அரோகரா முருக கோசம் வினைகளை விளக்கும் தைபூசம்

  • by

தைபூசம் நாளை உலகெங்கிலும் உள்ள முருகன் கோவிலில் கோலகாலமாக கொண்டாடப்படுகின்றது.  பரமசிவன், பார்வதி அவர்களின் தவப்புதல்வன் முருகனை தரிசித்து வணங்குவார்கள். முருகனுக்கு உகந்த நாள் தைபூசம் என வழங்கப்படுகின்றது 

ஆண்டு  தோறும் தைபூசமானது  பூசமாதம் பூச நட்சத்திரம் அன்று  பௌர்ணமி திதியில் கொண்டாடப்படுகின்றது.  தைபூசத்தில் உலகம் உருவானதாக மக்கல் கொண்டாடி மகிழ்கின்றனர்.  தைபூசமானது முருகன் தரகாசுரனை வதம் செய்த நிகழ்வாக பழனியில் கொண்டாடப்படுகின்றது.

கந்தனுக்கு அரோகரா

தைபூச விரதம்:

தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு முருகனை வழிப்பாட்டுக்கு தேவையான பூஜை முறையகள் தயார் செய்து வணங்குவார்கள். 

முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும் . தைபூச நன்னாளில் முருகருக்கு  காவடி எடுத்து பால் குடம் தூக்குதல் போன்ற நிகழ்வுக்கு பிறகு கோவிலில் அன்னதானம் வழங்குவது வழக்கமாக கொண்டுள்ளனர்.. மக்கள் கோவில்களில் முருகனை வேண்டி வழிபடுவது வழக்கம் .

மேலும் படிக்க: வளர்பிறையில் சஷ்டி விரதத்தினால் வாழ்வில் வளம் பெறலாம்..!

பழனியில் தைபூசம்: 

பழனி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள  முருகனுக்கு பிரசித்திப் பெற்ற தளமாகும்.  திண்டுக்கல்லில் உள்ள பழனி மலையானது அறுபடை வீடுகளில் ஒன்றாகும். மூலவர் அருள்மிகு தண்டாயுதபாணி சிலையானது உள்ளது.  18 சித்தர்களுள் ஒருவரான போகர் மூலம் சிலையை நவபாஷண சிலையானது நிறுவப்பட்டுள்ளது. 

தைபூசத்தன்று பக்தர்கள் பழனியில் குவிவது வழக்கமாக கொண்டுள்ளனர்.  தைபூசம் முடிந்து அருகில் உள்ள கிராமத்தினர் இங்கு கலை நிகழ்வுகள் நடத்தி கொண்டாடி மகிழ்கின்றதை வழக்கமாகி கொண்டுள்ளனர். 

 தை பூசத்தன்று  முருகருக்கு என பக்தரள் தங்கள் வேண்டுதலை முன் வைத்து அதனை  கொண்டு வருவதுண்டு. 

 கந்தனுக்கு அரோகரா

தைபூசத்தன்று மக்கள் விதவிதமான முறையில்   அலகு குத்துதல் – நாக்கு, கன்னம், கை, உடம்பின் பிற பகுதிகளில் சிறிய பெரிய வேல் வடிவமுடைய ஊசியால் குத்திக்கொண்டு கோவிலுக்கு வருதல். சிலர் சின்ன ரதம் போன்ற வண்டியை பக்தர்களின் முதுகில் கொக்கிகளால் இணைத்து இழுத்து வந்து வழிபடுவார்கள். 

மேலும் படிக்க: விரதங்களின் மகிமை சாராம்சம் தெரிந்துகொள்வோமா

முருகருக்கு காவிடி எடுப்பது பிரசித்தம்  பெற்றது விழாவாகும். 

காவடியானது  பல வகைகளில் எடுக்கப்படுகின்றது. காவடியானது சர்க்கரை காவடி – சர்க்கரை பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகிறது.

தீர்த்தக் காவடியானது  கொடுமுடியிலிருந்து (கரூர் மாவட்டம்) காவிரி தீர்த்தம் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்பட்டு முருகருக்கு செலுத்தப்படுகின்றது. 

பறவைக் காவடி அலகு குத்தியவர் தொங்கியவாறு ஒரு வாகனத்தில் அழைத்து வரப்படுவார்.  பால் காவடியானது  பால்குடம் எடுத்து காவடியாக பக்தர்களால் கால்நடையாக எடுத்து  கொண்டுவரப்படுகின்றது. 

மச்சக்காவடி  மீன் நீருடன் பக்தர்களால் கால்நடையாக எடுத்து வரப்படுகின்றது குறிப்பிடத்தக்கது ஆகும். 

அரோகரா

மயில் காவடியானது    மயில் தோகையால் அலங்கரிக்கப்பட்ட காவடி பக்தர்களால் கால்நடையாக எடுத்து கொண்டு கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என்ற கோசம் வின்னை முட்ட எடுத்து வரப்படுவது வழக்கம் ஆகும். 

மேலும் படிக்க: அதிகாலை சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.!

இந்தியா, பர்மா, இலங்கை,  மலேசியா, சிங்கப்பூர் போன்ற இடங்களில் உலகம் முழுவதும் நாளை மிகுந்த பக்தி பெருக்குடன் கொண்டாட்டம் நடத்துவார்கள். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன