மூலீகை சாம்பிராணி முக்கால வினையை போக்கும்

  • by

ஹெர்பல் என அழைக்கப்படும் மூலீகை சாம்பிராணி என்பது என்ன அதிலென்ன அப்படி இருக்கின்றது என  பலர் கேள்வி கேட்கின்றனர். குழந்தை பிறந்ததும் தாய் மற்றும் சேய்க்கு, குளித்து முடித்தபின் தலை துவட்ட இந்த சாம்பிராணி போடும் பழக்கம் இருந்தது. மூலீகை சாம்பிராணி  நீர்மைத் தன்மையை போக்கும். குளித்த முடித்தப்பின் செய்யும் மூலீகை சாம்பிராணி புகையானது நமது சுவாசத்தை சீராக்கும். மக்கள் நெருக்கம் சூழ்ந்த கடை வீதிகளில் மயில் வைத்து தூபம் போடுவார். அதன் தார்பரியம் இதுதான் மயில் வைத்து ஆதமாத்மாக வருடிக் கொடுக்கும் பொழுது உடல் மற்றும் மனதில் உள்ள கசடுகள் நீங்கும்.

ஆரோக்கியமாக இருக்கும். கடைகளில் நோய் தொற்று தடுக்க கல்லா பெட்டி மற்றும் மற்ற இடங்களில் அந்த காலத்தில் தூபம் அனுமதிப்பது வழக்காமாக கொண்டனர் மக்கள். 

இன்றும் சாம்பிராணி போட்டு சளி பிடிக்காமல்  வீட்டில் புகைப்பிடிப்பதுண்டு அதென்ன மூலீகை சாம்பிராணி என்ற கேள்விக்கு அந்தந்த வீட்டின் பாரம்பரியம் பதில் கூறும் சாம்பிராணி புகை பிடிக்க முக்கியமாக  தேங்காய் சிரட்டை கொண்டு நெருப்பு கறி உருவாக்குவார்கள். வேம்பு குச்சி, பசு மாட்டுச் சாண எரு, துளசி அல்லது நொச்சி இலைகள் மற்றும் கற்பூரவல்லி இலைகள் கொண்டு தூபம் போடுவார்கள் அத்துடன்  இதில் வீட்டிலுள்ள அனைத்து சிக்கல்களையும் இது போக்கும் 7 விதமான மூலீகைகள் கொண்டு உருவாக்கப்படுகின்றது. 

ஆன்மீக ரீதியாக வீட்டிற்கு இறை சக்தி கிடைக்கும்.  மாசுக்காற்றை அகற்றும். விசசந்துக்கள் வரவை அகற்றும் வெண் கடுகு, நாய் கடுகு, மருதாணி விதை ஆகியவற்றை 250 கிராம்  வீதம் எடுத்துக் கொள்ளவும். ,அருகம்புல் பொடி, வில்வப் பொடி, வேப்பிலை பொடி, குங்கிலியம் 50 கிராம் வீதம் இவை அனைத்தும் தனித்தனி மருத்துவ குணங்கள் கொண்டவை இவற்றை எல்லாம் பொடியாக ஒன்றாக கலக்கவும்  வீட்டில் தூபம் காட்டும் பொழுது அது நாம் சார்ந்த வீடுகள், வணிக வளாகங்களில் இருக்கும் எதிர்மறையான சக்தியை அகற்றும். இது உடலுக்கு நோய் தொற்றை அகற்றும் வீடு முழுவதும் உள்ள இடங்களில் இந்த மூலீகை வாசனையால் பூச்சிகள் அனைத்தும் வீட்டை விட்டு போக்கும். வீட்டில் பூச்சிகள் விச  ஜந்துக்கள் ஆகியவற்றை அகலச் செய்யும். வீட்டை தூய்மையாக வைத்துக் கொண்டு இருக்க இது உதவும். 

நோய் தொற்று குறைப்பது,  விசஜந்துக்களை அழிப்பது போன்ற நல் வேலைகள் அனைத்தும் இந்த புகையானது செய்யும் நம்முடைய நாசியில் உள்ள சளி   தொற்றையும் இது கரையச் செய்யும். இதன் நெடியானது கசப்பாக இருந்தாலும் இது ஒரு அருமருந்தாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  இது எளியவகை மூலீகை தூபப் பொடியாகும். இது போன்று 18 வகை மூலீகை வைத்து உருவாக்கப்படும் மூலீகை சாம்பிராணியில் இன்னும் சக்திகள் அதிகமுண்டு. 18 வகை மூலிகை சாம்பிராணி தயாரிக்கத் தேவையான பொருட்கள்

1 சாம்பிராணி, 2 விலாமிச்சை வேர், 3 தும்பை , 4 தேவதாறு,  5 அருகம்புல், 6 குங்கிலியம், 7 வேப்பிலை, 8 நொச்சி இலை, 9 வில்வ இலை,  10 வெண்கடுகு, 11 கருங்காலி, 12 நன்னாரி, 13 வெட்டிவேர் 14 நாய்க்கடுகு 15 ஆலங்குச்சி,  16 அரசங்குச்சி 17 நாவல் குச்சி, 18 மருதாணி விதை போன்ற அனைத்து மூலீகைகளை சம அளவு வீகிதம் எடுத்து அதனைப் பொடியாக்கி தூபம் இட்டு வரலாம்.  இந்த தூபம் போடும் முறையை செய்தால் கணபதி ஹோமம் செய்த பலன் பெறலாம் என்றும் கூறுவார்கள். 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன