முட்டை சாப்பிட்டு உடல் எடையை குறைக்க முடியுமா..?

steps to follow on how to eat egg to reduce you rbelly fat

புரதங்கள் அதிகமாக உள்ள உணவுகளில் முட்டையின் பங்கு மிக அதிகம் இதை தினமும் சாப்பிட வேண்டும் என்று அரசாங்கமே நமக்கு அறிவுறுத்துகிறது அதுமட்டுமல்லாமல் சிறுவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு அவர்கள் மதிய உணவுகளில் இவற்றை சேர்த்துக்கொள்ள அறிவுறுத்துகிறார்கள். இப்படி எல்லோராலும் சாப்பிட தூண்டப்படும் முட்டையில் அப்படி என்னதான் இருக்கிறது.

முட்டையில் கலோரிகளின் மிக குறைவாக இருப்பதினால் இது நமது உடல் எடை அதிகரிக்காமல் அதை குறைக்க செய்கிறது. இத்தகைய ஆரோக்கியமான முட்டையை நாம் சரியான நேரத்தில் சரியாக சமைத்து சாப்பிட்டால் நமது உடல் பல மடங்கு ஆரோக்கியமடையும்.

மேலும் படிக்க – சருமப் பொலிவு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் எலுமிச்சை பழம்.!

வெளிநாடுகளில் அதிகமாக காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்வார்கள் அதனுடன் இரண்டு பிரட் துண்டுகளை வைத்து சாப்பிட்டு தங்களது காலை உணவை முடித்து விடுவார்கள். நம் ஊர்களிலும் ஒரு சிலர் முட்டை ஆம்லெட், முட்டை சாண்ட்விச், வேகவைத்த முட்டை என விதவிதமாக சாப்பிடுகிறார்கள். ஒரு சிலரோ எண்ணெயில் போட்டு பொரித்து சாப்பிடுகிறார்கள். இப்பிடி சாப்பிடும் போது எண்ணெயில் கலோரிகள் அதிகமாக இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது இதற்காக முட்டையை தேங்காய் எண்ணையை கொண்டு சமைத்து சாப்பிட்டால் உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

மதிய நேரங்களில் முட்டையை நாம் வேக வைத்து சாப்பிடலாம் அல்லது காய்கறிகளை சேர்த்து முட்டை பொடிமாஸ் செய்து பிரட் துண்டுகளை வைத்து சாப்பிடலாம். இப்படி நம் வாரத்திற்கு 3 முதல் 4 நாட்கள் வரை இதை சாப்பிட்டால் நமது உடலில் மிகப்பெரிய மாற்றத்தை நம்மால் உணர முடியும். அதனால் மற்ற நாட்களில் நாம் முடிந்தவரை கொழுப்புகள் குறைந்த கலோரிகள் இல்லாத உணவுகளை உட்கொள்ளுவது நல்லது அதிலும் கடலை மாவைக் கொண்டு செய்யப்படும் உணவுகளை சமைத்து சாப்பிட்டால் நல்லது.

மேலும் படிக்க – தயிர் சாதம் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நடக்குமா?

ஒரு நாளைக்கு நாம் மூன்று முட்டைகள் வரை சாப்பிடலாம் இதை நாம் ஆரோக்கியமான பச்சைக் காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் நம் உடலில் கொழுப்புகள் குறைந்து ஆற்றலை இது அதிகரிக்கிறது. அதைத் தவிர்த்து இதில் இயற்கையாகவே கொழுப்புகள் அதிகமாக இருப்பதினால் உங்கள் உடலுக்குத் தேவையான சக்தியை இந்த உணவு தருகிறது. எனவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இது போன்ற டயட்டை பின்தொடருங்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன