நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்க்கு வேப்பிலை காப்பி.!

Sugar Patient Can Use Neem In Their Diet

வேப்ப இலையின் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் உள்ளது. இதை அறிந்து தான் நம் முன்னோர்கள் இது கடவுளின் மரம் என்கிறார்கள். கடவுள் எப்படி மக்களின் கஷ்டங்களை போக்குகிறாரோ அதேபோல்தான் வேப்பிலை மக்களுக்கு ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை தீர்க்கிறது. நமக்கு ஏற்படும் எந்த ஒரு வியாதியாக இருந்தாலும் வேப்ப இலை அதை தீர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் இதை உட்கொண்டால் நம் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சி அடைய செய்கிறது.

இதற்காகதான் நம் வீட்டில் வேப்ப இலை தோரணத்தை கட்டுகிறோம் மற்றும் வேப்பிலை தண்ணீரை வீடு முழுக்க தெளிக்கிறோம். இவைகளின் மூலம் வீட்டைச் சுற்றி உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து நம் ஆரோக்கியமாக இருக்க முடியுகிறது.

மேலும் படிக்க – சொட்டை விழாமல் இருப்பதற்கு இதை செய்யுங்கள்..!

வேப்ப இலை உட்கொள்வதினால் நமது உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும். நீரிழிவு நோய் என்பது 35 வயதைக் கடந்த அனைவருக்கும் வருகிறது, ஏன் பிறந்த குழந்தைக்குக் கூட இந்த பிரச்சனை ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கு இவர்கள் ஏகப்பட்ட மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்கிறார்கள். இதைத் தவிர்த்து இரண்டாம் நிலை நீரிழிவு நோயாளிகள் இன்சுலின் மூலமாக தங்கள் வாழ்க்கையை கழிக்கின்றார்கள். இது அனைத்திற்கும் தீர்வாக நாம் வேப்ப இலையை பயன்படுத்தலாம்.

வேப்ப இலை மட்டுமல்லாமல் இதன் வேர், பழம், காம்பு, பட்டை என அனைத்திலும் மருத்துவ குணங்கள் ஏராளமாக உள்ளது. இதை நாம் உட்கொள்வதினால் நமது உடலில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கிறது. இதுமட்டுமல்லாமல் சர்க்கரை உற்பத்தி செய்யும் செயலை இது தடுக்கிறது.

நாட்டு மருத்துவங்களில் வேப்ப இலையை இதுபோன்ற பிரச்சனைகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஆனால் நீங்கள் நவீன மருத்துவத்தில் சிகிச்சை பெற்று வந்தால் இதை எடுத்துக் கொள்வதற்கு முன்பு உங்கள் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். இல்லையெனில் இரண்டு விதமான மருந்துகளும் ஒன்று சேர்ந்து உங்களை ஏதாவது பிரச்சினைக்குள் தள்ளிவிடும்.

மேலும் படிக்க – ஆண்களின் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள்..!

பல ஆய்வின்படி வேப்ப இலையை உட்கொள்வதன் மூலம் நம் உடலில் இருக்கும் குளுக்கோசை குறைகிறது என்பது தெரியவந்துள்ளது. ஆனால் நவீன மருத்துவர்கள் இதை மறுத்து வருகிறார்கள். எதுவாக இருந்தாலும் நீங்கள் சர்க்கரை நோய் இல்லாதவர்கள் என்றால் வேப்பிலையைக் கொண்டு காபி அருந்துங்கள். இது உங்கள் வாழ்நாளில் சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

வேப்ப இலை காப்பியை செய்வதற்கு நமக்கு 20 வேப்ப இலைகள் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் தேவை. சாதாரண தேனீர் போடுவதைப் போல் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பின்பு அதில் வேப்ப இலைகளை போடவேண்டும் சிறிது நேரம் கழித்து தண்ணீர் பச்சை நிறமாக மாறி இருக்கும். அதை வடிகட்டி காலையும், மாலைஉம் என இரண்டு வேளையும் இதை குடித்தீர்கள் என்றால் உங்களுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருக்காது.

இத்தகைய சக்தி வாய்ந்த வேப்ப இலையை நாம் அதிகளவில் அலட்சியமாகவே பார்க்கிறோம். நம் வீட்டைச் சுற்றி பல இடங்களில் இந்த மரங்கள் இருந்தாலும் அதை வளர்ப்பதற்கான செயல்களை நாம் செய்வதில்லை. எனவே இதன் மருத்துவ குணங்களை அறிந்து இனிமேலாவது இதையும் வளர்த்து உங்கள் உடல் ஆரோக்கியத்தை வளருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன