தர்பணம் தர சிறந்த நாள் தை அம்மாவாசை

  • by

 அம்மாவாசையில் ஆடி, புரட்டாசி, தை அமாவாசை நாள்களில் புண்ணிய தலங்களுக்குச் சென்று வருகின்றது. தை அம்மாவாசையில்  கொடுப்பது மிகவும் புண்ணியத்தைத் தரும். இந்நாளில் தீர்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீர் இறைத்து பித்ருக்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும். இவ்வாறு செய்தால், அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதுடன், அவர்களுடைய ஆசிகளும் நமக்குக் கிடைக்கும்   நம்பிக்கை உள்ளது. 

அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. சூரிய கலையும், சந்திர கலையும் சேருவதால் சுழுமுனை என்னும் நெற்றிக்கண் பலப்படுகிறது. அதனால் அமாவாசையில் ஜீவ சமாதிகள் புதிய உத்வேகத்தைப் பெறுகின்றன. அனேக குரு பூஜைகள் அதிஷ்டான பூஜைகள் அமாவாசையன்று நடத்துகின்றனர்.

மேலும் படிக்க – கிருஷ்ணன் பிறப்பதற்கான காரணம் என்ன..!

பித்ருக்களுக்கு தர்பணம்:

அமாவாசை

சாதாரணமாக இறந்த ஆவிகள் சந்திரனின் ஒளிக் கற்றையில் உள்ள அமிர்தத்தை சாப்பிடும் அதுதான் அதற்கு உணவு. அமாவாசையன்று சந்திரனின் ஒளிக்கற்றை ஆவிகளுக்குக் கிடைக்காது. அதனால் ஆவிகள் உணவுக்குத் திண்டாடும். பசி தாங்க முடியாமல் ரத்த சம்பந்தமுடைய வீடுகளுக்கு வரும்.

அமாவாசையன்று இறந்தபிதருக்களுக்கு தர்பணம்  கொடுப்பது அவசியம் ஆகும். அமாவாசையன்று புண்ணியத்தலங்களில் கடலில் நீராடலாம். நதியில் நீராடி அமாவாசையன்று  பிராத்தனை செய்தல் சிறப்பாகும்.  

கொங்கு நாட்டில் தை அமாவாசையன்று பழநி சென்று   காவிடி எடுத்து வழிபாடுகள் நடத்தி வழிபாடுகள் நடத்துவார்கள்.  தமிழ்நாட்டில் ஆற்றுப் பகுதி கடற்கரைகளில் தை அமாவாசை விமரிசையக வழிப்பாடுகள் நடந்து வருகின்றன. 

தை அமாவாசை சிறப்புகள்:

தை மாதத்தில் மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கின்றார் இது சிறப்பானதாகும்.  சனியின் வீடான மகரத்தில் அவரது தந்தையான சூரியன் பிரவேசிக்கின்றார். இதனால் சூரியனை பிதுர்காரகன் என்றும், சந்திரனை மாதுர்காரகன் என்றும் நம் முன்னோர்கள்   எடுத்துரைப்பார்கள்.

மேலும் படிக்க – இரவில் திறக்கப்படும் கோவில்…எங்கு தெரியுமா?

தர்ப்பணம்

சூரியனும், சந்திரனும் சனியின் வீட்டில் சஞ்சரிப்பதால் தை அமாவாசை கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

இன்று தர்பணம் செய்து சனி பகாவானுக்கு அதிபதி எம தர்மன்  காகத்திற்கு படையல் வைக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன