மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்..!

  • by
symptoms of stress and anxiety

இளம் பருவத்தில் நாம் எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொண்டு, சந்தோஷமாக வாழ்ந்து வரும் நபராக இருந்திருப்போம். ஆனால் நாம் எப்போது வாழ்க்கையின் உண்மையான பகுதிக்குள் செல்கிறோமோ அப்போதே நம்மையறியாமல் ஏராளமான மன அழுத்தப் பிரச்சினை நமக்கும் தொற்றிக் கொள்கிறது. ஆனால் ஒரு சிலர் எல்லாவற்றையும் எளிமையாக எடுத்துக் கொள்ளும் குணம் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு மன அழுத்தப் பிரச்சினை என்னவென்றே தெரியாமல் அதனுடன் வாழ்ந்து வருவார்கள். அப்படி உங்களுக்குள் மன அழுத்தம் இருப்பதை கண்டறிவதற்கான 7 அறிகுறிகளை இங்கே காணலாம்.

நம்பிக்கை இல்லாமை

யார் என்ன சொன்னாலும் அதை சந்தேகிப்பது, அந்த செயலில் நம்பிக்கை வைக்காமல் அவமதிப்பது. அதேபோல் இதுபோன்ற நிலையில் மற்றவர்கள் மேல் இருக்கும் நம்பிக்கை குறைத்து, உங்கள் மேல் உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை முழுமையாக அழித்து விடும். உங்கள் வாழ்க்கையில் நிகழும் அனைத்தையும் சந்தேகித்து தவறான புரிதலுடன் உங்கள் வாழ்க்கையை வாழ்வீர்கள்.

மன அழுத்தத்தை குறைத்து நிம்மதியான வாழ்க்கையை வாழ எங்கள் spark.live நிபுணரிடம் இருந்து ஆலோசனை பெறுங்கள்.

ஆர்வம் குறையும்

எந்த ஒரு செயலிலும் ஈடுபாடு காட்டாமல் வாழ்வீர்கள், அதைத் தவிர்த்து எல்லாவற்றிலும் உங்களுக்குள் ஆர்வம் குறைவாக இருக்கும். படிப்பது முதல் வேலை செய்வது வரை எல்லாமே கடமைக்கு என்றே செய்வீர்கள். உங்களுக்கான தனிப்பட்ட பொழுதுபோக்குகள் அல்லது உரையாடுவதற்கான சிறந்த நண்பர்கள் போன்ற எதுவும் இல்லாமல் வாழ்ந்து வந்தால் நிச்சயம் அது மன அழுத்தத்தில் தான் முடியும்.

தூக்கம் அதிகரிக்கும்

சாதாரணமாக தூங்குவதை விட அதிக அளவில் தூங்கினாலோ அல்லது எல்லா நேரத்திலும் தூங்கி வழிந்தால் நீங்கள் மன பிரச்சனையில் தவித்து வருகிறார்கள் என்பதற்கான அர்த்தமாகும். தூக்கம் என்பது மன நிம்மதியை அளிக்கக்கூடியது, இதனால் இயல்பு வாழ்க்கையை வாழ முடியாமல் தவிப்பவர்களுக்கு தூக்கம் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருக்கும். வாழ்வதைவிட உறங்குவதே சிறந்தது என்ற எண்ணத்தை உங்களுக்குள் உருவாக்கி அழுத்தத்தை அதிகரிக்கும்.

மேலும் படிக்க – மனோதத்துவ நிபுணரை பார்ப்பதற்கான 7 அறிகுறிகள்..!

கவலை

உங்கள் செயல்களில் ஆர்வம் இல்லாமல் எந்த ஒரு பொறுப்புகளிலும் ஈடுபடமுடியாமல் கவலையுடன் வாழ்ந்தால் நீங்கள் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும். கவலை என்பது எல்லோருக்கும் வரும் ஆனால் காரணம் இல்லாமல் நாம் ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம் என்ற கேள்விகளுடன் கவலைகள் தோன்றினால் அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறிவிடும்.

உடல் எடை அதிகரிக்கும்

மேலே குறிப்பிட்டுள்ள எல்லாம் அறிகுறிகளும் இருந்தாலே உங்கள் உடல் எடை தானாக அதிகரிக்கும். நீங்கள் எடுத்துக்கொண்ட உணவுகளினால் ஒரு சில பாதிப்புகள் உண்டாகுமே தவிர அதிகளவிலான கவலை உங்கள் இருதயம், மூளை போன்ற பகுதிகளை அதிகமாக பாதிக்கும். இதைத் தவிர்த்து ரத்த அழுத்தம் பிரச்சினைகளும் உண்டாகும். எனவே நீங்கள் அதிக அளவிலான மன அழுத்தத்தில் இருந்தால் உடனே அதற்கேற்ற மருத்துவரை சந்தியுங்கள்.

மேலும் படிக்க – இசையால் எதையும் குணப்படுத்தலாம்..!

கோபம் அதிகரிக்கும்

நாம் எப்போதும் நம்முடைய அனுபவங்களை நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும், அப்படி நண்பர்கள் இல்லை என்றாலும் வீட்டில் உள்ளவர்களிடம் பகிரவேண்டும். இதை செய்யாமல் ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் எரிச்சல் அடைவது, கோபமடைவது, மற்றவர்கள் மனதை புண்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். இது போன்ற உணர்வு உங்களுக்கு அடிக்கடி தோன்றினால் நீங்கள் மன அழுத்தத்தின் கடைசி நிலையில் இருக்கிறீர்கள் என்பதற்கான அர்த்தம்.

மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தாலும் அது மற்றொரு அறிகுறிக்கான பாலத்தை உண்டாக்கும். இது படிப்படியாக சென்று உங்கள் மன அழுத்தத்தை அதிகரித்து ஏராளமான உடல் பிரச்சினை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக சிறந்த நிபுணர்களுடைய ஆலோசனை பெற்றிடுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன