தலைவர் மாஸ் பொங்கல் சும்மா தெறிக்கவிட்றாறு !

  • by

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின்  அனல் பறக்கும் தெரிக்கவிடும் பர்மாபென்ஸ்கள்  ரசிகர்கள் கொண்டாட்டத்தில் கொடுத்த தகவல்கள் ஸ்பார்ககை ஸ்பார்க் ஆக்கியது. 

இதுவரை நாம் பார்த்த ரஜினிக்குள் அன்பு, காதல்,  கதைக்கு ஏற்ற வேகம், அமைதி, பாந்தம் இருந்தது, தர்பாரில்  பிரம்மாண்டமான ரஜினியை பார்த்தோம் இது வேற மாறி ஃபீலு, இவரு ஸ்பீடு ரஜினி 70 வயதுல ஒரு ஸ்டார் இப்படி நடிக்க முடியுமா,  புரூஸ்லீமாறி இவரோட பைட் சீக்குவன்ஸ் இருக்கு. 

ரசிகர்களின் பார்வையில் கதை: 

தர்பார் கதையில் ஒரு பிரம்மாண்டம் இல்லை, அதிக மெசேஜ்கள் இல்லை ஆனால் ரஜினியிசம் மட்டும் முழுக்க முழுக்க இருக்கின்றது. முதல்பாதி முழுசா ரஜினியின் வேகம் இருக்கும். இரண்டாம் பாதி ரஜினியை காலா, கபாலியில் பார்த்த பர்மான்ஸ்கள் இருந்தது.  

படம் முழுக்க ரஜினிதான் இருந்தார்.  ஒட்டுமொத்தமாக படத்தை ரஜியே ஆக்கிரமித்திருந்தார். சாதரண கதைதான் சரியாக  தலைவர் வைத்து செய்துள்ளார். 

மேலும் படிக்க – ரஜினிகாந்தின் வாழ்க்கையை மாற்றியவர்கள்..!

தியேட்டரில் தர்பார்: 

தியேட்டரில் கூட்டங்கள் அலைமோதியது எங்கபார்த்தாலும் தலைவா !, தலைவா கோசங்கள், பால் அபிசேகம் சொல்ல வேண்டியது இல்லை.  சூப்பர் ஸ்டாரின் குடும்பத்தினர், திரை உலகினர் அனைவரும் கொண்டாடினார்கள். 

தெரிக்கவிடும் டைலாக்குக்கள்!

தெரிக்கவிடும் டைலாக்குகள் ரஜினியின் இன்னொரு பாட்சாவாக ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.  

அஸிஸ்டெண்ட் கமிசனர்  போலீஸ் மும்பை மற்றும் சும்மா கிழி கிழி….டயலாக்குகள் எங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. 

இந்த வருடம் பொங்கலில்  தலைவர் நம்மை பொங்க வைத்துவிட்டார்.  காட்சிகளில் நக்கல் கலந்து , காமெடியை அள்ளிவீசி  யோகிபாவை ஓவர் டேக் செய்துவிட்டார். படம் முழுவதும் ரஜினியிசம் அள்ளித் தெளித்து விடப்பட்டிருந்தது.

நாந்தாண்டா இனிமேலு 

வந்து நின்னா தர்பார்

நாந்தாண்ட லீடு போன்ற   பாடல் வரிகள் பட்டாசு கிளப்புகின்றன. 

மகளாக நிவேதா தாமஸ்:

மகளாக நிவேதா தாமஸ் தனக்கு கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.  செதுக்கியது போல் அதிகம், குறைவு இல்லாமல் கெத்தாக இருந்தது. இரண்டாம் பாதியில் இவரை வைத்து தலைவர் உணர்ச்சி பூர்வமாக செயல்படுகின்றார். 

அழகுபதுமையாக நயன்தாரா இருந்தார். அவருக்கு இந்தப் படத்தில் பெரிய  அளவில் சொல்லிக் கொள்ளும்படி ஒன்றும் இல்லை. 

மேலும் படிக்க – திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்து வந்த பாதை..!

அனிருத் இசையில் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி ஜொலித்துள்ளார். 

இயக்குநர் ஏ. ஆர் முருகதாஸ் ரஜினுக்கு என்று மெசேஜ்  எதுவும் கொடுக்காமல் ரஜினி ரசிகராக மாறி கலக்கியுள்ளார். ‘எழுபது  வயதில் என்ன ஒரு வேகம் இவருக்கு’ என அனைத்து தரப்பு ரசிகர்களும் மெச்சியுள்ளனர். படையப்பா படத்தில் அப்பாஸ் சொல்லுவார் பாருங்க, உங்களுக்கு வயசாகல அந்த டயலாக்கு  நினைவுக்கு வந்தது, ரஜினியின் ஒவ்வொரு அசைவும் நம்மை நெகிழ வைத்தது என்று ரசிகர்கள் தங்கள் ரசிப்புத் தன்மையை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள். ரஜினியின் வயதுக்கு மீறிய அளவில் பைட் சீக்குவன்ஸ்களின் பர்மான்ஸ்கள் இருந்தது என தெரிவித்தனர். 

சந்தோஷ் அவர்களின் சினிமாட்டோகிராபி சிறப்பாக இருந்தது.   சுனில் செட்டி வில்லனாக வருகின்றார். அவருக்கும் இந்தப் படத்தில் சொல்லிகொள்ளும்படி  இல்லை ஆனால் தலைவருடன் நடிக்க வேண்டுமெனில் வில்லனாக வந்தாலும் சிறப்புதான். வலைதளங்களில் ஊடகங்களில் எல்லாம் ரஜினியின் தர்பார் ரிவியூக்கள் அனல் பறக்கின்றனர்.  700 திரையரங்குகளில் தார்பார் ஓடுகின்றது. தெறி இயக்குநர் அட்லீ சும்மா கிழி கிழின்னு கிழிச்சுட்டார் என தலைவர் படத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார். 

ஊடகங்கள் மற்றும் வலையொலி கிரியேட்டர்கள், டிஜிட்டல் மீடியா தமிழ்  குழுக்கள் என அனைத்து படைப்புலகங்களும் இன்று தர்பாரை உற்று நோக்கி அவருக்கு வாழ்த்துக்கள் மற்று திரைவிமர்சனங்களை முன் வைத்துள்ளனர். 

மேலும் படிக்க – சாதரண கண்டெக்டர் சிவாஜிராவ், சூப்பர் ஸ்டாரன சரித்திர வரலாறு

ஸ்பார்கை பொருத்தவரை ரசிகர்களிடம் கேட்டு பெற்ற கருத்துக்கள் பதிந்துள்ளோம். சும்மா செம மாஸ் பண்ணிட்டார் தலைவர் என, ஸ்கீரிங்கள் அதிரும் அளவிற்கு தலைவா தலைவா என ரசிகர்களின் ஆரவாரம் வின்னை முட்டியது. இவரை  இனி யாராலும் அசைக்க முடியாது அவ்ளோ ஜோசா தலைவர் இருக்காரு என்றபடி கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. 

எது எப்படியோ நமக்கு பொங்கலுக்கு போக ஒரு நல்ல படம் கிடைத்துவிட்டது. அதுவும் ரஜினியோட  தர்பார்ன்னா இன்னும் சிறப்புதான் என பண்டிகையுடன் குடும்பங்கள் தர்பார் கொண்டாட்டத்திற்கு தயராகிவிட்டன. காணும் பொங்கலுக்கு கண்கொள்ளா காட்சியாக தர்பார் இருக்கப்  போகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன