கோடைக் காலங்களில் நாம் எந்த விதமான ஆடைகளை அணியலாம்..!

  • by
Summer Dress Collection And Benefits

கோடைக்காலம் நெருங்கியுள்ள நிலையில் எல்லோரும் வெயிலின் தாக்கத்தினால் மிகப்பெரிய அவஸ்தைக்குள்ளாவார்கள். இதைத் தடுப்பதற்கு நாம் ஒரு சில ஆடைகளை அணிந்து கோடை காலத்தை நம்மால் கடந்து வர முடியும். எனவே இந்த வெப்பங்கள் சூழ்ந்துள்ள நிலையில் நாம் நம் உடலுக்கு ஏற்றார்போல் ஆடைகளை அணிய வேண்டும். அதை இந்த பதிவில் காணலாம்.

மெளிர்ந்த ஆடையை பயன்படுத்தலாம்

பஞ்சுகலினால் செய்யப்பட்ட மெலிந்த ஆடையை கோடைகாலங்களில் அதிகமாக பயன்படுத்தலாம். பெண்கள் மேலே கைகள் இல்லாத பனியன் ஆடைகளை பயன்படுத்தலாம். அதேபோல் கீழே அவர்கள் ட்ராக் பேண்ட் அணியலாம். ஆண்கள் கோடைக்காலத்தில் அரைக்கால் பேண்ட் மற்றும் மெலிந்த சட்டைகளை பயன்படுத்தலாம்.

மேலும் படிக்க – ஆண்களுக்கான எளிமையான தோற்றம் எல்லோரையும் கவரலாம்..!

குழந்தைகளுக்கான ஆடைகள்

கோடைக்காலங்களில் முடிந்தவரை குழந்தைகளுக்கு மேலே போடப்படும் ஆடைகளை தவிருங்கள். ஏனென்றால் அவர்கள் உடல் உஷ்ணத்தை அவர்களால் சொல்ல முடியாது. சிறிது வளர்ந்த குழந்தையாக இருந்தால் மிக மெல்லிய ஆடை அவர்களுக்கு அணியுங்கள். ஏனென்றால் கோடை காலங்களில் அவர்களுக்கு ஒரு விதமான பிரச்சினைகள் ஏற்படும் அதை வெளியே சொல்ல முடியாமல் தவிக்கும் அவர்கள் செய்யவேண்டியதெல்லாம் அவர்களுக்கான சரியான ஆடைகளை அணிவது.

அலுவலக ஆடைகள்

ஒரு சிலர் கோடை காலமாக இருந்தாலும் அலுவலகத்திற்கு அடர்த்தியான ஆடைகளை அணிகிறார்கள். இதன் மூலமாக மிக விரைவில் அவர்களுக்கு வியர்வை ஏற்பட்டு அவர்கள் தோற்றத்தை பெரிதாக பாதிப்படைய செய்யும். எனவே இதுபோன்ற சூழ்நிலைகளில் நாம் அலுவலகத்துக்கு என்று அழகான தோற்றம் உடைய மெல்லிய ஆடைகளை அணியலாம். பெண்கள் பீகட், அல்லது யுகட்  போன்றவைகளை அணியலாம். ஆண்கள் வெள்ளை நிறத்தில் சட்டை மற்றும் அதற்கு எதிர் நிறமுள்ள பேண்ட் அணியலாமா.

விளையாட்டு ஆடைகள்

கோடைக்காலங்களில் காற்று அதிகமாக சென்றுவரும் ஆடைகளை அணிந்து இருக்க வேண்டும். அதிலும் நீங்கள் விளையாடுவதற்கு சென்றால் முடிந்தவரை விளையாட்டு ஆடைகளை அணியுங்கள். மற்ற ஆடைகளை அணிந்து விளையாடுவதன் மூலம் உங்கள் உடலில் காயங்கள் ஏற்படும்.

இரவு ஆடைகள்

இரவில் உறங்குவதற்கு என்றே ஒரு சில ஆடைகளை பயன்படுத்துவோம். அதே ஆடைகளை தரமானதாகவும், அதிக வண்ணங்கள் கொண்டதாகவும் வாங்கி அதை பகல் நேரத்திலும் பயன்படுத்தலாம். எல்லாவற்றிற்கும் மேலாக உங்களின் உடல்நிலை தான் மிக அவசியம், அதற்காக எந்த தயக்கமும் இல்லாமல் கோடைகாலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணியுங்கள்.

ஆடைகளுக்கான சலுகைகள்

மிகப் பெரிய நிறுவனங்களான டர்பி, டிரன்ஸ், மேக்ஸ், லீவிஸ் போன்றவைகள் 40 முதல் 60 சதம் வரை தள்ளுபடி அளித்துள்ளார்கள். எனவே கோடை காலங்களில் இது போன்ற தரமான கடைகளுக்கு சென்று உங்களுக்கு கிடைக்கும் ஆடைகளை தள்ளுபடி விலையில் பெற்றிடுங்கள்.

மேலும் படிக்க – ஆண்கள் பயன்படுத்தும் சட்டைகளின் வகைகள்..!

ரங்கநாதன் தெரு

டி நகர் ரங்கநாதன் தெருக்களிலும் கோடைகாலத்திற்கான பல விதமான ஆடைகள் வந்து இறங்கியுள்ளது. தெருவோரங்களில் கிடைக்கும் கோடைகாலத்திற்கு ஏற்ற ஆடைகளை மிக மலிவான விலையில் நீங்கள் வாங்கி பயன்பெறலாம்.

குளிர் காலத்தை காட்டிலும் கோடை காலத்தில் தான் நம்முடைய உடல் அதிக அளவில் பாதிப்படைகிறது. எனவே இதை தடுப்பதற்கு நம்முடைய உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக நாம் அணியும் ஆடைகள் தரமானதாகவும், காற்று சுழற்சி உள்ளதாகவும் இருக்க வேண்டும். இதை சரியாக தேர்ந்தெடுத்து உங்கள் கோடை காலத்தை நோயில்லாத காலமாக மாற்றுங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன