உளவியல் ஆலோசனையின் முக்கியத்துவம்!!!

  • by

உளவியல் என்பது அறிவியலின் ஒரு துறை. மனிதனின் செயல்பாடுகளை குறிப்பாக மனதின் செயல்பாடுகளை ஆராய்ச்சி செய்ய முனைவதே உளவியல். உளவியல் மனிதனின் மன ஆய்வு. உளவியலுக்கு, மனோதத்துவம் (Psychology) என்ற பெயரும் உண்டு. இது மனிதனின்

  • முழு நடவடிக்கைகள்
  • எதிர்வினைகள்
  • சிந்தனைகள்
  • உணர்வுகள்
  • உணர்ச்சிகள் மேலும் பல வற்றை பற்றிய ஆய்வை உள்ளடக்கியது தான் இந்த உளவியல் துறை.

உளவியலாளருக்கான பணிகளின் வகைகள் :

உளவியலில் பல்வேறு வகைகள் மற்றும் பிரிவுகள் உள்ளது அதில் குறிப்பிடும்படியான வகைகள் மற்றும் பிரிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. விளையாட்டு உளவியலாளர், கவுன்சிலிங் உளவியல், நிறுவன உளவியல், அறிவாற்றல் உளவியல், மேம்பாட்டு உளவியல், மறுவாழ்வு உளவியல், ஆய்வு உளவியல், சமூக உளவியல், மருத்துவ உளவியல், என பல்வேறு வகைகள் இதில் உள்ளது.

கவுன்சிலிங் உளவியல் :

மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை அளித்தல், மனநல குறைபாடு உள்ளவர்களின் பிரச்சினைகள் தீர்வதற்கான உளவியல் விதிமுறைகளைப் பயன்படுத்தல், மேலும் அந்நபர்களின் நல்வாழ்விற்கு உதவுதல் போன்றவை இந்த பிரிவில் அடக்கம்.

அறிவாற்றல் உளவியல் :

ஒரு தனி மனிதனின் வாழ்வில் அவன் முடிவு எடுக்கும் திறன், மற்றும் சிந்தனை திறன் ஆகியவற்றை ஆராய்வது இந்த அறிவாற்றல் உளவியல்.

மறுவாழ்வு உளவியல் :

அடிமையாதல் மற்றும் விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றி ஆராய்வது இந்த மறுவாழ்வு உளவியல். இந்தவகை உளவியலாளர்கள், நோயாளிகளுக்கு, சூழ்நிலையோடு ஒத்துபோக உதவி செய்கிறார்கள்.


கல்வி மற்றும் மேம்பாட்டு உளவியல்
:

கல்வி மற்றும் மேம்பாட்டு உளவியல் நிபுணர், மேம்பாடு மற்றும் கல்வி தொடர்பான நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறார். இந்த முறை இந்தியாவிற்கு புதிது பலரால் வரவேற்கக்கூடிய ஒன்று.

நரம்பு உளவியல் :

மூளையில் ஏற்படும் பாதிப்பு, எப்படி ஒரு மனிதனின் நடத்தையை பாதிக்கிறது என்பதைப் பற்றியும், அதற்கான மருத்துவம் பற்றியும் ஆராய்வது இந்த நரம்பு உளவியல்.

மருத்துவ உளவியல் :

ஒருவரின் உடல் நலம் மற்றும் மனநலம் இவற்றை பாதிக்கும் அம்சங்களைப் பற்றி ஆராய்வதே மருத்துவ உளவியல். ஒருவரின் உடல் நலத்தை மோசமாக பாதிக்கக்கூடிய விஷயங்களை கண்டறிவதும், நோயாளிகள் தங்களின் நோயோடு எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை மருத்துவ உளவியல் முக்கியமாக ஆராய்கிறது. மேலும் நோயாளியின் உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்தும் வழிகளைக் கண்டறிவதும் இதன் நோக்கம்.

மன உளைச்சலுக்கான தீர்வு :

கொரோனா வைரஸ் ஏற்படுத்திய பாதிப்பினால் பலரும் இப்போது வீட்டில் இருந்து பணிபுரியும் நிலை, குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருக்கும் நிலை, கல்லூரிக்குச் இல்லாதிருத்தல் போன்ற பல பிரச்சினைகளால் அனைவரும் வீட்டில் இருப்பதால் குடும்பத் தலைவியும் அதீத பிரச்சினைகள் ஏற்படுகிறது. குறிப்பாக கணவன் மனைவி இடையே பிரச்சினைகள், வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்ற இந்த காலகட்டத்தில் உளவியலாளரிடம் ஆலோசனைகளை பெறுவது அவசியமாகவுள்ளது. அவ்வகையில் சமர் ஹபீஸ் மருத்துவ உளவியலாளர் மற்றும் சுகாதார பயிற்சியாளர் இவர் நடத்தும் ஆன்லைன் ஆலோசனைகளை நீங்கள் அணுகுவதன் மூலம் உங்கள் பிரச்சனைகள் விரைவில் காணாமல் போய்விடும். சமர் ஹபீஸ் 7 வருடத்திற்கு மேலாக இந்த துறையில் அனுபவம் கொண்டுள்ளதால் உளவியல் மற்றும் சுகாதாரம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் சிறந்த அனுபவம் பெற்றுள்ளார்.

சமர் ஆபீஸ் அவருடன் ஆலோசனை பெற…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன