ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களை சுத்தம் செய்யும் தமிழக அரசு..!

  • by
tamilnadu government is cleaning 1000 streets per day

சில வாரங்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறையத் தொடங்கியது, ஆனால் மக்களின் அலட்சியத்தினாலும் மற்றும் வெளிமாநிலத்தில் இருப்பவர்களின் வருகையாலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த இரு நாட்களாக அதிகரித்து வருகிறது. அதிலும் சென்னையில் மட்டும் இந்த பாதிப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பொறுப்பில் முனிசிபாலிட்டி துப்புரவு பணியாளர்கள் மும்முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

சென்னை முனிசிபாலிடி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் சமூக தொற்றாக பரவாமல் இருப்பதற்கு மிக முக்கியமான காரணம் நம்முடைய துப்புரவு பணியாளர்கள் தான். வைரஸ் பாதிப்பு எந்த தெருக்களில் அதிகமாக இருக்கிறதோ அந்தத் தெரு முழுவதும் சிறப்பான முறையில் சுத்தம் செய்து வருகிறார்கள். அதிலும் சென்னையில் ராயபுரம், தண்டையார்பேட்டை வளசரவாக்கம் போன்ற இடங்களில் பாதிப்புகள் அதிகமாக உள்ளது, எனவே இங்கு அமைந்துள்ள அனைத்து வீடுகள், கடைகள் மற்றும் தெருக்கள் முழுவதும் துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்து கிருமி நாசினிகளை தெளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – ஊரடங்கை நீட்டித்தால் இந்தியாவுக்கு நல்லது..!

கோயம்பேடு சம்பவம்

சில நாட்களுக்கு முன்பு வரை கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டவர்களை நாம் தெளிவாக கண்டறிந்து அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து வந்தோம், ஆனால் நான்கு நாட்களுக்கு முன்பு கோயம்பேட்டில் பொதுமக்கள், கூட்டம் கூட்டமாக வந்த காய்கறிகளை வாங்கி சென்றார்கள். அங்கு காய்கறிகளை ஏற்றி வந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு இந்த தொற்று உறுதியானது. அதேபோல் அங்கே சலூன் கடையில் பணிபுரிந்து வந்த ஒரு நபருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று பலபேருக்கு பரப்பியிருக்கும் என சுகாதாரத்துறை சந்தேகிக்கிறது.

அதிகரிக்கும் நோயாளிகள்

வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகளைக் கொண்டு வரும் ஓட்டுநர்கள் மற்றும் பணியாளர்கள் மூலமாக இந்த வைரஸ் தொற்று பெரிய நகரங்களில் பரவி வருகிறது. இதனால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், மதுரை போன்ற இடங்களில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் முனிசிபாலிட்டி துப்புரவு பணியாளர்கள் இந்த தொற்று சமூக தொற்றாகாமல் இருப்பதற்கு பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும் முழுமையாக கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க – கொரோனா இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம்..!

முழுநேரப் பணி

24 மணி நேரமும் இடைவிடாமல் துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இதனால் உங்கள் ஏரியாவில் உள்ள குப்பைகளை மிகப் பாதுகாப்பான முறையில் அகற்றுவது மட்டுமல்லாமல் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகமாக உள்ள இடங்களை சுத்தம் செய்வதிலும் இவர்கள் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். இந்த வாரம் மட்டும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தெருக்களை இவர்கள் சுத்தம் செய்துள்ளார்கள். அதைத் தவிர இந்த வைரஸ் தொற்று பரவுவதைத் தடுப்பதற்காக இனிவரும் நாட்களிலும் இவர்கள் பணி சுமை அதிகமாக இருக்கும்.

இந்த வைரஸ் தொற்றை முழுமையாக அழிப்பதற்கு மக்கள் உதவ வேண்டும். இதனால் இந்த வைரஸ் தொற்று எளிதாக எடுத்துக் கொள்ளாமல் உங்கள் வீட்டில் இருக்கும் குப்பைகளை பாதுகாப்பான முறையில் வெளியே குப்பைத்தொட்டியில் போடுங்கள். ஏற்கெனவே வேலை சுமை அதிகரித்திருப்பதினால் துப்புரவு பணியாளர்கள் மன அழுத்தத்தில் உள்ளார்கள். எனவே இவர்களின் பணி சுமையை மக்களாகிய நாம் புரிந்து கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன