ஆண்களின் உதடுகளை பராமரிக்கும் வழிகள்.!

steps and tips for men to follow to take care of their lips

பெண்களை விட ஆண்களே அதிக அளவில் வெளியே சுற்றுகிறார்கள். இச்சமயங்களில் அவர்களின் சருமம் மற்றும் உதடுகள் அதிகமாக பாதிப்புக்குள்ளாகிறது. இவர்கள் குளிர் காலம், மழை காலம், கோடை காலம் என எல்லா காலங்களிலும் சுற்றுவதனால் இவர்கள் உடல் மற்றும் சருமங்கள் பெரிதளவில் பாதிப்புக்குள்ளாகிறது மற்ற அனைத்திற்கும் தீர்வு காணும் இவர்களை உதடை மட்டும் கண்டுகொள்வதில்லை இப்படி நம் உதடு வறட்சி அடைந்தாலோ அல்லது விரிசல் ஏதாவது ஏற்பட்டால் அதை சரி செய்வதற்கான எளிய வழிகளை பார்ப்போம்.

சரியான லிப் பாமை தேர்ந்தெடுக்க வேண்டும்

ஆண்கள் தங்கள் உதடை வறட்சியிலிருந்து மீட்டெடுப்பதற்காக அவர்கள் சரியான லிப் பாமை தேர்ந்தெடுக்கவேண்டும். இது அவர்களின் உதட்டின் ஆயில் மற்றும் தோற்றத்தை முற்றிலும் மாற்று கூடியதாக இருக்க வேண்டும். இப்போது இருக்கும் காலங்களில் ஏராளமாக வகைகள் உள்ளது, அதில் எது சிறந்தது என்று தேர்ந்தெடுத்து உங்கள் உதடுகள் மேல் தடவினால் நிச்சயம் உங்கள் உதடு வறட்சி அடையாமல் பளபளப்பாக எப்போதும் இருக்கும்.

லிப் பம் தவிர்த்து என்ன பயன்படுத்தலாம்

ஆண்கள் லிப் பாமை தவிர்த்து நாம் பயன்படுத்தும் சோப்புகள் அல்லது நம் முகத்திற்கு போடப்படும் க்ரீம்களை பயன்படுத்தி நமது உடலை எப்போதும் ஈரப்பதத்துடன் வைக்கலாம். இல்லையெனில் முகத்தை கழுவ பயன்படுத்தும் கிரீமை நாம் உதடின் மேல் தடவி தண்ணீரைக் கொண்டு சுத்தப்படுத்தலாம்.

மேலும் படிக்க – மகத்துவம் நிறைந்த மருத்துவ வெட்டி வேர்

இயற்கை முறைகள்

இயற்கையாகவே நம் உதடை வறட்சி அடையாமல் பார்த்துக் கொள்வதற்கு நாம் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை நம் உதடு மேல் தடவ வேண்டும். அதற்கு முன்பு இயற்கையான முறையில் எடுக்கப்பட்ட உப்பினை கொண்டு நன்கு தேய்க்க வேண்டும். இதை செய்வதன் மூலம் நம் உதட்டில் இருக்கும் இறந்த செல்களை அழிக்கிறது.

உதடுகளுக்கு தேவையானவை

ஆண்கள் தங்கள் உதட்டை பராமரிப்பதற்கு மிக முக்கியமான ஒன்று உதடு எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். இதற்காக நாம் க்ரீம்களைப் பயன்படுத்துவதை தவிர்த்து தேவைப்படும் நேரங்களில் தண்ணீர் குடித்தாலே போதும் இதை சரியாக செய்ய மறுப்பவர்களுக்கு தான் உதடு வறட்சி அடைந்து வெடிப்புகள் உண்டாகி நாம் லிப் பாம் தேர்ந்தெடுக்க வழிவகுக்கிறது.

எளிமையான வழியில்  உதடை பராமரிக்கலாம்

தேங்காய் பால் மற்றும் ரோஸ் நீரை ஒன்றாக கலந்து நம் உதடு மேல் தடவி பொலிவைப் பெறலாம் இதை எல்லாம் நாட்களிலும் காலையில் தடவுவதன் மூலம் நம் உதடு மென்மையாகவும் வறட்சியில் இருந்து உடனடியாக மீண்டு வரும்.

மேலும் படிக்க – கண்னக்குளி அழகி காதல் மொழி பேசும் தீபீகா

இயற்கை முறை

உதடுகளைப் பராமரிப்பதற்கு நாம் வைட்டமின்-ஈ அதிக அளவு உட்கொள்ள வேண்டும் இல்லையெனில் எலுமிச்சைச் சாறுடன் தர்பூசணி சாரை ஒன்று சேர்த்து கலந்து நம் உதட்டின் மேல் தடவி வந்தால் நிச்சயம் நமது உதடு மிகப் பொலிவாக மாறும்.

இவை அனைத்தையும் சரியாக பின்தொடர்ந்து ஆண்கள் தங்கள் உதட்டை பராமரித்துக் கொள்ளலாம் உங்களுக்கு என்ன தேவை என்பதை நன்கு உணர்ந்து அதற்கேற்ப வழிகளை தேர்ந்தெடுங்கள். இயற்கை வழி என்றால் அதையே பின் தொடருங்கள் இல்லையெனில் லிப் பாம் போன்ற பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தால் அதை சரியாக செய்யுங்கள் நிச்சயம் உங்கள் உதட்டில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் இருக்க முடியும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன