கொரோனா பாதிப்பில் மூன்றாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு..!

  • by
tamilnadu spots third place in corona virus

சில வாரங்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் மிகக் குறைவாக இருந்தது. இருந்தும் தமிழகத்தில் 144 தடை உத்தரவை பிறப்பித்து மிகப் பாதுகாப்பாக தமிழக மக்களை பார்த்துக்கொண்டது தமிழக சுகாதாரத்துறை. இருந்தும் தற்போது நிலவரப்படி கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் மூன்றாம் இடத்தில் இருக்கிறது, இதற்கான காரணம் என்ன.

தற்போதைய நிலை

இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் கொரோனா வைரசின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 309 தொட்டுள்ளது. இன்னும் ஒரு சில வாரங்களில் இது அதிகளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏனென்றால் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட தமிழகத்தை சேர்ந்த மக்களின் மூலமாக கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்களின் மூலமாக இன்னும் பல பேர் பாதிக்கப் படலாம் என்று சுகாதாரத்துறை கருதி வருகிறது.

மேலும் படிக்க – மொபைல் போன் மற்றும் லேப்டாப்பை எப்படி பாதுகாப்பது..!

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

டெல்லியில் கிட்டத்தட்ட ஆயிரத்து 100 பேருக்கு மேல் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார்கள். இதில் மூன்று பேருக்கு கொரோனா  உறுதியானது. எனவே எந்த ஒரு அறிகுறியும் இல்லாததால் மற்றவர்கள் தங்கள் வீட்டிற்குள் தஞ்சம் அடைந்துள்ளார்கள். இதனால் அவர் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அவர் தெருக்கள் உள்ளவர்கள் அனைவரையும் சுகாதாரத்துறை பரிசோதித்து வருகிறது. இதைத் தவிர்த்து, 8 சுற்றளவில் உள்ள இடங்கள் முழுவதும் கிருமி நாசினிகள் மூலமாக சுத்தப் படுத்தி உள்ளார்கள். இந்த கொரோனா தொற்று சமூகதொற்றாக பராமல் இருப்பதற்கான செயல்களை சுகாதாரத்துறை சிறப்பாக செய்து வருகிறது.

பரிசோதிக்கும் முறை

கொரோனா தொற்று ஒருவருக்கு இருப்பதாக நினைத்தால் அதற்கு நாம் அவர்களின் ரத்த பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் தொண்டையில் இருந்து சிறிதளவு எச்சியை எடுத்து அதை பரிசோதித்து இவர்களுக்கு இந்த தொற்று இருக்கிறதா இல்லையா என்பதை உறுதியாகத் சொல்ல முடியும். எனவே எந்த ஒரு பரிசோதனையும் இல்லாமல் இந்த தொற்று உறுதி செய்யப்பட்டது என்று பாதிக்கப்பட்டவர்கள் யாரும் பயப்பட வேண்டாம். இதையும் மீறி உங்களை உங்கள் வீட்டில் தனிமையாக இருக்க அரசாங்கம் உத்தரவிட்டால் அதை நினைத்து பயப்பட வேண்டாம். ஒருவேளை நீங்கள் இந்த கிருமியின் மூலமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இந்த செயலை செய்கிறார்கள்.

மேலும் படிக்க – நம்ம ஊர் நாட்டு காய்கறிகள் எவை என தெரியுமா???

வீட்டுச் சிறையில் உள்ளவர்கள்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிட்டத்தட்ட 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை வீட்டில் தனிமை படுத்தியுள்ளார்கள். இவர்கள் வீட்டில் இருந்தபடியே இந்த கொரோனா வைரசின் பாதிப்பை குறைக்க முடியும். எனவே இவர்கள் கபசுரக்குடிநீர் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்கள் மற்றும் உணவுகளை உட்கொண்டு தங்கள் பலத்தை அதிகரிக்க லாம்.

கொரோனா தொற்று சமூகத்தொற்றாக மாறாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு வீட்டில் இருக்க வேண்டும். இப்போது வரை தமிழகம் இரண்டாம் நிலையில் தான் இருக்கிறது, அது மூன்றாம் கட்டத்திற்கு செல்லாமல் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிறது. எனவே இச்சமயத்தில் பொறுப்புடன் செயல்பட்டு நம் நாட்டை காப்பாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன