சரியான மனநிலை உங்களை உறுதியாக்கும்..!

  • by
stable mindset will make you more stronger

நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் நம் மனநிலை ஒரு நிலையாக இருக்க வேண்டும், அப்போதுதான் வேலைகள் சரியாக நிறைவடையும். நம்முடைய மனநிலை உறுதியாக இல்லாமல் பலவிதமான எண்ணங்களின் மேல் கவனம் சென்றால் நீங்கள் செய்யும் செயல் சரியானதாக இருக்காது. அதை தவிர்த்து அது உங்கள் வாழ்க்கையை எதிர் திசை நோக்கிக் கொண்டுசெல்லும்.

எண்ணங்களை உறுதியாக்குங்கள்

நீங்கள் எது செய்வதாக இருந்தாலும் உங்கள் எண்ணங்களை சரியாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் செயலின் முடிவு எப்படி இருக்க வேண்டும் என்பதை சிந்தித்து அதற்கேற்ப ஒரு செயலை செய்வது உங்களுக்கு நல்ல முடிவைத் தரும். எது நடந்தாலும் பரவாயில்லை என்ற போக்கில் ஒரு செயலை செய்தால் அது தவறாகவே முடியும். எனவே முடிவை முன்பே யோசித்து வைத்துக் கொண்டு அதற்கேற்ப செயல்படுங்கள்.

மேலும் படிக்க – கொரானாவை கொன்று குவிக்கும் இந்தியா!

நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள்

எப்போதும் நேர்மறை எண்ணத்தை அதிகப்படுத்துங்கள். எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தால் உங்கள் எண்ணத்தில் தெளிவு வேண்டும். அதற்கு உங்களுக்கு நேர்மறை எண்ணம் அதிகமாக இருக்க வேண்டும். எது நடந்தாலும் அது சரியாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி அந்த செயலை செய்யுங்கள். அதைத் தவிர்த்து இது தவறாக முடிந்தால் அனைத்தும் இழந்து விடுவோம் என்ற பயத்தில் இருந்தால் நிச்சயம் அந்த பயம் நிஜமாகும். பயணத்தை துரந்து நேர்மறை எண்ணத்துடன் உங்கள் செயலை செய்யுங்கள்.

பயத்தை போக்குங்கள்

ஏதாவது ஒரு செயலை தொடங்குவதற்கு முன் உங்களுக்கு பயம் ஏற்பட்டால் உடனே அந்த பயத்தைப் போக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையில் தோல்வி உருவாகுவதற்கு காரணம் பயம் தான். எனவே உங்கள் பயம் எதுவென்று அறிந்து அதைத் தொடர்ந்து செய்யுங்கள். இதன் மூலமாக உங்கள் செயல் வெற்றி அடையும்.

தன்னம்பிக்கையை அதிகரிக்கும்

உங்களை எப்போதும் சந்தேகக்காதீர்கள். நீங்கள் செய்யும் செயல் சரியாக செல்லும், அது சரியாக முடியும், இதனால் எல்லோருக்கும் பயன் கிடைக்கும் என்று தன்னம்பிக்கையுடன் இருங்கள். எவர் ஒருவறுடன் தன்னம்பிக்கை அதிகமாக இருக்கிறதோ அவரை தான் எல்லோரும் நம்புவார்கள் மற்றும் மதிப்பார்கள்.

உங்களுடன் பேசிக் கொள்ளுங்கள்

மோசமான சூழல்களில் நாம் தவறான முடிவுகளை எடுப்போம். எனவே அச்சமயங்களில் உங்களுடன் தனிமையில் பேசிக் கொள்ளுங்கள். அதேபோல் உடனடி முடிவுகளை எடுக்காமல் உங்களிடம் கலந்து யோசித்து சரியான முடிவை எடுங்கள். இதுபோன்ற தனிமையின் பேசுவதனால் பல பிரச்சனையிலிருந்து உங்களை பாதுகாக்க முடியும்.

மேலும் படிக்க – ஆரோக்கிய வாழ்க்கைக்கு உடற்பயிற்சி அவசியம்

கவனமாக இருங்கள்

யாரையும் முழுமையாக நம்பாதீர்கள், எப்போதும் உங்கள் செயல் மற்றும் உங்கள் எண்ணத்தில் கவனமாக இருங்கள். எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் அதை முழுமையாக நீங்களே எடுங்கள், யாரையும் சார்ந்து எடுக்காதீர்கள்.

இதை அனைத்தையும் சரியாக கடைபிடித்தால் உங்கள் மனநிலை வலுவடையும். இதன் மூலமாக உங்கள் செயல்கள் மற்றும் உங்கள் சிந்தனைகள் அனைத்தும் தெளிவாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக உங்களை எல்லோரும் மதித்து உங்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்வார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன