இமயமலையை சுற்றி உள்ள மர்மமான பகுதிகள் !!!

  • by
strange places around himalayas

இமயமலை என்றாலே நம் நினைவுக்கு வருபவர் ரஜினிகாந்த் அவர்கள் தான். ஆனால் இமயமலை ஒரு மர்மம் நிறைந்த பகுதியாகவே அறியப்படுகிறது. இந்த இமயமலை அதற்குள் பல ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் அடக்கி வைத்திருக்கிறது. புவியியல் அட்வென்சர்ஸ் சுற்றுலா என பலதரப்பட்ட மக்களையும் தன்பால் கவர்ந்து இழுக்கிறது. இமயமலையில் இருக்கும் சில மர்மமான இடங்களைப் பற்றி பார்ப்போம்.

குரு டோங்மர் ஏரி

இந்த ஏரி கஞ்சன் சுங்கா மலைத் தொடரில் ஒரு  பீடபூமியில் அமைந்துள்ளது. எந்த காலத்தில் சென்றாலும் இந்த ஏரியில் உறைந்து போகாமல் இருக்கும் ஒரு சிறிய இடத்தை நம்மால் பார்க்க முடியும். குளிர் காலம் ஆனாலும் வெயில் காலம் ஆனாலும் இங்கு ஒரு பகுதி தனித்து காணப்படும். அந்த இடம் புகழ்பெற்ற பௌத்த குருவான பத்மசம்பவா அவர்கள், ஏரியல் ஒரு பகுதியை தொட்டு மக்கள் பயன் பெறுவதற்காக அந்த இடம் வறண்டு போகாமலும், உறையாமலும் இருக்க செய்ததாக வரலாறு கூறுகிறது. இப்படித்தான் அங்கிருக்கும் மக்களாலும் இந்த நிகழ்வு நம்பப்படுகிறது. கடும் குளிர்காலத்தில் கூட ஒரு பகுதி இந்த இடத்தில்  உறையாமல் இருக்கிறது. 

மேலும் படிக்க – 21 நாட்களை நாம் எப்படி கழிக்க வேண்டும்..!

ரூப்குண்ட் ஏரி

ரூப்குண்ட் ஏரி உத்தரகண்ட் மாநிலத்தில் மிகவும் ஈர்க்கக்கூடிய ஒரு அழகான மலைப் பிரதேசமாகும். இங்கு பிரமிக்க கூடிய வகையில் பல சிறப்பு அம்சங்கள் இருந்தாலும் மற்றொரு மர்மமான விஷயம் இங்கு வரும் சுற்றுலா வாசிகளை கவர்கிறது. இதன் மர்மம் என்னவென்றால் அங்கு இருக்கும் ஏரியின் அருகில் உள்ள பாறைகளில் மனித மண்டை ஓடுகள் சிதறிக் கிடக்கின்றன. மனிதர்களின் எலும்புக்கூடுகள் மற்றும் எலும்புகளும் இங்கே காணப்படுகின்றன. இந்த மலையில் பயணம் செய்தவர்களால் இது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த எலும்புக்கூடுகள் இரண்டாம் உலகப் போரின் போது பங்கேற்ற வீரர்களின் எலும்புக்கூடாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட ஆலங்கட்டி மழையால் இவர்கள் தாக்கப்பட்டு இறந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இன்னும்சிலரால்  இவை ராஜ குடும்பத்தைச் சேர்ந்த எழும்புக்கூடுகள் என்று கணிக்கப் படுகின்றன. இந்த ராஜ குடும்பத்தினர் இவ்வாறு இறக்க வேண்டும் என்று ஒரு தெய்வத்தால் சபிக்கப்பட்டதால் இப்படி இறந்தார்கள் என்று அங்கு இருக்கும் மக்கள் கூறுகின்றனர். எனவேதான் அவர்கள் இவ்வாறு இறந்து இருக்கிறார்கள் என்கிறது வட்டாரம். இங்கு சொல்லப்படும் அனைத்துமே கதைகளாகவே காணப்படுகின்றன. இவற்றை நிரூபிப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் இந்த ரூப்குண்ட் ஏரி பல மர்மங்களை உள்ளடக்கி காணப்படுகிறது.

மேலும் படிக்க – கிரகணங்கள் வாழ்க்கையில் முக்கியப் பங்கு வகிக்கின்றது!

பாரோ தக்சங் அல்லது புலியின் கூடு

பூட்டானின் பயணத்தின்போது செங்குத்தான மலை முகட்டில் உள்ள பல பௌத்த மடாலயங்ளை  உங்களால் பார்க்க முடியும். இந்த பௌத்த மடத்தில் மையத்தில் ஒரு குகை காணப்படுகிறது. இங்குதான் பௌத்தப் குருவான பத்ம சம்பவா மூன்று ஆண்டுகள் 3 மாதங்கள் மூன்று வாரங்கள் மூன்று நாட்கள் மற்றும் மூன்று மணி நேரம் தியானித்ததாகக் கூறப்படுகிறது. இங்குள்ள மர்மமான பகுதி இதுவேயாகும். இந்த கடினமான மலையேற்றத்திற்கு குரு பத்ம சம்பவா தீபத்திலிருந்து புலியின் மீது பறந்து வந்த இந்த இடத்தை அடைந்ததாக கூறுகின்றனர். அதனாலேயே இந்த இடத்திற்கு புலியின் கூடு என்ற பெயர் வந்ததாக நம்பப்படுகிறது. இந்த இடத்தை நாம் பார்த்தாலும் இது உண்மை என்றே தோன்றும். இந்த இடம் 1692 ஆம் ஆண்டில் தியான மண்டபமாக அமைக்கப்பட்டது. அன்றைய காலத்தில் இப்படி செய்து இருப்பது ஒரு அதிசயம்  தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன