கவர்ச்சியான உடலமைப்பை சினிமா பிரபலங்கள் எப்படி பெறுகிறார்கள்?

Tamil Celebrity weight loss transformation from fat to fit

இயல்பாக வாழும் பெண்களை ஒப்பிடுகையில் சினிமா பிரபலங்களில் உடல் அமைப்பு மிகவும் கவர்ச்சியாகவும், ஜீரோ வடிவில் இருக்கும். இதற்காகவே இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் மற்றும் ரசிகைகள் இருக்கிறார்கள். திரையில் அவர்கள் மிக ஒல்லியாக மற்றும் மெழுகு பொம்மை போல் தெரிகிறார்கள், அதுவே அவர்களை நேரில் பார்க்கும் போது திரை வடிவில் இருப்பதை விட மிகச் சிறிதாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட உடலமைப்பை அவர்கள் எப்படி பெறுகிறார்கள். சாதாரணமாக சராசரியாக ஒரு பெண் தனது உடலமைப்பை ஒல்லியாக வைத்துக் கொள்வது என்பது இயலாத காரியமாகவே இருக்கிறது. என்னதான் டயட் மெயின்டெய்ன் செய்தாலும் ஒரு சில மாதங்களே தங்கள் உடல் அமைப்பை ஒல்லியாக தக்க வைக்க முடிகிறது, ஆனால் சினிமா பிரபலங்கள் மட்டும் 20 முதல் 60 வயது வரை ஒரே அளவில் இருக்கிறார்கள். இதை எப்படி அவர்கள் பெறலாம் என்பதை காணலாம்.

நடிகைகளின் பர்சனல் ட்ரெயினர் 

தமிழ் செலிபிரிட்டி தங்களின் உடல் அமைப்பை மெலிதாக வைத்துக் கொள்வதற்காக அவர்கள் தங்களுக்கென தனி ட்ரெயினரை வைத்துக்கொள்கிறார்கள். இவர்கள் அந்த நடிகை எப்போது எழுந்திருக்க வேண்டும், எப்போது என்ன சாப்பிட வேண்டும், எப்போது உறங்க வேண்டும் என்ற எல்லாவற்றையும் நேரத்திற்கு ஏற்றாற்போல் அவர்களை செய்யுமாறு கேட்டுக்கொள்வார்கள், இல்லையெனில் வற்புறுத்துவார்கள். இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் எழுந்து அந்த ட்ரெயினர் சொல்வதைப்போல் செய்வார்கள். ஒரு சில நடிகைகள் ட்ரெய்லர் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. ஏன் என்றால், எல்லோருக்கும் இருப்பதைப்போல் அவர்களுக்கும் சோர்வான மனம் இருக்கும். காலை எழுந்திருத்து இதையெல்லாம் செய்ய வேண்டுமா என்ற மனச்சோர்வினால் சில நடிகைகள் உடற்பயிற்சி மற்றும் உணவு முறைகளை கடைப்பிடிப்பதில்லை ஆனால் ட்ரெயினர் என்பவர் ஒரு ஆசிரியர் போல், உங்களுக்கு எது எப்போது தேவை என்பதை உணர்ந்து உங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உங்களுக்கான உடல் அமைப்பை உண்டாக்கி தருவார்கள்.

மேலும் படிக்க – சோலார் எனர்ஜியை பயன்படுத்துவதினால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்

ஜீரோ அளவு உடலுக்கு ஆரோக்கியமான உணவு

நடிகைகள் மெலிந்த உடல் அமைப்பை பெறுவதற்காக உணவுகளில் மிகப்பெரிய கட்டுப்பாட்டு விதிகளை விதிக்கிறார்கள். இதற்காக அவர்கள் ருசியான மற்றும் அதிக உணவுகளை உட்கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். அதை தவிர்த்து ஒருசிலர் மாமிச உணவுகளையும், காரமான உணவையும் தவிர்க்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் கெட்ட கொழுப்புகள் சேராமல் உடலமைப்பை சரியாக பார்த்துக் கொள்கிறது.

ஒரு சினிமா பிரபலம் காலையில் முட்டையின் வெள்ளைக்கரு, குறைந்த கொழுப்பு கொண்ட பால் மற்றும் சிறிய தோசை, இட்லி, சிறிதளவு உப்புமா போன்ற உணவுகளை உட்கொள்கிறார்கள். இந்த உணவுகளில் அனைத்திலும் மிக சிறிய அளவே ஆரோக்கியமான சர்க்கரை மற்றும் உப்பை சேர்த்துக் கொள்கிறார்கள்.

மதிய உணவில், இவர்கள் இரண்டு சப்பாத்தி, வெஜிடபிள் சாலட் மற்றும் கிரில் செய்யப்பட்ட மீன் சாப்பிடுகிறார்கள். இது அனைத்தும் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க பட்டதாக இருக்கவேண்டும். சாயங்கால நேரங்களில் பில்டர் காபி மற்றும் நட்ஸ் சாப்பிடலாம்.

மேலும் படிக்க – உடல் எடையை குறைப்பதற்கு பெண்கள் பயன்படுத்த வேண்டிய உணவுகள்..!

இரவில், அதாவது தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உங்களுக்கு விருப்பமான சிறிதளவு சப்பாத்தியையும் அதற்கு இணையாக காய்கறிகளால் செய்யப்பட்ட சப்ஜி மற்றும் கிரீன் சாலட் சாப்பிடலாம். உங்களுக்கு தேவைப்பட்டால் இடையிடையே பழங்களையும், பச்சை காய்கறிகளையும் சாப்பிடலாம். அதைத் தவிர்த்து இளநீர், பழச்சாறுகள், குடிநீர் போன்றவற்றை கட்டுப்பாடில்லாமல் அருந்தலாம். இது அனைத்தும் மிக எளிதில் ஜீரணம் ஆவதினாள், இதனால் உங்களுக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படப்போவதில்லை.

உடற்பயிற்சி அவசியமான ஒன்று

ஜீரோ உடல் அமைப்பை பெறுவதற்கு நாம் உணவு முறைகளை கடை பிடித்தால் மட்டும் போதாது, நமது உடலுக்குத் தேவையான ஆற்றல் மற்றும் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. எல்லா பிரபலங்களும் தங்களுக்கு விருப்பமான உடற்பயிற்சி கூடங்களுக்கு சென்று அவர்கள் செல்லும் உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமாகத்தான் உடலை இவ்வளவு மெலிதாக வைத்துக் கொள்கிறார்கள்.

அதிகாலை முடிந்தவரை சூரியன் வருவதற்கு முன் எழுந்து 30 லிருந்து 40 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இதனால் உங்களின் பின்புறம் மற்றும் இடுப்புப்பகுதி மெலிதாக இருக்கும். அதைத்தொடர்ந்து உடம்பில் சில வளைவு நெளிவுகளை செய்து பின்பு உடற்பயிற்சியை தொடங்க வேண்டும். தோள்பட்டை, உடல், இடுப்பு, தொடை, பாதங்கள் என எல்லாவற்றிற்கும் ஏற்றார்போல் உடற்பயிற்சி செய்வது மிக அவசியம்.

மேலும் படிக்க – நம் தொப்பையை குறைப்பதற்கான எளிய வழி.!

நீங்கள் ஒரு பிரபலம் போல் இருக்க வேண்டுமென்றால் இந்த அனைத்து வழிகளையும் சரியாக கடைபிடிக்க வேண்டும். சராசரியாக வாழும் ஒரு பெண்ணிற்கு இது சற்று கடினமானவை, ஆனால் தன்னால் முடியும் என்ற எண்ணம் கொண்ட பெண்கள் இதை முயற்சி செய்யலாம். நாம் வாழும் ஒரு வாழ்க்கையில் நமது உடல் மெலிவாக இருப்பதற்கு பிடித்த உணவுகளை மற்றும் பிடித்த வாழ்க்கையை புறக்கணித்து இது போல் தங்களை வாட்டி வதக்கி வாழ்க்கையை வாழ விரும்புவர்கள் இந்த வழிகளை கடைபிடிக்கலாம். சினிமா பிரபலங்களின் தொழில் வளர்ச்சிக்காக இது போன்ற கஷ்டங்களை சந்தோஷமாக மாற்றி ரசித்து செய்கிறார்கள். ஆனால் உங்கள் வாழ்க்கைக்கு எது தேவை என்பதை உணர்ந்து அதற்கேற்ப டயட்டை வகுத்துக் கொள்ளுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன