ஃபேஸ் மாஸ்க் அணியும் போது கவனிக்க வேண்டியவை..!

  • by
stpes you should follow while wearing face mask

வாகனத்தில் செல்பவர்கள் தங்களது உயிரைக் காப்பாற்றுவதற்காக எப்படி தலைக்கவசம் அணிகிறார்களே அதேபோல் உலகத்தில் இருக்கும் அனைத்து மக்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக முக கவசம் அணிந்து வாழ்கிறார்கள். கொரோனா வைரஸ் உங்களை தாக்காமல் இருக்க வேண்டுமென்றால் நீங்கள் ஒரு சில வழிகளை பின்தொடர்ந்தாக வேண்டும். அதில் முதல் வழி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கைகழுவ வேண்டும், இரண்டாவது வழி அனைவரும் முகக் கவசம் கட்டாயமாக அணிய வேண்டும். மூன்றாவது விதி தான் சமூக இடைவெளி. இதை யார் ஒருவர் சரியாக கடைபிடிக்கிறார்களே அவர்களை வைரஸ் தாக்காது.

ஃபேஸ் மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க் என்று அழைக்கப்படும் முக கவசம் நம் சுவாசத்தை தூய்மையாக்கி கொரோனா போன்ற கொடிய வைரஸ்களை சுவாசப்பாதைகளுக்குள் நுழையாமல் பாதுகாக்கிறது. எனவே காற்றில் பறக்கக்கூடிய கொரோனா வைரஸ் என்பது காற்றில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்குமேல் உயிர்வாழும். இதனால் நாம் சாதாரணமாக வெளியே செல்லும் போது நாம் சுவாசிக்கும் காற்றின் மூலமாக இந்த வைரஸ் தொற்று நம்மை தாக்கலாம். இதைத் தடுப்பதற்கு அனைவரும் மிகப் பாதுகாப்பான முறையில் ஃபேஸ் மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.

மேலும் படிக்க – எலும்பிச்சை சாற்றில் நிறைந்துள்ள சத்துக்கள்!

நாம் செய்யும் தவறு

கொரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருப்பதற்கு ஃபேஸ் மாஸ்க்கை அணிந்தால் மட்டும் போதாது. பொதுவாகவே நாம ஃபேஸ் மாஸ்க் அணிவதற்கு மிக முக்கியமான காரணம் அந்த வைரஸ் நாம் சுவாசிக்கக் கூடாது என்பதற்கு. ஆனால் அந்தக் கிருமியானது நாம் அணிந்திருக்கும் முகமூடி மேல் படிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் ஒரு சிலர் அதை கருத்தில் கொள்ளாமல் தங்கள் கைகளால் அந்த முகமூடியை கழட்டுகிறார்கள், இதனால் அந்த வைரஸ் தொற்றானது உங்கள் கைகளில் குடி பெயர்கிறது. அதை தொடர்ந்து நாம் கழிவறைகளை பயன்படுத்தும் போது நமது கைகள் எங்கெல்லாம் வைக்கிறோமோ அங்கெல்லாம் அந்த வைரஸ் தொற்று பரவுகிறது. எனவே இந்த வைரஸை முழுமையாக அழிப்பதற்கு நாம் தெளிவாக இருக்க வேண்டும்.

அணியும் முறை

நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால் சுத்தமாக இருக்கும் முகக் கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து கொள்ளுங்கள். வெளியே சுற்றும் சமயங்களில் உங்கள் செல்போனை பயன்படுத்துவதை முழுமையாக தவிர்த்திடுங்கள். பிறகு அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் வாங்கி வீடு திரும்பும் பொழுது உங்கள் கையுறைகளை மேல் பகுதியை தொட்டவாறு கழட்ட வேண்டும். பிறகு இரண்டாவது கையை உள் பக்கம் ஒரு விரலை நுழைத்து அதை கழட்ட வேண்டும். அதேபோல் உங்கள் முக கவசத்தை உள்புறமாக விரலை நுழைத்து மிகப் பாதுகாப்பான முறையில் கழட்டி அனைத்தையும் வெந்நீரில் போடவேண்டும். பிறகு சாணிடேசன் அல்லது சோப்புகளை கொண்டு 30 வினாடிகள் வரை உங்கள் கைகளை நன்கு அலச வேண்டும்.

மேலும் படிக்க – வெந்தயமும் மனித வாழ்வின் ஆரோக்கியமும் அவசியம்!

மறுசுழற்சி முறை

நாம் பயன்படுத்தக்கூடிய முகமூடியில் ஏராளமான வகையில் உள்ளது, ஆனால் கொரோனா வைரஸை குறைப்பதற்கு தமிழகத்தில் நாம் மூன்று வகையான முகக் கவசங்களை பயன்படுத்தி வருகிறோம். அதில் முதல் வகைதான் எண் 95, இது மருத்துவர்கள் செவிலியர்கள் மற்றும் எப்போதும் சமுதாயத்தில் வேலைகளைச் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள் ஏனென்றால் இதன் விலை சற்று அதிகம் அதேபோல் அதன் பாதுகாப்பும் அதிகமாக இருக்கும். அதை தவிர்த்து இதை நீண்ட நேரம் நாம் பயன்படுத்தலாம். இரண்டாம் வகை நாம் அணிய பயன்படுத்தும் துணிகளால் செய்யப்பட்ட முகமுடி. இதை ஒருமுறை பயன்படுத்திய பின்பு வெண்ணீரில் போட்டு அதன் மேல் உள்ள அனைத்து கிருமிகளையும் அழந்த பிறகே மீண்டும் உபயோகப்படுத்த வேண்டும். எனவே இதுபோன்ற முகமூடிகளை வைத்திருப்பவர்கள் இரண்டுக்கும் மேற்பட்ட முகமூடிகளை வாங்கவேண்டும். மூன்றாவது வகை அறுவை சிகிச்சை செய்பவர்கள் அணியும் முகமூடிகள் இது ஒரு முறை பயன்படுத்திய பிறகு தூக்கி எறிய வேண்டும். ஒருவரின் சுவாசத்தை பொறுத்து இந்த முகமூடியின் ஆயுட்காலம் தீர்மானிக்கப்படுகின்றது. அதாவது இந்த முகமூடியை அணிந்து ஒரு மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரத்திற்குள் தூக்கி எறிய வேண்டும்.

முகமூடி அணியும் போது நாம் செய்யும் ஒரு சில தவறுகள் மூலமாகக் கூட இந்த வைரஸ் தொற்று நம்மை பாதிக்கலாம். எனவே உங்கள் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் உங்களைச் சுற்றி உள்ளவர்களுக்கு இதனால் ஏற்படும் பாதிப்புகளை தெளிவாக தெரிய படுத்துங்கள். இதன் மூலமாக கொரோனா வைரஸ் உங்களைச் சுற்றி உள்ளவரை பாதிக்காமல் தடுக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன