கணையத்தை பார்த்துக் கொண்டால் கவலை இல்லாமல் வாழ முடியும்…….!

  • by
taking care of your pancreas can improve your life span

இறைவனது படைப்பில் மனித உடலில் வியக்கத்தக்க பல அதிசயங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மனித உடலுக்குள் 100 கிராம் அளவில் இருக்கும் மிகச்சிறிய ஒரு உறுப்பு நமது அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தி ஆற்றலை கொடுக்கிறது.  அந்த உறுப்பின் பெயர் தான் கணையம். கணையத்தின் வேலை என்ன? அதில் ஏற்படும் தொற்றுகள் என்ன? அதற்கான தீர்வுகள் என்ன? விளக்கமாக பார்க்கலாம்.

கணையத்தின் வேலை என்ன தெரியுமா? 

நாம் உண்ணும் உணவில் உள்ள உணவை செரிக்கச் செய்து உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு தேவையான அமினோ அமிலங்கள் , கிளிசரின்,  கொழுப்பாகவும் மாற்றி ஆற்றலை அளிக்கும் அளிக்கும் முக்கிய வேலைதான் கணையத்தை சேரும். நாம் உண்ணும் உணவானது செரிப்பதற்கு தேவையான நொதிகளை சுரப்பது கணையம் தான்.

இது வயிற்றின் நடுப்பகுதியில் இரைப்பைக்கு பின்னால் அமைந்துள்ளது. கணையம் நாளமுள்ள சுரப்பிகள் மற்றும் நாளமில்லா சுரப்பிகள் என இருவகை சுரப்பிகளையும் சுரக்கின்றது. இது இருவிதமான பணிகளை செய்கிறது. அவை 

எக்ஸ்ரோ கிரைன்

என்டோ கிரைம்

எக்ஸ்ரே கிரைம் சுரப்பி திரவம், புரதம், கொழுப்பு போன்றவற்றை செரிக் பயன்படுகிறது. இந்த எண்டோகிரைன் சுரப்பியானது  ஹார்மோனை சுரக்கிறது. இது உடலுக்குத் தேவையான குளுக்கோன் மற்றும் இன்சுலினை கொடுக்கிறது. இவை இரண்டும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

மேலும் படிக்க – கொரோனா வைரஸின் தாக்குதல் எப்போது முடிவுக்கு வரும்..!

கணைய அழற்சி என்றால் என்ன?

இவ்வளவு சிறப்பு மிக்க பணிகளை செய்யும் கணையத்தில் ஏற்படும் நோய்த்தொற்று தான் கணைய அழற்சி. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது உடற்பருமன், உடலில் படியும் அளவுக்கு அதிகமான கொழுப்பினால் இந்த நோய் ஏற்படுகிறது.

நாம் மேற்கொள்ளும் உணவு முறைகளாலும், மதுப்பழக்கம் புகைப்பிடித்தல் போன்ற காரணங்களால் கணையத்தில் வீக்கம் ஏற்படுகிறது. இதனால் கணையத்தில் சுரக்கப்படும் சுரப்பி சற்று கடினமான நீராக இருக்கும் அவை வீக்கத்தினால் வெளி செல்லமுடியாமல் கணை யத்திலேயே தங்கிவிடுகின்றன. இதனால் கணையத்தில் புண் ஏற்பட்டு ரத்தமானது கணையத்தில் உட்புறம் செல்கிறது. இதையே கணைய அழற்சி என்று கூறுகிறார்கள்.

கணைய பாதிப்பினால் ஏற்படும் அறிகுறிகள் என்ன?

குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ரூபெல்லா ,அம்மை போன்ற வைரஸ் தொற்றுகளால் கணைய பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இவை கணையத்தை நேரடியாக தாக்குவதால் அதில் உள்ள பீட்டா செல்கள் முற்றிலுமாக அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு சர்க்கரையின் முதல் நிலை ஏற்படும். இதனால் எடை குறைப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல் ,அடிக்கடி பசி எடுத்தல் .அதிகமாக தாகம் எடுப்பது போன்றவை குழந்தைகளுக்கு உள்ள அறிகுறிகள். இதற்கு குழந்தைகளுக்கு போட வேண்டிய தடுப்பூசிகளை முறையாக போடுவது அவசியமானதாக இருக்கிறது.

குடிப்பழக்கம் அதிகம் உள்ளவர்களக்கு கணைய பாதிப்பு அதிகம் இருக்கிறது. அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வாந்தி ஏற்படுகிறது. கல்லீரலில் ஏற்படும் வீக்கம் காரணமாக கணையத்தில் கொழுப்பு செரிக்க முடியாமல் போகிறது. அதிக நாற்றத்துடன் கூடிய மலம் வெளியேறும். வயிற்றில் கடினமான வழியும், அடிக்கடி வாந்தியும் ஏற்படும்.

பெரியவர்களுக்கு முதலில் வயிற்றில் தொப்புளை சுற்றி அதிக வலி ஏற்படுகிறது. அதன்பின் வலியானது பின்புறமாக பரவுகிறது. குடிப்பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு கணைய புற்றுநோய் வருவதற்கும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

கணையத்தை சரியாக இயங்க வைக்கும் உணவுகள்

நம் உணவில் அதிக அளவு பூண்டினை சேர்த்துக் கொள்வதால் அதிலுள்ள அடிச்சேன் என்ற வேதிப்பொருள் இருப்பதால் இது கணைய கட்டிகள் வராமல் தடுக்கிறது.

பாலில் மஞ்சள் கலந்து குடிப்பதால் மஞ்சளில் உள்ள குர்குமின் என்ற வேதிப்பொருள் கல்லீரல் மற்றும் கணையத்தில் பாதிப்பு ஏற்படாமல் ஒரு கிருமிநாசினியாக செயல்படுகிறது.

தயிரில் இருக்கும் புரோபயாடிக் என்னும் நுண்ணுயிர்கள் கணையத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய பயன்படுகிறது. இந்த பிரச்சனை உள்ளவர்கள் தயிரை சிறிய வெங்காயத்துடன் சேர்த்து தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும்.

மேலும் படிக்க – கொரோனா வைரஸ் தொற்று நம்மைத் தாக்காமல் இருப்பதற்கு பயன்படுத்தப்படும் முகமூடியின் அவசியம்..!

கணைய பிரச்சனையை சரி செய்யும் மூலிகைகள் 

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் கோரைக் கிழங்கை எடுத்துக்கொண்டு 400 கிராம் தண்ணீரில் 5 ,6 கிழங்குகளை போட்டு கொதிக்க வைக்க வேண்டும். 400 கிராம் தண்ணீரானது 200 கிராம் வரும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். அதில் சிறிதளவு மிளகுத்தூள் சேர்த்துக்கொள்ளலாம். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 21 நாட்கள் குடித்து வந்தால் கணைய அழற்சி நோய் சரி செய்யப்படுகிறது.

துளசி மற்றும் அதன் விதைகளை பயன்படுத்தி தேனீர் அருந்தி குடிப்பதன் மூலமும் கணைய பிரச்சனைகள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன