ஆயிரம் வருடம் பழமையான மற்றும் பள்ளிப்படுத்தப்பட்ட ஸ்ரீ இராமானுஜரின் உடல்.!

  • by
sri ramanujar's body was processed for 1000 years

இந்த தலைப்பே உங்களுக்கு ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். எகிப்தில் பதப்படுத்தப்படும் முறை இருந்தது நாம் அனைவரும் அறிந்ததே. எகிப்து நாட்டில் வாழும் மன்னர்கள் இறந்த பின்னர் அவர்கள் சொர்க்கத்திற்குச் சென்று பின்னர் திரும்பும் வகையில் அவர்களுக்கு அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் வேண்டும் என்பதற்காக, அவர்களது உடல் பதப்படுத்தி வைக்கப்படும் என்பது வரலாறு. 

அதேபோல் ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த ராமானுஜரின் உடலும் பதப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளது என்பது செய்தி. ஸ்ரீ ராமானுஜரைப் பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். 1017 ஆம் ஆண்டு ஸ்ரீ பெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் அவர்கள், வைணவத்தின் அருமை பெருமைகளை இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரப்பி தனது துறவறத்தை மேற்கொண்டார். வைணவம் சிறந்தது என்று மாற்று மதத்தினருடன் போராடி அவர்களை வைணவத்தில் ஈடுபட துணை புரிந்தார். இவர் பல வைணவ மடங்களை நிறுவி, அதற்கு ஆன்மீகத்தின் மீது பற்று கொண்ட நபர்களை மட தலைவராக நியமித்தார். அவர்கள் இல்லற வாழ்க்கையில் இருந்தாலும் ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பின் அவர்களை இவரது வழியில் சேர்த்துக் கொண்டார். பெருமாளை மனதார வேண்டி அவர் மீது நேர்மையான பக்தியை வைத்திருக்கும் அனைவரும் வைணவத்தவரே என்ற நம்பிக்கையை கொண்டார்.

மேலும் படிக்க – அதிகமான பணம் சம்பாதிக்க இதை பின்தொடருங்கள்..!

சைவத்தை தழுவிய சோழ மன்னனின் கோபத்தில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி, கர்நாடக மாநிலத்தில் மாண்டியா எனும் இடத்தில், மேல் கோட்டை என்று அழைக்கப்படும் திருநாராயணபுரம் என்ற ஊரில் அமைந்திருந்த திருநாராயணன் கோவிலுக்கு சென்று அங்கு 12 ஆண்டுகள் தங்கி சேவை செய்தார் என்று வரலாறு கூறுகிறது. இதுவே ராமானுஜருக்கு மிகவும் பிடித்த திருத்தலம் ஆகும். ஸ்ரீரங்கம் என்றும் அழைக்கப்படும் திருவரங்கத்தில் நிர்வாகத்தை நெறிப்படுத்திய வழியில் நடத்திய பெருமை ராமானுஜரை சேரும். 

இப்பொழுது முக்கியமாக நம் தலைப்பில் கூறிய தகவல்களைப் பற்றி பார்ப்போம்.

ராமானுஜர் தனது 120 ஆவது வயதில் இயற்கை எய்தினார் என்று வரலாறு கூறுகிறது.

அப்போதைய கால கட்டங்களில் வைஷ்ணவ துறவிகளின் உடல் எரிக்கவோ, புதைக்கவோ படவில்லை. மாறாக அவர்களது உடல் பதப்படுத்தப்பட்டு மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ராமானுஜரது திருமேனி ஐந்தாவது திருச்சுற்று எனப்படும் திருச்சுற்றில் வசந்த மண்டபத்தில் இறந்த பின் புதைக்கப் பட்டது என்று ஒரு வரலாறு உள்ளது. அதன் பின்னர் சில நாட்களிலேயே அவரது உடல் தானாக பூமியிலிருந்து வெளி வந்து பத்மாசன நிலையை அடைந்ததாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் அங்கு உள்ள சிலரது கருத்து என்னவென்றால் ராமானுஜரின் உடலையே சிலையாக மாற்றி வைத்திருக்கிறார்கள் என்றும், அதற்கு வருடம் தோறும் இருமுறை குங்குமப்பூ மற்றும் கற்பூர பூச்சு பூசப்படுகிறது என்றும் கூறிவருகின்றனர்.

ஸ்ரீரங்கத்தில் இவரது சந்நிதி உடையவர் சந்நிதி என்று அழைக்கப்படுகிறது. இங்கு சென்று ராமானுஜரின் உடலை எல்லோராலும் தரிசிக்க முடியும். நேரில் பார்ப்பதற்கு ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைப் போல காட்சியளிக்கும் ராமானுஜர், உயிரோடு இருக்கிறார் என்ற உணர்வு நமக்குள் ஏற்படும். அவரது கை நகங்களும், அதிலுள்ள ரோமங்களும் அதற்கு சான்று. இந்த ராமானுஜனின் திருமேனிக்கு வேறு எந்தவிதமான அபிஷேகமும் நடைபெறுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அபிஷேகத்தை செய்யும் சில குறிப்பிடுகையில், அந்த திருமேனியை தொடும்போது உண்மையான உடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படுவதாக கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க – வாழ்வில் யோகம் பெற யோகா செய்யுங்க

இவரது இறுதி ஊர்வலம் ஆரம்பித்த நேரத்தில் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் இருந்து ஒரு அசரீரி ஒலித்ததாகவும் வரலாறு கூறுகிறது. எனவே ராமானுஜரின் உடலை பள்ளி படுத்துதல் பெருமாளின் கட்டளையாகவே நினைத்து இச்செயல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் ராமானுஜரின் கண்கள் திறந்த நிலையில் இருக்கும். மேலும் கை, கால் விரல் நகங்களில் நான் ஏற்கனவே சொன்னது படி ரோமங்கள் இருப்பதையும் நீங்கள் காண முடியும். இவரது உடல் பச்சை கற்பூரம் மற்றும் குங்குமப்பூ ஆகியவற்றை நன்றாக குழைத்து சேர்ந்த கலவையினால் மூடப்பட்டுள்ளது.1137 ஆண்டு காலமான ராமானுஜரின் உடல் பல்வேறு திரவியங்கள் மற்றும் பூரணங்களால் பதப்படுத்தப்பட்டு பின்னர் பள்ளி படுத்தப்பட்டிருக்கிறது. 

இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இருப்பது என்றால் அது அதிசயம்தான். இவரது உடல் பதப் படுத்தப் பட்டிருக்கிறது என்பது நிச்சயம் நம்ப முடியாத ஒன்று. ஆனால் வரலாற்று நிகழ்வுகளை ஆராய்ந்து பார்த்தால் இது உண்மையாக இருக்கக் கூடும் என்று என்ன தோன்றுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன