முத்து பற்களை காக்க எளிய வழிகள் வேண்டுமா

  • by

ஆளும் வேலும் பல்லுக்குறுதி எனப் படித்திருப்போம். உடலில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய பகுதிகளில்  இதுவும் ஒன்றாகும். பாதுகாக்க வேண்டிய பற்களை, சரியாக பாதுகாக்காமல், பல நேரங்களில் பற்களில் பிரச்சனை வந்து, வலி எடுக்க ஆரம்பித்த பிறகே மருத்துவர்களை பார்க்கும் வழக்கத்தை  கொண்டுள்ளோம். 

 குழந்தை பருத்துவத்தில் பற்கள் முளைக்க ஆரம்பிக்கும் கால கட்டத்திலிருந்தே தினமும் இருமுறை பல் துலக்கி பற்களை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியது  நல்ல பழக்கம் ஆகும். தினமும் சாப்பிட்டபின் வாய் கொப்பளிப்பது அவசியம் ஆகும். அதுவே பலநோய்களை குணப்படுத்தும். 

உணவு மற்றும் திண்பண்டங்கள் சாப்பிடும்போது, பற்களில் ஏதாவது சிக்கிக்கொண்டால் அதனை குச்சி வைத்து குத்தாமல், வாய் கொப்பளித்து நன்கு சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் வெவெதுப்பான நீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து நன்கு வாய் கொப்பளிக்க வேண்டும். 

சத்து உள்ள உணவுகளை உண்பது பற்களை பாதுகாக்கும்.   நமது உடலில் உமிழ்நீரில் உள்ள அமிலம், உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பற்களில் சொத்தை  தன்மை அதிகரிக்கின்றது. . நமது அன்றாட உணவில் கால்சியம், வைட்டமின் ‘சி’, போன்றவைகளை அதிகம் சேர்த்துக்கொள்வது பற்களின் ஆரோக்கியத்திற் உதவும். 

மேலும் படிக்க: புத்துணர்ச்சி பொங்கும் ஆரோக்கியம் அதுவே ரோஜா

வாய் பாதுகாப்பு:

பற்கள் சுத்தமாக இருக்கும்  பொழுது நமக்கு ஆரோக்கியமான சூழல் இருக்கும். 

 வாய் துர்நாற்றத்தை போக்க வேண்டும்.  தினமும், நன்றாக பல் துலக்கலாம், இரு வேளை பல துலக்க வேண்டும், வாய், நாக்கு போன்றவற்றில் உள்ள அழுக்குகளை நன்கு சுத்தம் செய்வது சிறப்பாகும். 

மேலும் படிக்க:

பற்களில் கூச்சம் போக்குதல்: 

பிரிஜ்ஜில்  வைக்கப்பட்ட பொருட்கள், குளிரான உணவுகளை அப்படியே சாப்பிட கூடாது.   சிலலென்று இருக்கும் பொருள் சிலருக்கு பற்களில் கூச்சம் ஏற்படும். அதேப்போல புளிப்பு அதிகம் உள்ள பழங்கள், புளிப்பான உணவு பண்டங்களை உண்ணும்போதும் பற்கூச்சம் ஏற்படும். அதிகமான இனிப்பு சேர்த்த உணவுகளை சேர்க்கும்போதும் பற்கூச்சம்  வரும்.  

பொதுவாக பற்களின் மேற்புறப் பகுதியில் எனாமல் எனப்படும் கடினமான ஒரு பூச்சினால் பாதுகாக்கப்பட்டுள்ளது. நமது உடலின் மிக கடுமையான பகுதியாக பற்கள் இருப்பதற்கு இந்த எனாமல் தான் காரணம், பற்கள் உறுதியானது என கூறுவதை விட எனாமல் வலிமையானது எனக் கூறுவதே சரியானதாகும். இந்த எனாமல் பகுதி உணர்வற்றது அதனால் வலி தெரியாத பகுதியாகவும் இது உள்ளது. ஆனால் எனாமலுக்கு உள்ளே மிகவும் மென்மையான நரம்புச் செறிவுள்ள டெண்டீன் இருக்கிறது. வெளியே உள்ள எனாமலுக்கு சேதம் ஏற்பட்டு உள்ளே உள்ள டெண்டீன் வெளிப்பட்டால் அது வலியை ஏற்படுத்தும். எனவே எனாமல் சிதைவினால் ஏற்படுவதே பற்கூச்சம் ஆகும். 

பற்கூச்சம் ஏற்பட முக்கிய காரணம் நீங்கள் உபயோகிக்கும் பிரஸ்சும் அதனை உபயோகிக்கும் முறையும் காரணமாகும். பிரஸை பொருத்தவரையில் மென்மையான அல்லது நடுத்தரமுள்ள பிரஸை மட்டுமே உபயோகிப்பது பற்களுக்க்கு மிகவும் நல்லது ஆகும். மருத்துவர் ஆலோசனை கூறினால் மட்டுமே கடினமான பிரஸை உபயோகிக்கலாம். 

பல் துலக்கும் முறை அறிதல்: 

பல் கூச்சம் உண்டாக தவறான பல் துலக்கும் முறையை மாற்ற வேண்டும்.  தினமும் பல் துலக்க சிறந்த தரமான பற்பசைகளை உபயோகிக்க வேண்டும் இல்லையெனில் வேப்பகுச்சி  கடுக்காய் உப்பு சேர்த்து விலக்கலாம். . மேல்வாய் பற்களை மேலிருந்து கீழ் நோக்கியும், கீழ்வாய் பற்களை கீழ் இருந்து மேல் நோக்கியும் துலக்குவதே சரியான பல் துலக்கும் முறையாகும் இது பலருக்கு தெரிவத்தில்லை.

மேலும் படிக்க: வெண்மையான பற்களை வீட்டிலிருந்தபடியே எப்படி பெறலாம்.!

ஈறுகளில் வீக்கம்: 

 பல்லின் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்போது, அதை சரி செய்ய நம் உடலில் உள்ள சில ஹார்மோன்கள் சுரக்கும்.  இந்த ஹார்மோனால் இதய ஹார்மோனால் இதயநோயும் உருவாக வாய்ப்புள்ளது. எனவே கர்ப்பிணிகளின் பல் ஈறுகளில் ரத்த கசிவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறலாம்

சீரான பல் வரிசைக்கு : 

 நல்ல ஆரோக்கியமான பற்களுக்கு சீரான பல்வரிசையும் ஒரு முக்கியப் பங்கு வகிக்கும். பல் வரிசை சீராக இல்லை என்றால் பற்களின் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சிக்கி பற்களையும் ஈறுகளையும் தாக்கும்..  ஆகவே பற்கள் சீராக இருக்க வைக்க வேண்டியது அவசியம் ஆகும்.  

பற்களை தூய்மையாக   கழிவை போக்க தினமும் இருமுறை பல் விளக்க வேண்டும். இரு முறை வாய் கொப்பளிக்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை சோடா உப்பு, எலும்பிச்சை பொடி, கல் உப்பை பொடி செய்து வைத்து பல்லில் 10 நிமிடம் ஊற வைத்து துலக்குவது அவசியம் ஆகும்.  

கொய்யா இலையை நன்கு மென்று சாறு விழுங்கும் பொழுது வாயில் உள்ள கிருமிகள் அழியும். கொய்யா இலையை கொண்டு பல் துலக்கலாம். பல்லை மாதம் ஒருமுறை சீரகம், மிளகு பொடி கொண்டு தேய்த்து சுத்தப்படுத்தலாம்.

மேலும் படிக்க:புளி சாப்பிட்டு வந்தால் வாழ்வில் சலிப்பு போகும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன