மருத்துவரின் சேவை அறியாத தமிழக மக்கள்..!

  • by
tamilnadu people not realizing the service of doctors

கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த சில வாரங்களாகவே மக்கள் அனைவரும் வேலைகளுக்கு செல்லாமல் வீட்டில் இருக்கிறார்கள். ஒரு சிலரோ வீட்டில் இருந்தபடியே தங்கள் வேலைகளை செய்கிறார்கள். இப்படி நாம் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும் போது தங்களை உயிரைப் பணயம் வைத்து கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களின் சேவையை, துளி கூட உணராமல் ஏராளமான மக்கள் அவர்களை அடித்து துன்புறுத்துகிறார்கள். இதுபோன்ற மிருக செயல் செய்த மனிதர்கள் நமது நாட்டில் நாம் வசிக்கும் பகுதியின் அருகிலேயே இருக்கிறார்கள். இதுபோன்ற மக்களின் செயலால் ஒட்டுமொத்த தமிழகத்திற்கே அவப்பெயர் உண்டாகியது.

மருத்துவர் சைமெண்ட்

கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள், கடந்த வாரம் வைரஸ் பாதித்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வந்ததால் அந்த வைரஸ் தொற்றினால் சைமெண்ட்டும் பாதித்தார். இவரை தொடர்ந்து தனது மகளுக்கும் அந்த தொற்று பரவியது. ஆனால் சிகிச்சை பலனின்றி மருத்துவர் சைமெண்ட் உயிரிழந்தார். இவரை சுகாதாரத்துறையினர் மிகப் பாதுகாப்பான முறையில் அடக்கம் செய்வதற்காக கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லரைக்கு அழைத்து சென்றுள்ளார்கள். ஆனால் இந்த விஷயம் அறிந்த அந்த பகுதி மக்கள் மருத்துவரை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் மற்றும் வாகனம் ஓட்டி வந்த ஓட்டுநர்கள், உறவினர்கள் போன்ற அனைவரையும் பலமாக தாக்கியுள்ளார்.

மேலும் படிக்க – கொரானா வைரஸ் கட்டுகடங்காமல் போகுமா

மனிதத் தன்மை இல்லாதவர்கள்

மருத்துவ குடும்பத்தினரை தாக்கியதோடு இல்லாமல் காவல்துறையினர் வரும் வரை அங்கே போராட்டத்தில் இருந்தாகள். பிறகு மக்கள் கூட்டம் கலைந்த உடன் இரவு மூன்று மணியளவில் ஒரு சில நண்பர் உதவியுடன் மருத்துவரை அடக்கம் செய்தார்கள். மக்களுக்கு சேவை செய்த இந்த மருத்துவருக்கு நிகழ்ந்த சோதனையை மக்கள் அனைவரும் கண்டித்தார்கள். எனவே இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளார்கள். அதைத் தவிர்த்து மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத் துறையினருக்கு இடையூறாக இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து 7 ஆண்டு வரை சிறைத் தண்டனை கொடுக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

மூளை இல்லாத மக்கள்

கொரோனா வைரசை பற்றிய விழிப்புணர்வுகளை தினமும் ஏதாவது ஒரு வாயிலாக நமது அரசு மக்களுக்கு தெரியப்படுத்துகிறது. இருந்தும் அதைப் பற்றிய தெளிவை அறியாமல் தவறான எண்ணத்தில் பிரச்சினையை தூண்டும் மக்களின் பேச்சை கேட்டு ஆட்டு மந்தை போல் இதுபோன்ற போராட்டங்களில் மக்கள் கலந்து கொள்கிறார்கள். இதுபோன்ற பிரச்சனையை தொடங்கியவன் உல்லாசமாக வீட்டில் இருப்பானே தவிர ஏமாற்றப்பட்ட மக்கள் போல் சிறைச்சாலை வசம் செல்ல மாட்டான். எனவே மக்கள் அனைவரும் சுயமாக சிந்திக்க வேண்டும், அதைத் தவிர்த்து சுற்றியுள்ளவர்கள் சொல்வதைக் கேட்டு இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடக்கூடாது.

மேலும் படிக்க – ஃபேஸ் மாஸ்க் அணியும் போது கவனிக்க வேண்டியவை..!

மனிதம் வளர்ப்போம்

தேமுதிக பொதுச் செயலாளர் நடிகர் விஜயகாந்த் அவர்கள் இந்த சம்பவத்தினால் மனமுடைந்து தனது கல்லூரியின் ஒரு பகுதியை அடக்கம் செய்வதற்காக மக்களுக்கு தானமாக அளித்துள்ளார். எனவே தலைவர்கள் செய்யும் நல்ல செயல்களை பின் தொடர்ந்து மக்கள் அனைவரும் மனிதத்தை மதித்து வாழ வேண்டும். நீங்கள் செய்யும் ஒரு செயல் உங்களுக்கு ஏற்பட்டால் உங்கள் உணர்வு எப்படி இருக்கும் என்பதை எண்ணுங்கள், அதன் பிறகு இது போன்ற செயலில் ஈடுபடுங்கள். இன்று நீங்கள் செய்யும் தவறுகள் நிச்சயம் ஒருநாள் உங்களுக்கு திரும்ப கிடைக்கும், அதை நன்கு அறிந்து எப்போதும் மற்றவர்களுக்கு நன்மையை மட்டும் செய்யுங்கள்.

இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் மிகப் பாதுகாப்பான முறையில் ஒருவருக்கு ஒருவர் உதவிகள் செய்யவேண்டும் அதை தவிர்த்து முட்டாள்தனமாக வைரஸ் தொற்று புதைக்கப்பட்ட பிணங்களின் மூலமாக பரவும் என்ற வதந்திகளை பரப்ப வேண்டாம். அதுபோல் மருத்துவர்கள் மிகப் பாதுகாப்பான முறையில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்கிறார்கள். எனவே மக்கள் பிறரின் பேச்சைக் கேட்காமல் அரசு சொல்வதைக் கேட்டு அதன்படி நடந்துகொள்ள வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன