முகத்தில் எண்ணெய் வழிவதை குறைக்கும் வழிகள்..!

  • by
steps to control oily skin

சருமம் என்பது மென்மையாகவும் அழகாகவும் நம்முடைய உடல் நலத்தை பாதுகாப்பதற்காக இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் இரண்டு வகையான சரும பிரச்சனைகள் இருக்கின்றன. ஒன்று வறண்ட சருமம் மற்றொன்று எண்ணெய் சருமம். வறண்ட சருமத்தை ஒப்பிடுகையில் எண்ணெய் சருமம் நமக்கு பல பிரச்சினைகளை உண்டாகிறது. அதிலிருந்து எப்படி தீர்வு காணலாம் என்பதை பார்க்கலாம்.

சோப்பை பயன்படுத்தாதீர்கள்

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் தங்கள் முகத்தை அடிக்கடி கழுவிக் கொண்டே இருக்கவேண்டும். ஆனால் இதற்காக நீங்கள் எந்தவொரு சோப்புகளையும் பயன்படுத்தாதீர்கள். அதற்கு பதிலாக கடலை மாவை முகத்தில் தேய்த்து முகத்தைக் கழுவினால் சிறப்பாக இருக்கும்.

மேலும் படிக்க – சிறிய மேக்கப்பிற்க்கான அறிவுரைகள்..!

சோள மாவு மற்றும் தயிர்

முகத்தைக் கழுவதற்கு நாம் மோர் பயன்படுத்தலாம். பின்பு சோள மாவுடன் தயிர் கலந்து முகம் முழுக்கத் தேய்த்து சிறிது நேரம் ஊறவைத்து முகத்தை கழுவினால் உங்கள் முகத்தில் உண்டான எண்ணெய் அனைத்தும் விலகும்.

புதினா இலைகள்

புதினா இலைகளை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் கொண்டு உங்கள் முகத்தை மெதுவாகத் துடைத்தால் முகத்தில் உள்ள எண்ணெய் விலகும்.

வெள்ளரிக்காய் மற்றும் தயிர்

வெள்ளரிக்காயை நன்கு துருவிக் கொண்டு அதை தயிரில் கலந்து முகம் முழுக்கத் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமாக எண்ணெய்த்தன்மை குறைந்து முகத்தில் உள்ள அழுக்குகளும் விலகும்.

கற்றாழை மற்றும் ஐஸ் கட்டி

கற்றாழை ஜெல்லில் இயற்கையாகவே நமது சருமத்தை அழகூட்டும் தன்மைகள் அதிகமாக உள்ளது எனவே கற்றாழை ஜெல்லை முகம் முழுக்கத் தடவி குளிர்ந்த நீரில் கழுவினால் எண்ணெய் தன்மை குறையும். அதே போல் ஐஸ் கட்டிகளை எடுத்து முகத்தில் மெதுவாக மசாஜ் செய்வதினால் எண்ணெய் தன்மை அதிகமாக குறையும்.

தக்காளி மற்றும் தேன்

தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக கலந்து நம்முடைய முகம் முழுக்கத் தேய்க்க வேண்டும், அதை 15 நிமிடங்கள் ஊற வைத்து பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகத்தில் உள்ள எண்ணெய் விலகும்.

மேலும் படிக்க – மணப்பெண்களே உங்களுக்கான பிரத்தியேக டிப்ஸ்.!

எலுமிச்சை மற்றும் முட்டை

எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் திராட்சை சாறு இவை மூன்றையும் ஒன்றாகக் கலந்து உங்கள் முகம் முழுக்க தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்த பிறகு கழுவி உங்கள் முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தை காணலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை வழிகளை கொண்டு உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெய் தன்மையை நம்மால் குறைக்க முடியும். இதை தொடர்ந்து செய்வதன் மூலமாக நிரந்தரமான மற்றும் அழகான சருமம் உங்களுக்கு கிடைக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன