மனநல ஆலோசனைகளின் முக்கியத்துவம் :

 • by

வளர்ந்து வரும் நாடுகளில் மனநல ஆலோசனை என்பது மிகவும் இன்றியமையாதது. காரணம் பணியாளர்கள், வீட்டிலிருப்போர், மாணவர்கள், என அனைத்து மக்களுக்கும் மனநல கோளாறுகள் ஏற்படுவது சாதாரணமாக உள்ளது. இதனை போக்க மனநல ஆலோசனை வழங்கும் நிபுணர்களை அணுகுவது பயனளிக்கும்.

உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) ஆய்வின் படி நம் நாட்டில் சராசரியை விட தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்பவரின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகமாகவுள்ளது என்று கூறுகிறது. இந்தியாவில் உள்ள தேசிய குற்ற பதிவு பணியகம் (NCRB) ஆய்வின் படி 2015 ஆண்டில், 14,600 க்கும் மேற்பட்ட தற்கொலைகள் தமிழ்நாட்டில் மட்டும் நடந்துள்ளது என அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவிலே 2-வது இடத்தில் தமிழ்நாடு இருந்தது.

மனநல ஆலோசனைக்கான அவசியம் :

மனநல ஆலோசனை என்பது பணியாளர்களுக்கு மட்டும் உண்டாவது அல்ல அனைத்து தரப்பு மக்களுக்கும் மனநலக் கோளாறுகள் ஏற்படும். உதாரணமாக சிறு குழந்தைகளுக்கும் ஆசைபட்டவைகள் கிடைக்காத காரணத்தினால் அவர்கள் மனநல கோளாறினால் சிக்கும் அபாயம் உள்ளது. பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது பெற்றோர்களின் கனவை நினைவாக்க விருப்பமில்லாத பாடப்பிரிவுகளை தேர்வுசெய்து
பெற்றோரின் கனவை நினைவாக்க அயராது பாடுபடுகின்றனர் ஆகையினால் அவர்களுக்கு மன கோளாறுகள் ஏற்படுகிறது.

ஒருவருக்கு மனநல கோளாறுகள் ஏற்படுவதை அதற்க்கான அறிகுறிகள் வைத்து நம்மால் எளிதில் கண்டறிய முடியும்.

குழந்தைகளுக்கான அறிகுறிகள் :

 • பள்ளி செயல்திறனில் மாற்றம் ஏற்படுதல்
 • முயற்சியெடுத்தும் குறைந்த மதிப்பெண் பெறுதல்
 • வார்த்தைகளையும் ஒலியையும் தொடர்புபடுத்த முடியாமல் போவது
 • கற்றல் குறைபாடுகள், எழுதுதல், படித்தல் மற்றும் கணக்கு போடுவது போன்றவற்றில் ஏற்படும் குறிப்பிட்ட பிரச்னைகள்.
 • கல்வியில் கவனச் சிதறல்

இளம்வயதினருக்கான அறிகுறிகள் :

 • உணவு (ம) தூங்கும் பழக்கத்தில் திடீர் மாற்றம்
 • தினசரி பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் போவது
 • உடல் ரீதியான பிரச்னைகள் ஏற்படுதல்
 • அடிக்கடி கோபப்படுதல்
 • செய்கிற செயலில் நாட்டமில்லாமல் போவது

பெரியவர்களுக்கான அறிகுறிகள் :

 • தெளிவற்ற சிந்தனை
 • நீடித்திருக்கும் கவலை அல்லது எரிச்சல்
 • அளவுக்கு அதிகமான கோபம்
 • இல்லாத விஷயத்தைப் பார்ப்பது / யாரோ தம் காதில் பேசுவது போல உணர்தல்
 • தற்கொலை எண்ணங்கள்

மனநல கோளாறுகள் ஒருவருக்கு ஏற்பட்டதாயின் சரியான நேரத்தில் ஆலோசனைகள் பெறவில்லை என்றால் நிலைமை மிகவும் மோசம் அடைய வாய்ப்புகள் அதிகம். பலரும் இதுபோன்ற நேரத்தில் தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளும் அளவுக்கு தள்ளப்படுவார்கள்; ஆகையால் இப்போது பல மனநல ஆலோசகர்கள் ஆன்லைன் அமர்வில் ஆலோசனைகளை வழங்கி வருகின்றன அவ்வகையில் அம்பிகா கிருஷ்ணமூர்த்தி உளவியலாளர் நன்முறையில் மனநல பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

இப்போது பலரும் வீட்டிலிருந்து பணிபுரியும் நிலைமையில் வேலை பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பலர் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளனர். இவ்வேளையில் அம்பிகா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஆன்லைன் மூலம் ஆலோசனைகளை வழங்கி வருகிறார் குடும்ப பிரச்சனைகள், மனம் சார்ந்த அணுகுமுறைகள், எதிர்மறை எண்ணம், மனோதத்துவம், மன அழுத்த மேலாண்மை போன்ற பலவற்றுக்கு அவர் ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.

முன்பதிவிற்கு -> உங்கள் மனதின் குரல் – அம்பிகா கிருஷ்ணமூர்த்தி.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன