தையல் மற்றும் எம்பிராய்டரியில் உச்சம் தொட வாருங்கள்!!!

  • by

கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்’’ என்பதற்கேற்ப தையல் மற்றும் எம்பிராய்டரியை கற்றுக்கொண்டு வாழ்வில் உயருங்கள்.

தையல் மற்றும் எம்பிராய்டரி-யாரெல்லாம் கற்கலாம்:

இயற்கையில் ஒருவர் அழகில்லாமல் இருந்தாலும், செயற்கையில் அவரை அழகுற செய்யும் இந்த தையல் மற்றும் எம்பிராய்டரி. தொழிலில் சிறந்தது தையற் தொழில், நேர்த்தியான உடையை, விதவிதமான  உடைகளை வாடிக்கையாளர்களுக்கு  ஏற்றாற்போல் உருவாக்கும் இது என்றும்  நிலைபெற்றிருக்கும் தொழில்.

தையல் கலையில் விருப்பமுள்ளவர்கள் சரியான மற்றும் திறமைமிக்க நிபுணர்களிடம் சேர்வது அவசியம் இல்லையென்றால் கற்றுக்கொள்பவர்கள் பெரிதாக ஜொலிப்பது கடினம், இந்த தளத்தில் உள்ள நிபுணர்கள் பல வருடங்கள் அனுபவம் பெற்றவர்கள். இவர்களிடம் கலந்தாலோசித்து ஆன்லைன் வகுப்பில் சேர்ந்தவர்கள் பலர் இன்று உயரிய இடத்தில் உள்ளனர்.

தையற்கலையும் நிபுணர் பத்மாவும்:

தையல் மற்றும் எம்பிராய்டரி துறை வளர்ச்சி அடைந்து  வரும் தற்போதைய  சூழ்நிலையில் தையல் இயந்திரத்தின் வளர்ச்சி, தையல் தொழிலில் முக்கியப்பங்கை  வகிக்கிறது. இதில் தையல் இயந்திரம் மிகவும் முக்கியமான தையல் சாதனம். பற்பல தையல் இயந்திரங்கள் இப்போது சந்தையில் கிடைக்கின்றன. இப்போதுள்ள தையல் இயந்திரத்தில் அதற்கென தனியான சிறப்பம்சங்களையும், பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. சாதாரண லாக் தையல் இயந்திரத்தை தொடங்கி, முன்னேறிய கணினி நுட்பங்களை உட்படுத்தும் எலக்ட்ரானிக் தையல் இயந்திரங்கள்  என பல வகைகள் உள்ளது.

அவை அனைத்திலும் வல்லமை பெற்றவர் நம் பத்மா பத்மா அவர்கள்  தையற்கலை மற்றும் எம்பிராய்டரியில் 15 வருடத்திற்கு  மேல்  அனுபவம் கொண்டவர், இவர் சமூகத்தில் அனைவரும் சுயமாக  சம்பாதித்து  தங்களின்  நிலையை உயர்த்த  தனக்கு தெரிந்த தையற்கலை மற்றும் எம்பிராய்டரியை  பிறருக்கும்  கற்றுக்கொடுத்து  அவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொண்டுவருகிறார். இவரின்  குடும்பத்தார், சொந்தங்கள் என தொடங்கி  இன்று பலரும் இவரிடம்  இந்த  தையற்கலை மற்றும்  எம்பிராய்டரியை கற்றுக்கொண்டு நல்ல நிலைமையில் உள்ளனர்.

மேலும் படிக்க: இந்திய நவீன ஆடைகள் சந்தை அதன் போக்கு…

ஊரடங்கிலும் தையல் மற்றும் எம்பிராய்டரி கற்கலாம்:

ஒருவர் நேரிடையாக வகுப்பிற்கு சென்று தையல் மற்றும் எம்பிராய்டரியை கற்பதை விட ஆன்லைனில் இந்த தளத்தை பயன்படுத்தி கற்பதால் பல பயன்கள் உள்ளது, நீங்கள்  போக்குவரத்திற்க்கோ அல்லது இதர செலவுகளை குறைக்கலாம், மேலும் இந்த  ஊரடங்கில் வீட்டிலிருந்தே பாதுகாப்பாக கற்றுக்கொள்ளலாம், வகுப்புகளை  நீங்கள்  ஆன்லைன் மூலம் கற்பதால் உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை  நீங்கள் தயக்கமின்றி  பத்மாவிடம் கேட்டு தெளிவு பெறலாம், மேலும் இதை உங்கள் மொபைல்  சாதனத்தில்  சேமித்து உங்களுக்கு தேவைப்படும்போது அல்லது எத்தனை நாட்கள் கழித்தும் பார்த்துக்கொள்ளலாம், மேலும் பல சிறப்பம்சங்கள் பத்மாவின் ஆன்லைன்  வகுப்பறையில் உங்களுக்காக காத்துக்கொண்டுள்ளது.    

 தையல்  மற்றும் எம்பிராய்டரியில் பல நிலைகளை நன்கு அறிந்துவைத்துள்ள பத்மா அவர்கள் திருமணமானவர்கள், வேலைதேடுபவர்கள் கல்லூரியில் படிக்கும்  மாணவர்கள் என இந்த துறையில் விருப்பமுள்ள அனைவருக்குமான உடைகளை துல்லியமாகவும் அதில் உள்ள நுணுக்கங்களை எளிமையான முறைகளில்  கற்றுக்கொடுப்பதில் சிறந்தவர். இதனால் பத்மா அவர்கள் மிக பிரபலமானவர். இப்போதுள்ள சூழ்நிலையை வீட்டிலிருக்கும் பலர் ஆன்லைன்  மூலம் அவரிடம்  வகுப்பில் சேர்ந்து இந்த ஊரடங்கை பயனுள்ளதாக மாற்றிக்கொள்ள உங்களுக்கு  ஓர் அறிய  வாய்ப்பு.   

மேலும் படிக்க: ஜீன்ஸ் பேண்டில் இருக்கும் வகைகள்…!!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன