நோய்களை குணமாக்கும் தன்வந்தரி மந்திரம்!

  • by

ஒரு மனிதன்  தன் துறையில் சிறந்த  செயலாற்ற அவனுக்கு நல்ல மனநிலை மற்றும்  உடல் ஆரோக்கியம் இருக்க வேண்டும். நமது உடலில் நல்ல மனநிலை ஆரோக்கியமான உடல்நிலை என்பதைப் பெற ஆரோக்கியமான நமது வாழ்வியல் இருக்க வேண்டும். 

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல  ஆரோக்கியமான கீரைகள், பழங்கள், காய்கறிகள், அரிசி, கோதுமை, பருப்பு, பயிறு, தானியம், மூலிகைகள், கசாயங்கள் ஆகியவற்றுடன் நல்ல உடற் பயிற்சி தினம் காலார நடத்தல் உடலுக்கு  தினமும் ஒரு மணி நேரமாமவது வேலை கொடுக்க வேண்டும். நீர் தேவைப்படும் பொழுது குடிக்க வேண்டும். பழச்சாறு ஐஸ் சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். டீ, காபி தவிர்த்தல் நல்லது மீறிக் குடித்தால் முடிந்தவரை நாட்டுச்  சர்க்கரை சேர்த்து குடிக்க வேண்டும். இப்படி இருந்தால் ஆரோக்கியத்துடன் இருக்கலாம். வீட்டில் ஏதாவது சிக்கல் எனில் நிம்மதியாக கோவில் குளம், என காலார நடந்து வந்து மூச்சுப் பயிற்சி செய்தல் போதுமானது ஆகும். 

நமது பாஸ் வோல்டில் அனைத்திலும்  வேகம் உணவுகள் அனைத்திலும் அவசரம் இன்ஸ்டண்ட் என்று வாழ்ந்தோம்.  பீஸா, பர்கர், வேகாத உணவுகள் பப்பில் சாப்பிடுதல், கார்பனேட் குளிர்பானங்கள் என கண்ணாபின்னா என்று வாழ்வியலைத் தொலைத்தோம். வெளி நாட்டு உணவை வேகமாக  தின்று அடிமையானோம். அவை நம் வாழ்வியலை முழுதாக முடித்துவிட்டது. அதன் விளைவு இன்று கொரானா போன்ற கொசு நோயை எதிர் கொள்ள முடியாமல், ஊரடங்கில் உறங்கி கிடக்கின்றோம். 

இந்தியா எப்படி பட்ட நாடு, இங்குள்ளவர்கள் உடல் மனம் இரண்டிலும் வல்லவர்களாக இருந்தனர் அவர்களை வியாபாரக் கிடங்காங்கி குளிர்காய்வோம்  என பலர் குளிர் காய்ந்து கொண்டனர் அதன் விளைவுதான் இன்று கொரானா போன்ற கொசு நோயை நாம் எதிர்கொள்ள தவிக்கின்றோம். ஆமாம் இதைவிட பெரிய காலரா, அம்மை போன்ற நோய்கள் எல்லாம் போ வெளியே என துரத்தினோம். காரணம் நம்மிடம் உடல் மன தைரியம் அவ்வாறு இருந்தது. இன்று அச்சம் பயம் என அடங்கி கிடக்கின்றோம். 

மேலும் படிக்க: நோய் எதிர்ப்பு சக்தி என்றால் என்ன..!

 அதிவேக காலகட்டத்தில் பல புதிய வகையான நோய்கள் மனிதனைத் தாக்குகின்றன.  நமது வாழ்வியல் மாற்றத்தால் மருந்துகளை உட்கொண்டாலும் அந்நோய்கள் குணமாக கால தாமதமாகின்றது அதற்குள் நாம் சாவின் விழிம்புவரை வேதனை அனுப்பவிக்கின்றோம். இதற்கு என்ற ஒரு உபாயம் ஆன்மீகம் காட்டிய உபாயம் எளியது  “தன்வந்திரி பகவான்” மந்திரம் ஆகும். அவரை வணங்கி பின்பற்றி வழிப்பட்டால் நமது நோய்கள் அனைத்தும் குணமாகும். 

தன்வந்திரி மந்திரம்: 

ஓம் நமோ பகவதே மஹா சுதர்சன வாசுதேவாய தந்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வபய விநாசாய சர்வரோக நிவாரணாய த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீமஹாவிஷ்ணு ஸ்வரூப ஸ்ரீதந்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஒளஷத சக்ர நாராயண ஸ்வாஹா

தன்வந்திர மந்திரத்தின் பொருள்: 

விஷ்ணுவின் அவதாரமான வாசுதேவேரே,  நோய்களை நீக்கும் அமிர்த கலசத்தைக் கொண்டவரே,  நன்மைகள் விதைத்து அனைத்து தீமைகளை பொசுக்கும் வாசுதேவரே, தன்வந்திரி பகவானை வணங்குகின்றேன்.

இந்த மந்திரத்தை விஷ்ணு பகவானுக்குரிய புதன், வெள்ளிக்கிழமைகளில் பெருமாள் கோவில்கள் அல்லது நமது வீட்டில் அவரது படத்திற்கு முன்பு 9 அல்லது 108 முறை சொல்லி வருதல் சிறப்பாகும். 

இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் நாம் ஜெபித்தால் வெற்றி தேடி வரும் மேலும் பௌர்ணமி தினத்திற்கு மறுநாளிலிருந்து இம்மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிக்கும் பொழுது  நமது உடல் பிணியை போக்கும். தேய்பிறை சந்திரனைப்போல் நம் நோய்களும் தேய்ந்து முற்றிலும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: வீட்டுக்குள் முடங்கியது நாடு 21 நாட்கள் நீட்டிக்கும்!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன