கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருக்கும் தமிழ்நாடு..!

  • by
tamilnadu is in second place in corona virus affected states

கொரோனா தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கிய சில வாரங்கள் வரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தது. நம் அண்டை மாநிலமான கேரளாவில் தொடங்கப்பட்ட இந்தத் தொற்று படிப்படியாக உலகில் இருக்கும் இந்தியர்கள் மூலமாக இந்தியாவுக்குள் நுழைந்தது. ஒவ்வொரு மாநிலத்தின் எத்தனை கொரோனா வைரஸ் நோயாளிகள் இருக்கிறார்கள் எ‌ன இந்திய அரசாங்கம் பட்டியலை வெளியிட்டு வந்தது. இதில் முதல் மூன்று இடத்தில் இல்லாத தமிழகம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் அதிகமாக நோயாளிகளை கண்டறிந்தது. அதன் மூலமாக இப்போது 571 பேர் கொரோனா வைரஸின் மூலமாக பாதிப்படைந்துள்ளார்கள் என்று எண்ணிக்கையில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.

கடந்த சில நாட்கள்

டெல்லியில் நடந்த மாநாட்டில் ஒரு சில வெளிநாட்டவர்களுக்கு இந்த நோய்தொற்று இருந்திருக்கிறது. இதை அறியாமல் அந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளார்கள். இதில் தமிழகத்தில் இருந்து ஏராளமான தமிழர்கள் அங்கு சென்றுள்ளார்கள். போதுமான அளவு விழிப்புணர்வு இல்லாத இவர்கள் தங்களுக்கு நிகழ போகும் ஆபத்துக்களை என்னமால் அவரவர் வீட்டிற்கு சென்று உள்ளார்கள். இதன் மூலமாக இந்திய அரசாங்கம் மற்றும் தமிழக அரசு இந்த தகவலை பெற்று அனைவரையும் தனிமைப்படுத்தி வந்தார்கள். ஒருசிலர் இதற்கு ஒத்துழைத்தாலும் இந்தியாவில் பல பகுதிகளில் இந்த சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் ஏராளமானோர் அலட்சியம் காட்டினார்கள். இதன் மூலமாக கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்தது.

மேலும் படிக்க – கொரோனா வைரசை கண்டு பயப்படாதீர்கள்..!

தமிழகத்தின் நிலை

டெல்லியில் நடந்த மாநாட்டுக்குப் பிறகு தமிழகத்தில் செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் முதல் நாளிலேயே கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளார்கள் என்பது உறுதியானது. அதற்கு அடுத்த நாள் 75 பேரும் மற்றும் மூன்றாம் நாள் 102 பேரும் இதைத்தொடர்ந்து நேற்றைய தினம் 85 பேரும் பதித்துள்ளார்கள். இதனால் கடந்த நான்கு நாட்களில் மட்டுமே தமிழகத்தில் கிட்டத்தட்ட 400 பேருக்கு மேல் இந்த வைரஸ் தொற்றினால் பாதித்துள்ளார்கள்.

மேலும் பரவ வாய்ப்புள்ளது

இவர்கள் வசித்து வரும் இடங்களை சுற்றி சுமார் 8 கிலோமீட்டர் அளவிற்கு தமிழக அரசு கிருமி நாசினிகள் போன்றவற்றை பயன்படுத்தி சுத்தப் படுத்தி வருகிறார்கள். அதை தவிர்த்து இவர்கள் இருக்கும் அனைத்து பகுதிகளையும் முழுமையாக முடக்கி உள்ளார்கள். இதன் மூலமாக கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் மூன்றாம் நிலையை எட்டாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள்.

பொறுப்பாக இருக்க வேண்டும்

பாதிக்கபட்டவர்கள் யார், எந்த சமூகத்தை சார்ந்தவர்கள் என்று அவரைப் பற்றி எண்ணாமல் அவர்களை சக மனிதர்களாக பார்த்து, பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். அதைத் தவிர்த்து அவர்களின் குடும்பத்தை சமூகத்திலிருந்து ஒதுக்காமல் அன்பை பரிமாற வேண்டும். இதை தவிர்த்து பாதிக்கப்பட்டவர்களின் வீட்டு அருகில் இருப்பவர்கள் தங்கள் கைகளில் பல முறை சுத்தம் செய்ய வேண்டும். தேவை இல்லாமல் வெளியே வருவது மற்றும் தேவையில்லாத பொருட்களை தொடுவது என அனைத்தையும் தவிர்த்து சுத்தமாகவும், பொறுப்பாகவும் வீட்டிலேயே இருக்க வேண்டும்.

மேலும் படிக்க – தாய்ப்பாலுக்கு நிகரான தேங்காய்….!

இவை அனைத்தையும் சரியாக பின்தொடர்ந்தால் மட்டுமே இந்த கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றாக மாறாமல் பாதுகாக்க முடியும். உலகில் உயிரிழப்புகள் அதிகளவில் இருக்கும் நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் சமூக தொற்றாக மாறியது. இந்த நிலை நமக்கு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன