பழந்தமிழர்களின் வியக்கதக்க பாரம்பரிய விருந்தோம்பல்

  • by

 விருந்தினர்களை வரவேற்று உணவிடுதல்  இல்லற வாழ்வுக்கு இனியது ஆகும். சக உயிர் காத்தல், பசித்தோர்க்கு உணவு வழங்குதல் ஆகும். உணவு என்பது  முக்கியமான மருந்து ஆகும். உணவின் தேவை நாம் அறிய வேண்டும் மற்றும் அதன் தேவையுடையோருக்கு பகிர்தல் என்றபண்பை பெற வேண்டும். விருந்தோம்பல் என்ற சொல் இன்முகம் கலந்து வரவேற்று, வீடு  தேடி வந்தோர்க்கு விருந்து உபசரித்தல் என்பது சிறப்பாகும். 

உறவினர் இன்றி,  தெரியாதோர் வழிபோக்கர்கள் வந்தால் அவர்கள் திண்ணையில் தங்கி செல்வார்கள் அந்தளவிற்கு நம்மிடையே மனிதம் இருந்தது ஆகும். விருந்தோம்பலில் நம்மை நாடி வரும் விருந்தினருக்கு உணவு, உறைவிடம் அளித்தல் மட்டுமல்லமல் இனிய சிறித்த முகத்துடன், விருந்து பொருளாகா கூழும் கொடுக்கலாம். இதுவே அறமாகும்.  இந்த உலகில் அறத்தின் உயர்ந்த அறமான கருதப்படுவது விருந்தோம்பல் ஆகும். அக்காலங்களில் திருவிழா என்பது பிரசித்தம் பெற்றது ஆகும். பழந்தமிழர்கள் உணவு சமைத்து சுற்றத்தாருடன் பகிர்ந்து சாப்பிடுவார்கள். 

மேலும் படிக்க: கிராம்பு பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்..!

அக்காலத்தில் சாதரண மக்கள்  தங்களின் இல்லறத்தில் நடைபெறும் திருமண விழாக்களை அருகில் இருப்போர் ஒததுழைப்பில் அவர்கள்  வீட்டு வாயில் வரை நீட்டு பந்தல் புழக்கம் செய்வார்கள். அருகருகே இருப்போர்களுக்காக அக்கம் பக்கத்தாரும் தமது வீட்டை அழங்கரித்து  விருந்து உபசரிப்பார்கள். வருகின்ற விருந்தினருக்கு உணவு, தங்க இடம் ஆகியவை அண்டை வீட்டில் பெறுவார்கள். அண்டை வீட்டார் வீட்டு விழாவுக்காக அருகருகே இருப்போர்கள் அனைத்தும் விட்டுக் கொடுப்பார்கள் இதுவே நல்லறமாக  பரஸ்பரம் நட்பு பேணுதல் எனப்படுகின்றது. விருந்தினர் ஒருவர் வந்து சென்றபின் அடுத்து வரும் விருந்தினரை வரவேற்க வாசலில் தயாராக இருப்பார்கள்.  

அந்த காலத்தில் ஒரு வீட்டில் விருந்தினர்கள் உணவுக்கு வரும் பொழுது விருந்து படைக்க  அத்தை, மாமியார், சித்தி போன்றோர் அனைவரும் விருந்துவீட்டில் அனைத்து உதவிகளும் செய்வார்கள். வீட்டுக்கு விருந்தினராக வரும் அனைவரும் அவரவர்களுரிய வேலையினை செய்வார்கள் அதனால் விருந்தில் ஒவ்வொருவருக்கும் தனிபட்ட வேளலைப்பளு என்பது அதிகரிக்காது விருந்தில் கொண்டாட்டம், அன்பு, ஒற்றுமைப் பகிர்வு என்பது இருக்கும். 

மேலும் படிக்க: அக்காலம் முதல் இக்காலம் வரை பெண்கள் மஞ்சளை பயன்படுத்தும் காரணங்களை காணலாம்..!

அண்டை நாட்டில் இருந்து இந்தியா வருவோர்க்கு  இன்முகம் காட்டி வரவேற்று அவர்களுக்கு நீர் ஆகாரம், உணவு வழங்குதல். அவர்களுக்கான  தனித்துவம் கொடுத்து பழகுதல் என்பது அவசியம் ஆகும். நாம் வாழ்வியலில் எதிரியாக இருந்தாலும் இன்முகத்துடன் வரவேற்பது நமது சிறப்பான பண்பாகும்.  விருந்தினரை உபசரிக்க தெரியாதவர்களை நமது பாரம்பரியம் செல்வந்தர்களானாலும் தரித்திரம் பிடித்தவர்களாகவே இருப்பார்கள். நமது தமிழக பாரம்பரியத்தில்  உழைத்து சம்பாதிப்பதை உணவுக்காகவே செல்வு செய்வார்கள். 

அறச்சாலைகள் அமைத்து வருவோர் போவோர்க்கு உணவு வழங்குவது அவசியம் ஆகும்.  அதற்காகவே மதுரை போன்ற பெரிய நகரங்களில் அறச்சாலைகள் உருவாக்கி விருந்தோம்பல் செய்தனர்.  அன்றைய தமிழர்கள் தங்களின் தானத்தில் பலஆ, வாழை, முந்தரி போன்றவற்றை கொடுத்து சிறப்பித்து வாழ்ந்தனர். அசைவம்,  கீரை, பால், தயிர் ஆகியவை அனைத்தும் கொடுத்தனர். அன்னச்சத்திரங்கள் பல வழிப்போக்கர்கள் பசியை போக்குவதை வழக்கமாக கொண்டனர். இது குறித்த  புத்தகங்கள் எல்லாம் இதனை உணர்த்துகின்றன. இன்றைய காலத்தில் நாம் அறிய வேண்டியது அனைத்தும் அவசியம் ஆகும். எந்திர உலகில் மறந்து போன வாழ்க்கையை நாம் திரும்பி கொண்டு வருதல் அவசியமாக இருந்தது. 

மேலும் படிக்க: மஞ்சள் சூப் குடியுங்கள் உடலை தொற்றிலிருந்து காக்கலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன