50 லட்சம் அளிக்கும் தமிழக அரசு..!

  • by
Tamilnadu government to provide 50 lakhs relief fund to doctor,police if they lose their life during corona crisis

கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் காவல்துறை போன்றவர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் தொகையை தமிழக அரசு வழங்கும் என தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் கூறியிருக்கிறார். இதை தவிர்த்து கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளில் ஈடுபட்டு உயிரிழந்த அனைவருக்கும் இந்த தொகையை அளிக்க உள்ளதாகவும் மற்றும் குடும்பத்தில் இருக்கும் ஒரு நபருக்கு அரசு வேலையையும் தமிழக அரசு கொடுக்கும் என முதலமைச்சர் கூறியிருக்கிறார்.

தமிழ்நாட்டின் நிலை

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் படிப்படியாக குறைந்து வந்தாலும், இன்று வரை கிட்டத்தட்ட ஆயிரத்து 629 பேருக்கு மேல் இந்த வைரஸ் தொற்றினால் பாதித்து உள்ளார்கள். நேற்றைய ஒரு நாளில் மட்டும் 33 புதிய நோயாளிகளை கண்டுபிடித்துள்ளார்கள், அதைத் தவிர்த்து 27 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளார். தமிழகத்தில் உள்ள சென்னை மிக மோசமான நிலைக்கு சென்றுள்ளது, அதாவது இன்று வரை கிட்டத்தட்ட 373 பேருக்கு மேல் இந்த நோய் தொற்றினால் பாதித்துள்ளார்கள். அதில் நான்கு பத்திரிக்கையாளர்களும் அடங்கும். இதைத் தவிர்த்து அடுத்த இடத்தில் கோயம்புத்தூர் இருக்கிறது, இங்கே கிட்டத்தட்ட 134 பேருக்கு மேல் பாதித்துள்ளார்கள், அதைத்தொடர்ந்து திருப்பூரில் 109 பேர் பதித்துள்ளார்கள்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸுக்கு வழிவகுக்கும் குடிப்பழக்கம்..!

கொரோனா பரிசோதனை

ராபிட் கிட் மூலமாக செய்யப்படும் பரிசோதனை தவறாக உள்ளது என ராஜஸ்தான் மருத்துவர்கள் கூறி வந்தார்கள். இதை தொடர்ந்து மத்திய அரசு இந்த ராபிட் கிட் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையிலும் நேற்று மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தமிழக அரசு பரிசோதித்து உள்ளது. இன்னும் கிட்டத்தட்ட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை தமிழக அரசு பரிசோதிக்க வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பில் இன்றுவரை மருத்துவமனையில் கிட்டத்தட்ட 946 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 662 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

சிகிச்சைக் கருவிகள்

கொரோனா வைரஸ் பாதிப்பினால் இன்றுவரை கிட்டத்தட்ட 18 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். தமிழகத்தில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 372 வெண்டிலேஷன் வசதிகள் உள்ளது. அதேபோல் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளும் இருக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே இந்த வைரஸ் தொற்று பரவும் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து உள்ளது. இருந்தும் இந்த வைரஸ் தொற்று சமூக தொற்றாக மாறாமல் இருப்பதற்கு தமிழக அரசு ஏராளமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும் படிக்க – ஆரோக்கிய சத்துக்கள் நிறைந்த கீரை வகைகள்

நிவாரண பொருட்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறாத சூழ்நிலை நிகழ்ந்துள்ளது. இதனால் இவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுகளை தமிழக அரசு அவரவர் வீட்டிற்கு வந்து இந்த மாதம் 25, 26 தேதிகளில் கொடுக்க உள்ளது. எனவே நாம் ரேஷன் கடைகளில் வரிசையில் நின்று இது போன்ற பொருட்களை வாங்காமல் வீட்டில் இருந்தே பெற்றுக் கொள்ளலாம்.

இந்த வைரஸ் தொற்றை முழுமையாக அழிப்பது மருத்துவர்கள் கையில் மட்டுமல்லாமல், மக்களாகிய நம்மிடம் இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு அனைத்து மக்களும் அரசாங்கம் சொல்வதைக் கேட்டு பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும். இல்லையெனில் வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் உங்களின் பெயரும் சேர்க்கப்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன