கொரோனா வைரஸின் தற்போதைய நிலை..!

  • by
status of corona virus til april 21,2020

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 24 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கொரோனா வைரஸினால் பாதிக்கப் பட்டுள்ளார்கள். அதில் ஒரு லட்சத்து 60 ஆயிரம் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்காவில் மட்டும் கிட்டதட்ட எட்டு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து, அதில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

இந்தியாவின் நிலை

இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸினால் கிட்டதட்ட 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதித்துள்ளார்கள். அதில் 3 ஆயிரத்து 757 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மிதமுள்ள 14,700 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்து 200 பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள், இதில் 220க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும் படிக்க – வெந்தயமும் மனித வாழ்வின் ஆரோக்கியமும் அவசியம்!

மற்ற மாநிலங்கள்

மகாராஷ்ட்ராவைத் தொடர்ந்து டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் அதிகமாக பாதித்துள்ளது. அதேபோல் இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1500 க்கு மேல் இருக்கிறது. அதேபோல் உயிர் இழுந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. டெல்லியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிப்படைந்து, 45 பேர் இறந்துள்ளார்கள். எனவே டெல்லி முதலமைச்சர் ஊரடங்கு தளர்வுகள் எதுவும் இல்லாமல் நீட்டிக்க முடிவு எடுத்தார்.

தமிழ்நாடு

தமிழ்நாட்டிள் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆரம்பத்தில் அதிகமாக இருந்தது. இதன் மூலமாக மாநிலவாரியாக இரண்டாம் இடத்தில் தமிழ்நாடு இருந்தது, தற்போது பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவதினால் தமிழ்நாடு இப்போது ஆறாம் இடத்தில் இருக்கிறது. இருந்தும் கிட்டத்தட்ட ஆயிரத்து 500 பேருக்கு மேல் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்றும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மருத்துவர் உட்பட கிட்டத்தட்ட 17 பேருக்கு மேல் தமிழகத்தில் உயிரிழந்துள்ளார்கள்.

மேலும் படிக்க – வியக்க வைக்கும் வசம்பின் பயன்கள்..!

சிகிச்சை முறைகள்

கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று தனிமைப்படுத்தியவர்களே அதிகமாக பாதித்து வருகிறார்கள். இவர்கள் எப்போது முழுமையாக தனிமைப்படுத்தும் காலத்தை கழிக்கிறார்களே அப்போதுதான் கொரோனா வைரஸின் மொத்த எண்ணிக்கையை நாம் முழுமையாக கணிக்க முடியும், அது வரை ஒவ்வொரு நாளும் இந்த வைரஸ் தொற்றினால் ஏற்படும் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கும். எனவே இதற்கு மாற்று மருந்து இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கவில்லை, மக்கள் இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். எனவே அவ்வப்போது அவர்களை சுத்தம் செய்து வைரஸ் பரவுவதை தடுக்க வேண்டும்.

உலகில் நிகழும் உயிர் இழப்புகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது மற்றும் இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையுன் குறைவாக இருக்கிறது. எனவே நாம்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சரியாக செய்ததினால் இதை ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளோம். எனவே மக்கள் அனைவரும் தங்களை தூய்மையாக பார்த்துக்கொண்டு கொரோனா வைரஸ் வளர்வதை தடுக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன