஅழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோனை மாற்றும்.

மனநல ஆரோக்கியத்தை பெற :

 • உங்களுக்கான வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தைஅதிகரிக்கும். செய்ய வேண்டியவற்றை தாமதப்படுத்தாமல் அப்போதே செய்யுங்கள்.
 • குடும்பத்துடன் வாரத்தில் ஒரு நாளாவது பேசி மகிழ்ந்து உணவு உண்ண வேண்டும்.
 • வீட்டில் சிறிய தோட்டம் அமைத்து அதில் திருப்தி காணுங்கள். மேலும் அதில் தரமான காய்கறிகள் கிடைத்த மகிழ்ச்சியும் கிடைக்கும்.
 • கடுமையான சூழலாக இருந்தாலும் சிரிக்க மறக்காதீர்கள் சிரித்தால் பல பிரச்னைகள் காணாமல்போய்விடும்.
 • மனதையும், நீங்கள் இருக்கும் இடத்தையும் சுத்தமாகவைத்துக் கொள்ளுங்கள்
 • புத்தகம் படிக்க பழகுங்கள். கவலை மற்றும் தோல்விகளை குறைக்க வாசிப்பு சிறந்த பலனை தரும்.

இப்போது பல மக்கள் மனநல ஆரோக்கியத்தை ஆன்லைனில் தேடி வருகின்றனர். அதே வகையில் மன நல நிபுணர்கள் பலர் ஆன்லைன் மூலம் சிறந்த ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். டாக்டர் இளையராஜா அவர்கள் உரிமம் பெற்ற உளவியல் ஆலோசனையாளர் ஆவார், பல்வேறு பிரச்சனை உள்ள வாடிக்கையாளர்களுக்கு அக்கறையுடன் பரிவுணர்வுடன் சிகிச்சையளிப்பதில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டுள்ளார். மன அழுத்த சிக்கல்களைக் கையாளுதல், அடிமையாதல், கோப மேலாண்மை, திருமண ஆலோசனை, பதட்டம், வேலை-வாழ்க்கை சமநிலை, இளமை பருவ பிரச்சனைகள், அதிர்ச்சி போன்ற பல நிபுணத்துவங்களை அவர் வழங்குகிறார். தான் கற்ற துறை அனுபவங்களை பிறருக்கு வழங்குவதில் எப்பொழுதும் முன்னிலையில் இருக்கிறார் டாக்டர் இளையராஜா அவர்கள். அவ்வப்போது பிரபலமான தொலைக்காட்சிகளில் தோன்றி மக்கள் பலருக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார். அவரின் ஆலோசனைகள் பலருக்கும் உதவிகரமாக இருந்து வருகிறது.

டாக்டர் இளையராஜா அவர்களுடன் மனநல ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன