அன்பின் அடுத்த பரிமாற்றம் அழகிய முத்தம்

  • by

இமைகளில் பிறக்கும் காதல்  இதயப் பரிமாற்றத்தில் வளரும் காதல் இது இதயத்தை  வென்ற காதலின் அடுத்த பரிமாற்றமே இதழ் பேசும் முத்தம் மொழியாகும். உங்கள் காதலில் ஆழம் இருக்கும் பொழுது அது அனுசரனையாக தொடரும் என்ற நம்பிக்கையை இந்த   இதழ் முலம் பேசும் முத்தங்கள் கற்றுக் கொடுக்கும். 

இதழ் பேசும்மொழி: 

இதழ் உணர்வுகளை உணர்த்தும் ஒன்றாகும்.  இது சுவை அறிய பிறப்பிடம் ஆகும். நமது உடல் ஆரோக்கியத்தை  காக்கும் உணவில் இருக்கும் இந்த இதழ் மொழியானது உணர்வுகளின் சங்கமம் ஆகும். இதனை நாம் உணர வேண்டியது அவசியம் ஆகும். 

இதழ் மொழியின் இலக்கணம்: 

இதழ்களால் பரிமாற்றம் செய்யப்படும் அடுத்த ஒரு   மொழியே முத்தம் ஆகும். இது உணர்வுகளின் பிறப்பிடம். அன்பு என்ற எல்லைக்குள் அடங்காத  ஒரு உண்ர்வை நமக்கு அடுக்கித் தரும் ஒன்றெனில் அது இந்த முத்தம் ஆகும். 

இதயங்கள் இராயிரம் முறை நம்மை அறியாமல்  பரிமாறி போகும் பொழுது நமக்குள் அடுத்து ஏற்படும் உணர்வு பரிமாற்றம் இதழ் பேசும் பொழி முத்தம் அது முதலில் இயற்கையாக  அமைவது கண்ணத்தில்தான் நீங்கள் எவ்வளவு காட்கலித்தாலும் உங்கள் காதலிக்கு மனப்பூர்வமாக கொடுத்த ஒன்று எனில் அது நிச்சயம் கண்ணத்தில் கொடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் இருக்கும். 

மேலும் படிக்க: காதலர் தினத்தில் கலக்கலான திட்டங்களோட ஜமாயுங்க!

முதல் முத்தம்

காதலில் எவ்வாறு பல  வகைகள் உண்டு. உங்கள் காதலை வெளிப்படுத்தும் வகைகளில் இமைகள் இடமாறும். இதயங்கள் போல்  அடுத்த ஒன்றாக இதழ்கள் பேசும், இதழ்கள் முதலில் இமைகளுக்கு அருகே பேசும். 

உங்கள்  அன்புக்குரியவர்  உங்களை அதிகம் புரிந்து  கொள்ளும் பொழுது, உங்களின் மீது அவர்களின் காதல் வளரும் பொழுது அவரோ, அவளோ தனது உணர்வை வெளிப்படுத்தும் விதமானது முத்தமாகத்தான் இருக்கும். 

முத்ததை மொத்தமாகவும்,  குறைவாகவும் கொடுக்க முடியும்.  அதில் பலவகைகள் உண்டு. நாம் எவ்வளவு முத்தங்கள் பெற்றாலும் காதலில் இருக்கும் முத்தங்கள் உணர்வுகளின் பிறப்பிடமாக இருக்கும். அதன் தாக்கம் ஆயுள் முழுவதும் நிறைந்து இருக்கும். 

மேலும் படிக்க: காதலர் தினத்தை இதுபோல கொண்டாடி உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.!

முதல் முத்தம்: 

நீங்கள் பிறந்ததும்  இந்த மண்ணில் உங்கள் தலை விழுந்தது  பூமித்தாயவள் கொடுத்த முதல் முத்தம்!

உங்களின் பிறப்பில் பங்கு பெற்ற தாயுமான தந்தை இருவரும் இணைந்து கொடுக்கும் முத்தம் உங்களை உணர்ந்த   இதயத்தவர் கொடுக்கும் முத்தம் இவை அனைத்தும் பெரிய அளவில் ஆயுள் முழுவதும் நினைவில் வரும். 

முதல் முத்தம் என்பது   உணர்வுகளின் பிறப்பிடம் ஆகும். அந்த உணர்வில் கல்லம் கபடம் எதுவும் இருக்காது உங்களை ரசித்து உங்களுள் இருக்கும் உங்களை மேலும் ரசித்து நேசித்து அன்பாக பெறுவது அந்த முத்தம் ஆகும். 

காதலில் இந்த பரிசம் என்பது  காப்பியங்கள் ஆயிரம் படித்து, கல்லை கரைத்த ஒரு உணர்வு  கிடைக்கும். 

முதல் முத்தம்

இதழோடு இதழ் பேசும் இணைப்பு: 

இதழோடு இதழ் பேசுவது இன்று அனைவரும் பெரிது என நினைக்கின்றனர் அதில்தான் ஆதமாத்ம தன்மை உள்ளது என்கின்றனர். அதையெல்லாம் பெரிய  சாதனையானது முதல் முத்தம் என்பது மாற்று கருத்து இல்லை. என்னதான் முத்தங்கள் சத்தம் இல்லாமல் முதல் முத்தம் கிடைத்தாலும். அன்பை அதிகப்படுத்த காதலில் மோதல், சாதல்,  அந்தரங்க உணர்வு இவை அனைத்தையும் நாம் அதிகரிக்க முக்கிய தூண்டுகோள் ஒன்று உண்டு எனில் அதில் இந்த முத்தம் முக்கியப் பங்கு வகிக்கின்றது. 

காதலில்  உருகி திரியும் காதலர்களானாலும். காதலில் ஊடல்கள் பல நடக்கும் காதலர்களானாலும், இல்லற வாழ்வுக்கும் ஆதாரமாகும் அந்தரங்க உறவானாலும்  அனைத்தையும் ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று உண்டானால் அது நிச்சயம் முத்தமாகத்தான் இருக்கும். 

நீ கொடுத்ததை திருப்பி கொடுப்பேன் என   நாயகன் சொல்ல்லும் பொழுது நான் கொடுத்ததை திருப்பி கொடுத்தால் முத்தமா கொடு மொத்தம கொடு என்று வரிகளில் காதலின் ஆழம் தெரியும், 

அனைத்து கொடுக்கும் முத்தமானாலும், அன்பின் கொடுக்கும் முத்தமானாலும், ஆசைக்கு கொடுக்கும் முத்தமானாலும் ஆற்றல் மொத்ததில் முத்ததிற்கே உண்டு. இதையேதான் இருக்கி அனைச்சு ஒரு  உம்மா கொடு என தான் விரும்பும் அன்புக்குரியவள் தன் அன்புக்குரியவரிடம் கேட்கும் ஒரு காட்சி தமிழ் சினிமாவில் பிரபலம்.  

முதல் முத்தம்

முத்தங்கள் எதுவானாலும்   அவற்றில் ஒரு சத்தம் சாரம்சம் இருக்கும் நாம் ஒருவரிடம் பெறும் அனைத்து முத்தங்களுக்கும் அடிப்படை  அன்பு என்ற ஒரு அங்குசமே அதை அச்சாரமாக வைத்துதான் உலகம் இயங்குகின்றது. 

மேலும் படிக்க: ஆழ புரிதலில் ஆரம்பாகும் காதல் ஆண்டாண்டுகள் வாழும்

Tags:

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன