வெண்மையான பற்களை வீட்டிலிருந்தபடியே எப்படி பெறலாம்.!

Teeth Whitening Using Home Remedies

ஒருவரின் அழகை தீர்மானிப்பது அவர்களின் முக அழகும் அல்ல, சரும அழகு அல்ல, அவர்களின் புன்னகை தான். எனவே எவராக இருந்தாலும் வாய் விட்டு சிரிக்கும் போதுதான் அவர் மிக அழகாக தெரிவார். ஆனால் ஒரு சிலரோ தங்கள் பற்களில் இருக்கும் பிரச்சினைகளினால் வாய்விட்டு சிரிக்காமல் தங்களின் சிரிப்பை கட்டுப்படுத்திக் கொள்வார்கள். இதுபோல் அவஸ்தைப்படுபவர்கள் மற்றும் பற்கள் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே எளிமையான முறையில் உங்கள் பற்களின் பிரச்சனையை சரிசெய்யலாம்.

பற்களின் ஆரோக்கியம்

ஒரு சிலர் தங்களின் பற்கள் வெண்மையாக இல்லை என்று அதற்காக தேவையில்லாத பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் உண்மையில் ஆரோக்கியமான பற்கள் எப்போதும் சிறிது மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். இதை அறிந்து பற்களை வெண்மையாக மாற்றுகிறேன் என்ற எந்த செயலையும் செய்யாதீர்கள்.

நம்முடைய பற்கள் பாதிப்படைவதற்கு மிகப்பெரிய காரணமாக இருப்பது நாம் எடுத்துக்கொள்ளும் சக்கரைதான். இதன் மூலமாக நம் பற்களில் கிருமிகள் அதிகரித்து மிக விரைவில் நமது பற்கள் சொத்தையாகிறது. இதை தடுப்பதற்கு நீங்கள் எவ்வளவு இனிப்புகளை எடுத்துக் கொண்டாலும் இரவு உறங்குவதற்கு முன்பு தண்ணீர் குடித்து வாயை கொப்பளிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பற்களைப் பாதுகாக்கலாம்.

மேலும் படிக்க – பால் குடிப்பதற்கு முன்பு இது போன்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.!

பற்கள் ஆரோக்கியத்தை காக்கும் இயற்கை வழி

உங்கள் பற்கள் மற்றும் வாய் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் நல்லெண்ணெய்யைக் கொண்டு வாய் கொப்பளிக்க வேண்டும். நல்லெண்ணெயில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பதினால் இதை கொண்டு உங்கள் வாயில் அதிகாலையில் கொப்பளிப்பதன் மூலமாக உங்கள் பற்களில் இண்டு இடுக்குகளில் இருக்கும் கிருமிகள் வெளியேறி உங்கள் வாயை எப்போதும் புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ளும். அதே போல் இது உங்கள் பற்கள் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

காலையில் நாம் டூத் பேஸ்ட் கொண்டு பற்களை வளக்குவதற்கு முன்பாக பேக்கிங் சோடாவை கொண்டு பற்களை வளக்க வேண்டும். இதனால் உங்கள் பற்களில் இருக்கும் அதிகப்படியான மஞ்சள் தன்மை மற்றும் சொத்தைகள் ஏதாவது இருந்தால் காலப்போக்கில் மறைந்து விடும்.

மேலும் படிக்க – புல்லரிக்கும் நேரங்களில் நம் உடலில் என்ன மாற்றங்கள் ஏற்படும் ?

பற்களை காக்கும் பழங்கள்

உங்களில் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பற்களில் படிந்துள்ள கிருமிகளை அகற்ற உதவும் பழங்கள் ஸ்ட்ராபெர்ரி மற்றும் அண்ணாச்சி பழம் தான். இவைகளில் இருக்கும் அமிலங்கள் உங்கள் பற்களை பாதுகாப்பது மட்டுமல்லாமல் அதன் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.

ஆப்பிள் சீடர் வினிகரை கொண்டு உங்கள் பற்களை நன்கு தேய்க்கவேண்டும். இதிலிருக்கும் ஏராளமான வைட்டமின்கள் உங்கள் பற்கள் மற்றும் வாய்ப் பகுதியில் இருக்கும் தசைகளை வலுவாக்குகிறது.

மேலும் படிக்க – காலை நேர உடற்பயிற்சி அல்லது மாலை நேர உடற்பயிற்சி இவை இரண்டில் எது சிறந்தது?

கால்சியம் அவசியமானது

உங்கள் பற்களின் ஆரோக்கியத்திற்கு இரும்புச்சத்து, மாவுச்சத்து மிக முக்கியமானதாகும். எனவே முட்டை, பால் பொருட்கள், பேரிச்சம்பழம் போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் பற்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

இது அனைத்திற்கும் மேலாக நம் பற்களை பெரிதாக பாதுகாத்து விட்டோம் என்ற எண்ணத்தில் இல்லாமல் தினமும் இரண்டு முறை பல் துலக்குவது மிக முக்கியமான ஒன்று. இதனால் உங்கள் உடலில் பித்தம் சேராமல் உங்களை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன