ஒடிடி வெளியீடு சர்ச்சையில் தியேட்டர் உரிமையாளர்கள்..!

  • by
tamil cinema facing many problems because of OTT release of movies

கடந்த சில வாரங்களாகவே நடிகை ஜோதிகா ஏராளமான சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள், அதில் ஒருசில தொழிலதிபர்களை பாதிக்கச் செய்யும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதாவது நடிகை ஜோதிகா நடித்த “பொன்மகள் வந்தால்” என்ற திரைப்படத்தை அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூரியா நேரடியாக அமேசான் பிரைமில் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளார். இதனால் தியேட்டர் உரிமையாளர்கள் அனைவரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள். இதனால் எதிர்காலத்தில் ஜோதிகா மற்றும் சூர்யா நடிப்பில் வெளியாகும் என்ற திரைப்படமாக இருந்தாலும் இவர்கள் திரையரங்குகளில் வெளியிட மாட்டார்கள் என்று கூறியுள்ளார்கள்.

சூரரைப் போற்று

தயாரிப்பாளர்கள், தான் முதலீடு செய்த பணத்தை திரும்பப் பெறுவதற்கு ஏராளமான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இதனால் குறைந்த அளவு லாபத்தைக் கொண்டு பொன்மகள்வந்தாள் என்ற திரைப்படத்தை அமேசன் பிரைமிடம் நடிகர் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் விற்றுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள், டிஸ்ட்ரிபியூட்டர்கள் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என அனைத்து திரையரங்கு உரிமையாளர்களும் சூர்யாவின் செயலை எதிர்த்து வருகிறார்கள். இதைத் தவிர்த்து அவர் நடிப்பில் வெளியாகவிருக்கும் “சூரரைப்போற்று” திரைப்படத்தை வெளியிட தடை செய்ய உள்ளதாக கூறுகிறார்கள்.

மேலும் படிக்க – ஒரு கோடியே 30 லட்சம் அளித்த நடிகர் விஜய்..!

சூர்யாவின் கருத்து

இதைப்பற்றி சூர்யா தனது கருத்தையும் வெளியிட்டுள்ளார், அதாவது திரையரங்குகள் இருக்கும் நிலையில் திரைப்படங்களை இப்போது வெளியிடுவது என்பது சாத்தியமற்றது, அதைத் தவிர்த்து திரை அரங்குகள் திறக்கப்பட்டு அதை மீண்டும் பராமரிப்பதற்கு அடுத்த ஆறு மாதம் கடந்து விடும். இதனால் முதலீடு செய்த பணம் அனைத்தும் வீணாகி நஷ்டத்தில் முடியும் நிலை ஏற்படும் என்ற கருத்தை வெளியிட்டுள்ளார். சினிமாவில் நுழைந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் தங்கள் வாழ்க்கை இழந்துள்ளார்கள், அந்த நிலை இதன்பின் யாருக்கும் வரக்கூடாது என்பதற்காக இதுபோன்ற யோசனை வரவேற்கத்தக்கது என நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் கூறியுள்ளார்.

ஒடிடி வெளியீடு

நேரடியாக அமேசன் பிரைம், நெட்ப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற ஒட்டிடி தளங்களில் திரைப்படத்தை வெளியிடுவதன் மூலமாக குறைந்த செலவில் எடுக்கப்படும் திரைப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நடிகர் சேரன் மற்றும் ஏராளமானோர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடாமல் ஏராளமான படங்கள் இருக்கிறது. இது மேலும் அதிகரிக்காமல் இருப்பதற்கு இந்த வழியே சிறந்தது என்று ஒருசில தயாரிப்பாளர்கள் கூறி வருகிறார்கள். இருந்தும் திரையரங்குகளில் திரைப்படத்தை வெளியிடுவதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன் பெறுகிறார்கள். இது நேரடியாக சின்னத்திரை அல்லது ஒடிடியில் வெளியிடுவதன் மூலமாக இவர்கள் பெறும் பயன்கள் அனைத்தும் முடங்கி வறுமையில் பிடிக்கு செல்ல வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க – ஊரடங்கை உற்சாகமாக வைத்துக் கொள்ளும் யூடியூப்பர்ஸ்..!

எனவே நாடு இயல்புநிலைக்குத் திரும்பியவுடன் இதைப் பற்றி தெளிவான முடிவுகளை சினிமாத்துறையினர், திரைப்பட சங்கம், திரை அரங்கு உரிமையாளர்கள் போன்ற அனைவரும் தேர்ந்து எடுப்பார்கள். இன்று வரை அதிக அளவிலான வரிகளை செலுத்தி வருபவர்கள் திரையரங்குகள் மற்றும் மால்களை வைத்திருப்பவர்கள் தான். இதனால் இவர்கள் வருமானம் குறைந்தால் இவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படையும் என இவர்களின் கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். எதுவாக இருந்தாலும் எதிர் காலத்திற்கு ஏற்றார்போல் நாம் மாறிக் கொள்வதுதான் நமக்கு நல்ல தீர்வைத் தரும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன